“துரிதம்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ட்ரீம் ஃபோகஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக  திருவருள் ஜெகநாதன் தயாரிப்பில், சீனிவாசன் இயக்கத்தில், சண்டியர் ஜெகன் நாயகனாக நடிக்கும் படம் “துரிதம்”.

தனியார் நிறுவன ஒன்றில் வேலை பார்க்கும் நாயகி, தோழிகளுடன் தங்கி வருகிறார். நாயகியின் கேப் டிரைவராக நாயகன். நாயகனுக்கு நாயகி மீது ஒரு தலை காதல்.

சர்வாதிகார அப்பாவிடம் 6 மாதம் சென்னையில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு வந்துவிடுகிறேன் என சம்மதம் வாங்கி வந்த நாயகியிடம் காதலை சொல்ல தவிக்கும் நாயகன்.

தன் தோழிகள் போடும் இளமை ஆட்டத்தை ரசிக்கும் நாயகி. 6 மாத கெடு முடிகிறது. தீபாவளி அன்று ஊர் திரும்பு முனைப்புடன் நாயகி. இதனால் நாயகியிடம் காதலை சொல்ல முடியாமல் போகிறது.

சந்தர்ப்ப சூழ்நிலையால், தீபாவளி நேரத்தில், நாயகி ஈடனை, டூ வீலரின் மதுரையில் விட வேண்டிய நிலை நாயகனுக்கு. வழியில் வில்லனால் ஈடன் கடத்தப்படுகிறார்.

 

அவரைக் கண்டுபிடிக்க இவர் எடுக்கும் முயற்சி, இன்னொரு பக்கம் ஈடனை தேடி வரும் சர்வாதிகார தந்தை, ஈடனின் ஜொள்ளு விடும் அலுவலக அதிகாரி இறுதியில் அவர் மீட்கப்பட்டாரா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் அளித்து இருக்கிறார்கள்.

நாயகன் ஜெகன், ஏற்கெனவே சண்டியர் படத்தில், ஹீரோவாக நடித்து கவனத்தை ஈர்த்தவர். இதிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி மீது காதல் கொள்வது, அவர் கடத்தப்பட்டதும் பதறுவது.. பக்கத்துவீட்டுப் பையன் மாதிரி என்பார்கள்.. இவர் நம்ம வீட்டுப் பையனாகவே மனதில் பதிந்துவிடுகிறார்.

நாயகி ஈடன், மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர். துள்ளளான இளம் பெண்ணாக வந்து தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

ராமச்சந்திரன் (ராம்ஸ்) , பூ ராமு, ஏ.வெங்கடேஷ், பால சரவணன், நாயகியின் தோழிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

பரபரப்பான திரைப்படத்துக்கு ஏற்ற இசையை அளித்து உள்ளார். குறிப்பாக, ஹைவேயில் வாகனங்கள் பறக்கும் போது அந்த வேகத்தை இசையிலேயே வெளிப்படுத்தி விடுகிறார் இசையமைப்பாளர், நரேஷ். அதே போல பாடல்களும் சிறப்பு. ஒரு பாடலை பாடகி & நடிகை ஆண்ட்ரியா பாடியிருக்கிறார்.

 

வாசனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

 

வசனங்கள் இயல்பாக இருப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றன.

 

ஒரு கட்டையுடன் நாயகி நிற்க.. வில்லன் பதறுகிறார். அப்போது நாயகன், “பயப்படாதே.. உன்னை அடிக்க இல்லை.. அவங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக..” என்கிறார்.

“பலாத்காரம் பண்ணிட்டு இவ டிரஸ் ஆபாசமா இருந்துச்சுனு சொல்லுவாங்க” என்கிறார் நாயகியின் தோழி..

.படத்தின் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சீனிவாசன்.

கடத்தல், த்ரில் என்று இல்லாமல் போகிற போக்கில் சித்தர் சாமியார், லஞ்ச வாங்கும் போலீஸ், மேல் சாதி, கீழ் சாதி வெறி, ஆணாதிக்கம் என பல விசயங்களைத் தொட்டுச் சென்று இருக்கிறார்கள். அப்படி தொட்டுச் சென்ற ஒவ்வொரு விசயத்தையும் சிறப்பாகவே மனதில் படியும் படி சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பு.

நாயகன் சண்டியர் ஜெகன் தான் படத்தை தயாரித்து இருக்கிறார். அதற்காக ஜெயகனையும் பாராட்ட வேண்டும்.

பரபரப்பான த்ரில்லரை, மக்களுக்கு தேவையான கருத்துக்களோட சொல்லி இருக்கிறார்.

 

துரிதம் – நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

 

நடிகர்கள் ;

 

‘சண்டியர்’ ஜெகன் – மாரிமுத்து

ஈடன் – வானதி

ஏ.வெங்கடேஷ் – வானதி தந்தை

பாலசரவணன் – கரிகாலன்

பூ ராமு – மாஸ்டர்

ராமச்சந்திரன் (ராம்ஸ்) – வில்லன்

வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா – வானதி பிரண்ட்ஸ்

 

தொழில்நுட்ப கலைஞர்கள்

 

இயக்கம் ; சீனிவாசன்

இசை ; நரேஷ்

ஒளிப்பதிவு ; வாசன் & அன்பு டென்னிஸ்

படத்தொகுப்பு ; நாகூரான் & சரவணன்

ஆக்சன் ; மணி

தயாரிப்பு ; திருவருள் ஜெகநாதன்

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

#thurithammoviereview #thurithamreview #thurithammovie #thuritham #fdfs

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author