நடிகர் ஆதேஷ் பாலா கதை, வசனம் எழுதி நடித்திருக்கும் நகைச்சுவை குறும்படம் ” பொண்டாட்டி “

ஏகப்பட்ட ஆசையுடன் முதலிரவு அறையில் காத்திருக்கும் கணவன். தன்னுடைய புருஷனை அவருடைய அப்பாவை போல் நடிகனாக்கி பிரபலமாக ஆக்கவேண்டும் என்று ஆசைப்படும் மனைவி.

சாதாரணமாக வாழ ஆசைப்படும் கணவன். பிரபலத்தின் மனைவியாக ஆக வேண்டும் என துடிப்புடன் இருக்கும் மனைவி. இவர்களுக்குள் முதலிரவில் என்ன நடந்தது என்பதே கதை.

0_IMG-20190730-WA0429

தொழில்நுட்ப வளர்ச்சியின் துணையுடன் மறைந்த நடிகர் சிவராமனும், அவரது மகன் ஆதேஷ் பாலாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் குறும்படம்.

நாயகி சிவரஞ்சனி நடிப்பில் அசத்தியுள்ளார் பெரிய திரையில் பெரிய வலம் வருவார். நாயகனின் மாமியாராக வரும் வசந்தாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்த்துள்ளார்.

வசனம், காட்சிகள் கே. பாக்கியராஜை நிறையவே நினைவூட்டுகிறது. ஒரே அறையில் 4 கதாபாத்திரங்களை கொண்டு ரசிகர்களை தனது திரைக்கதையினால் கட்டி போட்டிருக்கிறார் இயக்குனர் பி.ஆர். விஜய்.

வசனத்திலும், தனது நடிப்பிலும் நகைச்சுவையில் சிறப்பாக கலக்கியிருக்கியிருக்கிறார் ஆதேஷ் பாலா.

ஒரே அறைக்குள், குறைந்த வெளிச்சத்தில் அழகான காட்சிகளை தனது மாறுபட்ட கோணத்தினால் பார்வைக்கு அருமையாக வழங்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் பிரபு.

14.52 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படத்தை விறுவிறுப்பாக நேரம் போவதே தெரியாமல் ரசிக்கும் படி தொகுத்த படத்தொகுப்பாளர் ரமேஷூக்கு பாராட்டுகள்.

படத்தின் வெற்றிக்கு மிக பொறுப்பு வகிக்கிறார் இசையமைப்பாளர் மோகன் ராம். பின்னனி இசையில் காட்சிகளுடன் பின்னியிருக்கிறார்.

அம்மா அப்பா புரொடக்ஷன்ஸ் சார்பாக திருமதி சுப்புலட்சுமி சிவராமன் இக்குறும்படம் திரைப்படமாக கூட எடுக்கலாம் நல்ல கரு. ஒரு பெண் நினைத்தால் தனது கணவனை மட்டுமல்ல இந்த உலகையே சிறந்த இடத்தில் கொண்டு சென்று நிற்க வைப்பாள் என்பதை கூறும் இக்குறும்படம் அனைவரையும் நிச்சயம் கவரும்

You May Also Like

More From Author