“நான் கடவுள் இல்லை” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

சமுத்திரக்கனி போலீசாக இருக்கும் போது பல கொலை செய்து வந்த (பருத்தி வீரன் சித்தப்பு) சரவணனை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சரவணன், தன்னை கைது செய்த சமுத்திரக்கனியையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்.

சி.ஐ.டி. அதிகாரியாக இருக்கும் நாயகன் சமுத்திரக்கனி, மனைவி இனியா, மகள், தாயுடன் வாழ்ந்து வருகிறார். சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடி வந்த சரவணனை சமுத்திரக்கனி தன் உதவியாளர்களுடன் தேடுவதும். தன்னை சிறைக்கு அனுப்பிய அனைவரையும் தேடி போய் கொலை செய்யும் சரவணனும் என படம் சூடு பிடிக்கிறது.

இந்நிலையில், ஒரு சிறுமி கடவுளுக்கு கடிதம் எழுத அது எஸ் ஏ சந்திரசேகர் கைக்கு கிடைக்க அந்த சிறுமி கேட்ட உதவியை, எஸ் ஏ சந்திரசேகர் கடவுள் செயல் போல் செய்ய, இது ஒருபுறம் காட்டு தீயாக பரவுகிறது.

சமுத்திரக்கனி மகள் கடவுளிடம் கொலைகாரன் சரவணனை கொல்லுமாறு கடிதம் எழுதி அனுப்ப அந்த கடிதமும் எஸ் ஏ சந்திரசேகர் கையில் கிடைக்கிறது.

மும்முனை நகர்வில் என்ன நடக்கிறது என்பதே “நான் கடவுள் இல்லை” திரைப்பட கதை.

காவல்துறை அதிகாரியாக வரும் சாக்ஷி அகர்வால் சண்டைக்காட்சி, கவர்ச்சி, இளமை துள்ளல் என இப்பத்தில் மிக முக்கிய வேடத்தில் இரண்டாவது நாயகன் போல் நடித்துள்ளார்.

வில்லனாக சரவணன் மிக சிறப்பு மிரட்டி இருக்கிறார். ஆர்மி இளைஞர் நடிப்பும், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் நடிப்பும் அபாரம். இமான் அண்ணாச்சி காமெடி நடிகராக இல்லாமல் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

சமுத்திரக்கனி, இனியா மற்றும் அவரது மகள் நடிப்பு படத்தின் பிளஸ் பாய்ண்ட். சமுத்திரக்கனி அம்மா கதாபாத்திரம் இப்படத்தின் சிறப்பம்சம்.

பாடல் & பின்னணி இசை மிக சிறப்பு விபின் சித்தார்த் அற்புதம். ஒளிப்பதிவு படத்தின் பலத்தை கூட்டி இருக்கிறது. படத்தொகுப்பு மிக சிறப்பு. படத்தின் அனைத்து சண்டைக்காட்சியும் அருமை.

இயக்குநர் அவர்களின் அனுபவம் படத்திற்கு கூடுதல் பலம்.

வெகுநாட்கள் பிறகு ஜனரஞ்சக படம் பார்த்த திருப்தி.

Star movie makers presents SA Chandrasekar in

Naan Kadavul Illai

 

Artist technician list

 

Samuthirakani – senthura pandi

Saravanan – veerapan

Ineya – maheshwari

Sakshi Agarwal – leena

Dyana Sri – uma

Yuvan – jaffar

Imman Annachi

 

S.A.Chandrasekar – Jothi Lingam

 

Music – siddarth vipin

DOP – Magesh k dev

Editor – prabakar & Biju don Bosco

#naankadavulillaimoviereview #naankadavulillai #naankadavulillaireview #samuthrakani #sakshiagarwal #iniya #sac #sachandrasekar #vipinsidharth

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author