“தலைக்கூத்தல்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

படத்தின் துவக்கத்தில் சமுத்திரக்கனியின் அப்பா கதிருக்கு வேலை செய்யும்போது எதிர்பாராதவிதமாக அடிபட்டு சுயநினைவிழந்து மரண படுக்கைக்கு செல்கிறார், அவரை காப்பாற்றுவதற்காக சமுத்திரக்கனி மிகவும் போராடுகிறார், அப்பாவிற்காக தான் செய்யும் கட்டுமான வேலையை விட்டுவிட்டு செக்யுரிட்டி வேலை செய்கிறார் சமுத்திரக்கனி.

 

நாள்கள் பல ஆனதும் சமுத்திரக்கனியின் மாமனார் தலைக்கூத்தல் முறைப்படி அவரை கொன்றுவிடலாம் என்கிறார், தலைக்கூத்தல் முறை என்பது உடம்பில் எண்ணெய் தேய்த்துவிட்டு பிறகு இளநீர் குடித்தால் சில மணி நேரத்திலேயே இறந்துவிடுவார்கள் இதுதான் அந்த தலைக்கூத்தல் முறை. ஆனால் சமுத்திரக்கனியோ அதனை மறுத்துவிட்டு அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார்,சமுத்திரக்கனி அவரின் அப்பாவின் உயிரை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதும், நாயகனின் அப்பா தன் உயிரை பிடித்து வைத்திருக்க காரணம் , தான் இளம் வயதில் காதலித்த பேச்சியை சாவதற்குள் எப்படியாவது பார்த்து விடவேண்டும் என்ற இவரின் கடைசி ஆசையும் நிறைவேறியதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…

படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். நேரடி ஒலிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இசை மிக சிறப்பு பாடல்கள் நன்றாக உள்ளது. குடும்ப உறவு மேன்மை, பாசம் – நேசம், இளைய வயதில் பசுமையான காதல். அப்பா – மகன் பாசம். முத்து – பேச்சி காதல்.

படம் பார்க்கும் அனைவரையும் காட்சிக்குள் இழுத்து செல்கிறது தலைகூத்தல் திரைப்படம்.

 

Cast:

 

Samuthrakani P (Pazhani),

Kathir (Muthu),

Vasundhara (Kalai),

Katha Nandi (Pechi),

Vaiyapuri (Muniyandi Kelavi),

‘Aadukalam’ Murugadoss (Vembu),

Suhasini Sanjeev (Dhanam) and others.

 

Crew:

 

Producer : S. Sashikanth

Banner : YNOT Studios

Director: Jayaprakash Radhakrishnan

DOP : Martin Donraj

Editor : Dani Charles

Music Director : Kannan Narayanan

Lyrics : Yugabharathi

Art Director : Michael

Costume Designer : Subhashree Karthik Vijay

PRO : Nikil Murukan

#thalaikoothalmoviereview #Thalaikoothal #thalaikoothal #thalaikoothalreview #samuthrakani #kathir #vasundhara

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author