தூநேரி திரைப்பட விமர்சனம்
பேய் படங்கள் என்றாலே பாலியல் காட்சிகளும், கோரமான காட்சிகளும் மிகுந்து இருக்கும்.
‘தூநேரி’ குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பேய் படம்.
தூநேரி திரைக்கதை நான்கு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக இடம் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களோடு பேய்கள் நடத்தும் அமானுஷ்ய விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் வசியப்படுத்தும்.
‘தூநேரி’ நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அழகிய மலை கிராமம்.
பகலில் பசுமையும் வளமையும் நிறைந்த காட்சிகளை காட்டி பரவசப்படுத்தும் தூநேரி, இரவிலே கொடூரமான துர்மரணங்களை நிகழ்த்தி அச்சுறுத்துகிறது.
‘தொடர் மரணங்கள் அனைத்தையும் நிகழ்த்துவது ஒரு பேய்’ என ஒட்டு மொத்த மக்களும் நம்பி நடுங்குகிறார்கள்.
ஒற்றைப்பேயின் ஆட்டத்துக்கு முடிவு கட்டப்படுகிறதா?
என்பதை விளக்கும் இறுதிக்காட்சி பார்வையாளர்களை விறுவிறுப்பின் உச்சத்துக்கு அழைத்துச்செல்லும்.
தூநேரி திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி ‘ஷேடோ லைட் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் சுனில் டிக்சன்.
சுனில் டிக்சன் அனிமேசன் கலையில் வித்தகர். சென்னை சில்க்ஸ், அருண் ஐஸ் கிரீம், போன்ற விளம்பரங்களும் இயக்கியுள்ளார்.
உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் குண்டின் டொரண்டினோ இப்படத்தில் இடம் பெற்ற அனிமேசன் காட்சிகளை படைப்பூக்கமாக கொண்டு உருவாக்கியுள்ளார். தனது படத்தை 30 நிமிடங்களுக்கு மேல் அனிமேசன் காட்சிகளால் வளப்படுத்தியுள்ளார்.
சதுரங்க வேட்டை, பாரிஜாதம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘நிவின் கார்த்திக்’ இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரியாக தூநேரி திரைப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்.
‘சார்பட்டா பரம்பரையில்’ ‘டாடி’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய ‘ஜான் விஜய்’ தூநேரி படத்தின் கதையின் நாயகனாக முக்கிய பங்காற்றியுள்ளார்.
தூநேரி படத்தின் திரைக்கதை கருப்பசாமி என்ற கதாபாத்திரத்தில் தொடங்கி முடிவுறுகிறது.
அத்தகைய வலு மிகுந்த பாத்திரத்தை தனது தோளில் சுமந்து வளப்படுத்தியுள்ளார் ஜான் விஜய்.
கதிகலங்க வைக்கும் கருப்பசாமியாகவும், கண் கலங்க வைக்கும் கருப்பசாமியாகவும் கூடு விட்டு கூடு பாய்ந்து அதிசயம் நிகழ்த்தியுள்ளார்.
பல மலையாளப்படங்களில் நடித்து புகழ் பெற்ற மியா ஶ்ரீ. தூநேரி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
படத்தில் இவர் போட்ட பேயாட்டங்கள் பார்வையாளர்களை ஆட்டம் காணச்செய்யும்.
மலைப்பிரதேசங்கள் அமானுஷ்யத்தை வரவழைப்பைதில் வல்லமை வாய்ந்தவை.
தூநேரி திரைப்படத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வாகமன், என நான்கு மலைப்பிரதேசங்கள் போட்டி போட்டு அமானுஷ்யத்தை வாரி வழங்குகின்றன.
இப்படம் அனைவரையும் கவரும். திரில்லர் பட விரும்பிகளுக்கு நல்ல விருந்து.
Name. Character Name
John Vijay. Karuppasamy
Nivin Kartik. Inspector Naveen
Miyasree. Maya
Maria charm Nila
Ashmita. Ashmi
Nakul Chutti
Abhijit. Chellakani
Sadvika. Riya
Santosh. Vishva
Manikandan. Vedachalam(Constable)
Krishna Kumar. Mandiravadi
Director, Story, Screenplay. Sunil Dixon
Cinematography. Kalesh and Allen
Art Director. Roopesh
Editor. Fidel Castro
Music Kalaiarasan