தெலுங்கு சினிமாவில் பிசியான தமிழ் ஹீரோ. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கிறேன். நடிகர் திரிகுன் என்கிற ஆதித்!

தெலுங்கு சினிமாவில் பிசியான தமிழ் ஹீரோ. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கிறேன். நடிகர் திரிகுன் என்கிற ஆதித்.

 

 

தமிழ் சினிமாவில் இனிது இனிது படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஆதித் , தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தவர் தெலுங்கு திரையுலகில் “கதா” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுதந்தன.

வரிசையாக படங்கள் தொடர்ந்து வந்ததில் ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார் ஆதித்.

 

தெலுங்கில்

இவர் நடித்த 24 கிஸ்ஸஸ், சிக்காடி காடிலோ சித்தகொதுடு, டியர் மேகா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன

 

தனது பெயரையும் திரிகுன் என மாற்றிவிட்டார்.

இவர் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் இவர் நடிக்கும் நான்கு படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

 

இந்நிலையில் தமிழில் முன்னணி இயக்குனர்கள் சிலர் படங்களிலும் நடிக்கிறார்.

 

தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றாலும் தமிழ் சினிமாதான் என் தாய்வீடு, தமிழ் இளைஞனாக தமிழ் சினிமாவில் நமக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ளவே எனக்கு விருப்பம்.

தற்பொழுது அது நிறைவேறும் விதமாக முன்னணி இயக்குனர்களோடு கைகோர்க்கிறேன். என்கிறார்.

 

இயக்குனர் ராம் கோபால்வர்மாவின் ‘கொண்டா’ ஜூன் 23ம் தேதி வெளியாகிறது, இந்த படம் திரிகுன் க்கு மிக முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

 

தமிழ் மற்றும் கன்னடப்படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். ஆதித் என்கிற திரிகுன்.

You May Also Like

More From Author