கிங் ஆஃப் கொத்தா திரைப்பட விமர்சனம் : கிங் ஆஃப் கொத்தா துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு புஷ்பா – KGF வரிசையில் ஒரு கெத்தான மாஸ் என்டர்டெய்னர்
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கிங் ஆஃப் கொத்தா. படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் உடன் ஷபீர், பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வேஃபேரர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். மக்கள் தொடர்பு : AIM
‘கிங் ஆஃப் கொத்தா” 1980களில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதை. இது ராஜு என்ற இளைஞன் பாதாள உலக மன்னனாக உயரும் கதையைச் சொல்கிறது. சிறு கால குண்டர் முதல் சக்திவாய்ந்த கேங்ஸ்டர் வரையிலான அவரது பயணத்தையும், வழியில் அவர் செய்யும் தியாகங்களையும் படம் பின்தொடர்கிறது. கண்ணன் பாய் ஆட்சி செய்யும் கொத்தாவுக்கு இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹசன் (பிரசன்னா) வருகையுடன் படம் தொடங்குகிறது.
குற்றத் தலைநகரமாக கருதப்படும் ‘கொத்தா’ என்ற நகரத்தில் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் ராஜு (துல்கர் சல்மான்) மற்றும் கண்ணன் (சபீர் கல்லரக்கல்). தன் நண்பர்களுடன் சேர்ந்து கொத்தா நகரத்தையே தன் கைக்குள் வைத்துக் கொண்டு ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருகிறார் ராஜு. இருப்பினும், மற்ற கும்பல்களை போலல்லாமல், இவர்களும் அவர்கள் கும்பலும் போதைப்பொருள் செய்யவோ அல்லது விற்கவோ ஈடுபடவோ மாட்டார்கள். ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும் என்பது போல, ராஜுவின் காதலியான தாராவின் (ஐஸ்வர்யா லக்ஷ்மி) நுழைவுக்கு பிறகு எதிரி ரஞ்சித் (செம்பன் வினோத்) ஏற்படுத்தும் சூழ்ச்சியால் நண்பனின் திடீர் துரோகத்திற்கு பிறகு அவர்களின் சகோதர உறவு முறிந்து விடுகிறது. ராஜு விரக்தியில் ஊரை விட்டு சென்று விடுகிறார். அதன் பிறகு கொத்தாவில் மிகப் பெரிய கேங்ஸ்டராக மாறி அட்டூழியம் செய்கிறார் கண்ணன். அவரது அராஜகங்களை பொறுக்க முடியாத இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹசன் (பிரசன்னா) உ.பி.யில் இருக்கும் ராஜுவை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கொத்தாவுக்கு வர வைக்க முயற்சிக்கிறார். கண்ணன் ராஜுக்கு செய்த துரோகம் என்ன? கண்ணனின் அட்டூழியங்கள் முடிவுக்கு வந்ததா? இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹசன் ராஜுவை மீண்டும் கொத்தாவுக்கு திரும்பி வர வைத்த திட்டம் கைகூடியதா? இந்த கேள்விகளுக்கு ‘கிங் ஆஃப் கொத்தா’ பதில் சொல்லும்.
துல்கர் சல்மானின் ஒன் மேன் ஷோ தான் கிங் ஆஃப் கொத்தா. ஆனால் கதை தொடங்கி 30 நிமிடங்களுக்குப் பிறகு துல்கர் நுழைகிறார். அதற்கேற்றார் போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக ஜொலிக்கும் துல்கர் தனது ராஜு கதாபாத்திரத்தில் தேவையான தீவிரத்தையும் ஆழத்தையும் வெளிப்படுத்தி சரளமான நடிப்பின் மூலம் படத்தை கெத்தா தாங்கி நிற்கிறார்.
கண்ணன் கதாபாத்திரத்தில் ஷபீர் கல்லரக்கல் ஒரு வலிமையான வில்லனாக சமமாக ஈர்க்கப்பட்டார்.

தாராவாக அழகான ஐஸ்வர்யா லக்ஷ்மியின் கெமிஸ்ட்ரி துல்கருடன் நன்றாக வேலை செய்கிறது.