R புரடக்ஸன்ஸ் மற்றும் AVP சினிமாஸ் தயாரிப்பில் R.முத்துகுமார் திரைக்கதை எழுதி இயக்கிய படம் ‘நோக்க நோக்க’.
பேய் படங்களுக்கு இன்னும் மவுசு இருப்பதை அறிந்து உருவாக்கப்பட்ட படம். அதே போல் கடவுள் நம்பிக்கை உள்ள படமும் தாய்க்குலத்தின் பெரும் ஆதரவு பெரும் என்பதையும் புரிந்து உருவாக்கப்பட்ட படம்.
படம் ஆரம்பக் காட்சியில் வானில் ஒரு கெட்ட சக்தி காட்சியாக ஆரம்பிக்கின்றது படம். கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை பழி வாங்குவதாக காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்கள்.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி புரியும் நேர்மையான நிருபர் பிரதிமா. இந்தியாவின் பண மதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில் நடந்த சட்டவிரோத பண மாற்றுதலை ஆவணமாக்கி ஒளிபரப்புக்கு செல்லும் வேலையில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்படுகிறாள். அவளது ஒரே மகளையும் கொன்று விடுகின்றனர்.
வில்லன் கோஷ்டியால் கொல்லபட்ட ஆவி பழிக்குபழி வாங்கப்படுவது இயல்பு. ஆனால் நாயகன், நாயகியும் சேர்த்து பழிக்குபழி ஏன்? பழி வாங்க பட்டு இருப்பது புதுமை.
கஞ்சா கருப்பு நகைச்சுவை அருமை. விஞ்ஞான வளர்ச்சி மட்டுமே வாழ்கை அல்ல. இயல்பு வாழ்க்கையும், விவசாயமும் முக்கியம் என்று தன் நகைச்சுவையில் சமூகத்திற்கு நல்ல செய்தி சொல்லி இருக்கிறார்
திரை உலகில் பல ஆண்டுகளாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் கணேஷ்குமார் முதல்முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்
இளமைக்கு நாயகன், நாயகி காதல் காட்சிகள் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இடைவெளி பிறகு வரும் பாடல் அனைவரையும் சுண்டி இழுக்கும்.
வில்லன் கோஷ்டியினர் சிறப்பாக செய்துள்ளனர். நிருபராக வரும் பிரதிபாவும், அவரது மகளும் சிறப்பாக செய்துள்ளனர்.
நல்ல பொழுதுபோக்கு படம் “நோக்க நோக்க”.
நடிகர்கள் :-
அர்ஜுன் சுந்தரம் (அர்ஜுன்)
சிந்தியா (நித்யா)
கஞ்சா கருப்பு (IT கருப்பு)
ஜோதி ராய் (பிரதிமா)
ஜாகுவார் தங்கம் (தங்கம்)
சுரேஷ் (சுரேஷ்)
தொழில்நுடப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு : விஜய்
சண்டை பயிற்சி : பவர் புஷ்பராஜ்
பாடல்கள் : ஜான்சி
இசை : ஆல்டிரின்
எடிட்டிங் : அரவிந்த்
PRO : கணேஷ்குமார்
எழுத்து & இயக்கம் : முத்துகுமார்
தயாரிப்பு : R production & AVP Cinemas
மதிஒளி ச ராஜா