யாழி ஃபிலிம்ஸ் சார்பாக விக்னேஷ் சுந்தரேசன், மனோஜ் லியோனல் ஜேசன் & நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா. இரஞ்சித் தயாரிப்பில் பா. இரஞ்சித் எழுத்து & இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “”நட்சத்திரம் நகர்கிறது””.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சர்பாட்டா பரம்பரை வெற்றிப் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கியிருக்கும் படம் “”நட்சத்திரம் நகர்கிறது””.
முதல் காட்சியே காளிதாஸ் ஜெயராம் – துஷாரா விஜயன் இருவரும் ஒரே அறையில் நெருக்கமாக இருக்கும் நேரம், அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக விலகுகிறார்கள்.
புதுச்சேரி (பாண்டிச்சேரி) நடிப்பு பயிற்சி பள்ளியில் புதியதாக வந்து சேர்கிறார் கலையரசன். அங்கு நடக்கும் பழக்க, வழக்கங்கள் அவர்க்கு புதிதாகவும், புதிராகவும் இருக்கிறது.
காளிதாஸ் ஜெயராமை பிரிந்த துஷாரா விஜயன் – ஹரி கிருஷ்ணனுடன் நெருங்கி பழகுகிறார். காளிதாஸ் ஜெயராமனும் – வெளிநாட்டு பெண்ணுடன் நெருங்கி பழகுகிறார்.
நிச்சயம் ஆன நிலையில் கலையரசன் தன் வருங்கால மனைவி வின்சு ரேச்சல் சாம் மீது மிகவும் அதிகாரமும், சந்தேகமும் பட இந்த காலத்து பெண் உடனடியாக கலையரசனை வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு தனி ஆகிறாள்.
இந்நிலையில் கலையரசனுக்கு – துஷாரா விஜயன் மீது காதல் வருகிறது.
நடிப்பு பயிற்சி பள்ளியில் புதிய நாடகம் ஒன்று காதலை மையப்படுத்தி ஒத்திகை நடக்கிறது
இப்படி பல கோணங்களில் பயணிக்கும் கதைக்களம் ஒரே நேர்க்கோட்டில் எப்படி இணைகிறது என்பதே “”நட்சத்திரம் நகர்கிறது””.
பா. இரஞ்சித் தன் அனுபவ இயக்கத்திலும், எழுத்திலும் நட்சத்திரமாக ஜொலிக்கிறார். மற்ற இயக்குநர்கள் தொட தயங்கும் களத்தை தைரியமாக எடுத்து வெற்றிப் பெற்றுள்ளார்.
காதல் என்பது இருவரின் உணர்வின் வெளிப்பாடு மட்டும் அல்ல இந்த சமூகத்தின் அரசியல், ஜாதி ஆணவம் என மட்டும் அல்லாமல் ஓரின சேர்க்கை, மாற்று பாலின உணர்வு புரிதல் என இப்படத்தில் கலந்துள்ளார். உணவு கலாச்சாரமும் இதில் விட்டு வைக்கவில்லை.
மேல் ஜாதி, கீழ் ஜாதி வகுப்பு பேதம், ஆணவக்கொலை, இசையமைப்பாளர் இளையராஜா என பல விஷயம் இப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
நடிப்பில் கலையரசன் முதன்மையிடம் பிடிக்கிறார். தனித்துவ கதாப்பாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் கலையரசன். துஷாரா விஜயன் மிக சிறந்த நடிப்பு நிச்சயம் திரையுலகில் இவருக்கு தனி இடம் உண்டு. காளிதாஸ் ஜெயராம் தன் காட்சிகளில் செட்டில்ட் ஆக நடித்துள்ளார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் வந்த படங்களில் எல்லா கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படத்திலும் அப்படியே. அனைவரும் சிறப்பாக தங்களது கதாபாத்திரமாகவே உணர்ந்து நடித்துள்ளனர்.
டென்மாவின் இசையில் பாடல்கள் மிக சிறப்பு வேறு ரகம். பின்ணணி இசை அட்டகாசம்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் கலை அமைப்பு மிக சிறப்பு.
சர்வதேச திரைப்பட விழாவில் பல வெற்றிகளை குவிக்க போகும் படம் “”நட்சத்திரம் நகர்கிறது””. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும். பல விருதுகளை வாங்கி குவிக்கும்.
இன்றைய நிலையில், ஜாதி, மதம், பாலின அடையாளம் கடந்து முன்னேறி வரும் காலத்தில் இப்படம் சற்றே பின்னோக்கி பார்க்கிறது என்பது வருத்தப்பட செய்கிறது.
உலக இசை மேதை இளையராஜாவையும், அவரது இசையையும் உலகமே கொண்டாடுகிறது. தன் சுய லாபத்திற்காக இயக்குனர் இவரை இப்படி உபயோகப்படுத்தியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
உலக படங்களில் சாதாரண ஒன்றாக பார்க்க படம். இந்திய படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இப்படம் மாறுபட்ட படமே.
படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்க வேண்டும். இடைவேளை வரை பார்த்ததே தொடர்ச்சியாக இரண்டு படங்களை கண்ட அயற்சியை உண்டாக்கி விடுகிறது. பெண் சுதந்திரம் முக்கியம் அதற்கென ஒரு வரைமுறை உண்டு அதை மீறி உள்ளது இப்படம். பாலின மீறிய காதல் மிஞ்சியதால் காமம் மேலோங்கி நிற்கிறது.
இனிவரும் காலத்தில் கொஞ்சம் அனைத்து பிரிவினருக்கும் ஏற்ப படத்தை இயக்குநர் வழஙக வேண்டும்.
நடிகர்கள் :-
கலையரசன் – அர்ஜூன்
காளிதாஸ் ஜெயராம் – இனியன்
துசாரா விஜயன் – ரெனே
ஹரிகிருஷ்ணன் – யஸ்வந்திர
வினோத் – சேகர்
ஞானபிரசாத் – அய்யாதுரை
சுபத்ரா ராபர்ட் – கற்பகம்
சபீர் கல்லாரக்கல் – சகஸ் ரட்சகன்
ரெஜின் ரோஸ் – சுபீர்
தாமு – ஜோயல்
ஷெரின் செலின் மேத்யூ – சில்வியா
வின்சு ரேச்சல் சாம் – ரோஷினி
மனிஷா டைட் – மெடிலின்
அர்ஜூன் பிரபாகரன் – பிரவீன்
உதயசூர்யா – தரு
ஸ்டீபன்ராஜ் – மரு
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
ஒளிப்பதிவு – கிஷோர் குமார்
படத்தொகுப்பு – செல்வா R.K
இசையமைப்பாளர் – டென்மா
கலை இயக்குனர் – L. ஜெயரகு
நடனம் – சாண்டி
சண்டைப்பயிற்சி – “ஸ்டன்னர்” சாம்
பாடல்கள் – உமாதேவி, அறிவு
உடைகள் – அனிதா, ஏகாம்பரம்
தயாரிப்பு
யாழி பிலிம்ஸ் – விக்னேஷ் சுந்தரேசன்.
மனோஜ் லியோனல் ஜேசன். பா.இரஞ்சித்.
மதிஒளி ச ராஜா