நடிகர் பிளாக் பாண்டி எழுதி இசையமைத்த கொரோனா விழிப்புணர்வு பாடல்!

நடிகர் பிளாக் பாண்டி எழுதி இசையமைத்த கொரோனா விழிப்புணர்வு பாடல்!

கடந்த 2020 பிப்ரவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் நம் மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா வைரஸால் பாதித்தவர்களை விட ஊரடங்கினால் உண்டான தொழில் முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம்.இதனை கருத்தில் கொண்டு
பிளாக் பாண்டி எழுதி இசையமைக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இணை இயக்குனராகவும் மேடை பாடகராகவும் அறியப்பட்ட ஆதவன் முதன்முறையாக இந்தப் பாடலை பாடி பின்னணி பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். சமூக விழிப்புணர்வுக்காக பிளாக் பாண்டியும் ஆதவனும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல் “இதயம் வலிக்கிறதே ” என்ற வரிகளுடன் தொடங்கி இருக்கிறது. கொரோனா விழிப்புணர்வுக்காக ஆதவன்-Konjam Nadinga Boss), பிளாக் பாண்டி ( S DAD STUDIO)
உதவும் மனிதம் அறக்கட்டளை (Udhavummanidham.org) மூலம் உருவாக்கப்பட்ட இந்தப் பாடலில் கொரோனா என்ற வார்த்தையே இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

இருபத்தி ஒரு வருடங்களாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் தென்னிந்திய
திரைப்பட துறையில் பணியாற்றி நடிகராக வலம் வரும்
” பிளாக் பாண்டி” இசை அமைப்பாளராக
கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பேரிடர் கால விழிப்புணர்வு பாடலை உருவாக்கினார்.
அப்பாடலைப் போலவே இந்தப் பாடலும் நம் ஒவ்வொருவருடைய மனதை வருடும் விதத்தில் உருவாக்கி உள்ளார்.இந்த பாடலை தன்னலம் பாராமல் இரவு பகலாக உழைத்து வரும் மருத்துவர்களுக்காகவும்
இப்பேரிடர் காலத்தில் பசியோடு தவித்து கொண்டு இருக்கும் ஏழை எளிய மக்களின் வலியையும் இத்தலைமுறையின் தற்போதைய நிலையையும் பிரதிபலிக்கும் வகையிலும் உருவாக்கி இருக்கிறார்.
இப்பாடலை
வெள்ளிக்கிழமை 04/09/2020 வெளியிட இருக்கிறார் பிளாக் பாண்டி.

You May Also Like

More From Author