ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பாக அருண் பிரகாஷ் தயாரிப்பில், “அருவி” மதன் குமார் இயக்கத்தில், ஹரிஷ் உத்தமன் – ஷீலா ராஜ்குமார் நடிக்கும் படம் “நூடுல்ஸ்”.
சனிக்கிழமை இரவு ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து சத்தம் போட்டு விளையாட பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஒருவர் போலீசுக்கு புகார் தருகிறார். அதனால், இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் “அருவி” மதன் குமார் விசாரிக்க, அது வாக்குவாதம் முற்றி தள்ளு முள்ளு ஆகிறது.
உங்கள் மீது புகார் கண்டுபிடித்து என்ன செய்கிறேன் என பழிவாங்கும் வெறியுடன் அங்கிருந்து கிளம்பி போகிறார். மறுநாள் காலை ஷீலா ராஜ்குமார் தன் மகள் கையில் இருந்த மொபைல் போன் திருட வந்தவரை சட்டை பிடித்து இழுக்க அவன் வீட்டின் உள்ளே வந்து விழுந்து இறந்து போகிறார்.
இந்நிலையில், ஹரிஷ் உத்தமன்னை காதல் திருமணம் செய்ததால், இது வரை தன் வீட்டிற்க்கு வராத ஷீலா ராஜ்குமார் பெற்றோர் அன்றே வீட்டிற்க்கு வருவதால் பதட்டம் நிலவுகிறது.
ஒரு பக்கம் இன்ஸ்பெக்டர் பிரச்சனை, மறுபக்கம் அப்பா – அம்மா ஊரில் இருந்து வருவது இன்னொரு விஷயம் வீட்டின் நடுக்கூடத்தில் பிணம்.
சுவாரஸ்யமான இந்த கதைக்களத்தில் படம் பயணிக்கிறது.
ஹரிஷ் உத்தமன் – ஷீலா ராஜ்குமார் – வக்கீல் வசந்த் மாரிமுத்து – அருவி மதன்குமார் படத்தில் முக்கிய காட்சியில் நடிக்கிறார்கள்.
நடித்த அனைவரும் கதாப்பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்தார்கள் என்பதால் படத்துடன் இணைப்பு முற்றிலும் ரசிகர்களை இன்னும் காட்சியின் நெருக்கத்தில் கொண்டு சென்று இருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு இயக்குனருடடையது. நன்றாக நடிக்க தெரிந்த நடிகர்களை பயன் படுத்தி சரியாக உணர்ச்சி வசப்பட்டு நடிக்க/வசனம் பேச வைத்து சிறப்பித்ததுள்ளார்.
எடுத்து கொண்ட கதை யதார்த்தமாக இருப்பதால் திரைக்கதை அருமை. ஒரே வீட்டில், பரபரப்பு சூழ்நிலை கதைக்களத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.
பாடல் இல்லை – சண்டைக்காட்சி இப்படத்தில் இல்லை. இதுவே படத்திற்கு மிக பெரிய பிளஸ் பாய்ன்ட். கதையின் போக்கு சிதறாமல் கொண்டு செல்கிறது.
பின்னணி இசை பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்றால் படத்தின் முதுகெலும்பு.
ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர் ஒரே அறையில் முக்கால்வாசி படம் திறமைக்கு சவால் விடும் பணியை சிறப்பாக செய்துள்ளார்.
படத்தொகுப்பு வேலை கனகச்சிதாக சிறந்த ரகம். பார்வையாளர்களை காட்சியுடன் கட்டி போட்டு விடுகிறது.
“நூடுல்ஸ்” படம் புதுவித அனுபவம் தரும்.. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் மக்களிடம் பெரிய அளவில் வந்து சேர்ந்துள்ளது. அதே வரிசையில், இப்படம் அந்த வகையில் கிரீடத்தில் வைரக்கல்லாக. மின்னுகிறது.
படத்திற்கு தேவையான தயாரிப்பு செலவு தான் வேண்டும் என்று ரசிப்பு தரம் கொஞ்சம் கூட குறைந்து விட்டாமல் .உருவக்கியதற்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.
“நூடுல்ஸ்” இளைய தலைமுறைக்கும், சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்து. குடும்ப கதை யதார்த்தமாக உருவாக்கப்பட்ட விதம் குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம்.
“Noodles” Movie Cast Character Name/ Real Name
Hero character name ; Saravanan/ Harish Uthaman
Heroine. ; Sakthi/ Sheela Rajkumar
Daughter ; Priyu/ Aazhiya
Neibourhood Characters First floor Family :-
1)Shankar age 49
Artiste Thirunaavukkarasu (Aruvi film Aruvi Father)
Jayanthi age 30, Sankar wife
Artiste Haritha
Sankar Jayanthi Son
Yeshwanth / Sooraj
Second floor F :-
Meera age 48 Artiste Mahina,,
Meera daughter Swetha age 30 Artiste Suba
Suba Cousin Prakash age 24, Artiste Prakash
Neighborhood Lawyer Thiru age 50 Artiste Vasant Marimuthu
Auto Man Artiste – Imthiyas
Police Inspector Elango -Madhan Dakshinamoorthy
Police Head Constable – ShobanMiller
#noodlesmoviereview #noodlesmovie #noodlesreview #noodles #moviereview #tamilmoviereview #fdfs #movie #review #cinema #film #flick #audience #theatre #audiencereview #theatrereview #fans
மதிஒளி ராஜா