வேதா பிக்சர்ஸ் சார்பாக S தியாகராஜன் – T ஆனந்தஜோதி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் M செல்வகுமார் இயக்கத்தில், வெற்றி, ஹரீஷ் பேரடி, ஷிவானி நாராயணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பம்பர்”.
பணத்திற்காக திருட்டு, வழிப்பறி மற்றும் அனைத்து தவறான செயல்களையும் துணிந்து நண்பர்களுடன் சேர்ந்து செய்து வருகிறார் வெற்றி.
வெற்றியின் முறைப்பெண் ஷிவானி நாராயணன் அவனது தவறான செயலால் அவனை நேசிக்க மறுக்கிறார். ஆனால், வெற்றியின் தாயார் வெற்றியை நல்லவனாக மாற்ற வெற்றி விரும்பும் ஷிவானியால் தான் முடியும் என ஷிவானியை கேட்டுக் கொள்கிறார்.
இந்நிலையில், வெற்றிக்கு காவல்துறையினர் மூலம் ஒரு கொலை செய்ய சொல்லி அழைப்பு வருகிறது. பணத்திற்காக வெற்றியும், அவனது நண்பர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், பிரச்சனை வேறு வழி செல்ல வலுக்கட்டாயமாக சபரிமலைக்கு மாலைப் போடும் சூழ்நிலை வருகிறது.
தங்களை காப்பாற்றி கொள்ள கேரளா செல்லும் வெற்றி பிளஸ் கூட்டணி ஹரீஷ் பேரடியை சந்திக்க நேர்கிறது. அதன்பின், பம்பர் அடிக்க கதை வேறு கோணத்தில் நகர்கிறது.
ஹரீஷ் பேரடியின் நடிப்பு அபாரம். இதுவரை வில்லனாகவே பார்த்து வந்த இவரை சாந்தசொருபியாக நேர்மறை கதாப்பாத்திரத்தில் பார்ப்பது புதிதாக உள்ளது. அனைவரது மனதையும் கவரும் நடிப்புக்கு நிச்சயம் விருது வழங்கலாம்.
வெற்றியின் இயல்பான நடிப்பு படத்திற்கு பலம்.
வெற்றியின் தாயாக ஆதிராவின் நடிப்பு மிக அருமை. நாயகி ஷிவானி நடிப்பு சிறப்பு.
காவல்துறை அதிகாரிகள் கவிதா பாரதி – அருவி மதன் நடிப்பு கூடுதல் பலம். அருவி மதன் அறிமுக காட்சியே அற்புதம். கவிதா பாரதி நடிப்பும் மிரட்டல்.
GP முத்து, பழைய ஜோக் தங்கதுரை மற்றும் நண்பர்களின் காமெடி நல்ல விருந்து.
இசை கோவிந்த் வசந்தா பாடல்கள் அனைத்தும் அருமை. கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் மிக வலிமை – இனிமை.
பின்னணி இசை கிருஷ்ணா (மசாலா கஃபே) மிக சிறப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது.
வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு மிக அருமை அதிலும் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கேரளா பகுதியை இவரது கேமரா அழகாக பதிவு செய்துள்ளது.
படத்தொகுப்பு – கலை இயக்கம் மிக அருமை
சண்டைக்காட்சி – நடன அமைப்பு அற்புதம்.
கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் அறிமுக இயக்குநர் என்றாலும் திறமையாக செய்துள்ளார் M செல்வகுமார். தமிழ் திரை உலகில் அதிகம் பேசப்படு்வார்.
மதங்களை கடந்து மனித நேயம் பேசும் “பம்பர்” திரைப்படம் ஜனரஞ்சகத்திலும் ரசிகர்களைக் கவரும். அருமையான பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படம்.
*CAST:*
VETRI – PULIPANDI
HAREESH PERADI – ISMAIL
SHIVANI NARAYANAN – ANANDHI
KAVITHA BHARATHI – MADASAMY
G P MUTHU – THUPPAKI PANDIYAN
ARUVI MADHAN – BENJAMIN (SP)
AATHIRA – BRAMACHI
THANGADURAI – BOOTHAM
TITO WILSON – NIYAZ
SEEMA G NAIR – ISMAIL’S WIFE
&
AJAY – SHAJI PATTIKARA
ASHNA – SEGARA
KEERTHI – HAZINA
KARTHIKA – NIYAZ’S WIFE
PAARI – LOTTERY SHOP OWNER
MUTHU – NIYAZ ‘S FRIEND
VEERAN – NIYAZ’S FRIEND
DHILIP – SENTHOORAN
KALKI – SUNAMANI
SOUNDRAYA- AANANTHI’S MOTHER
*CREW*
PRODUCTION COMPANY – VETHA PICTURES
PRODUCER – S. THIAGARAJA B.E. & T.ANANDAJOTHI MA,B.ED
Director – M.Selvakumar
DOP – Vinoth Rathinasamy
Music Director – Govind Vasantha
BGM – Crishna (Masala cafe)
Editor – MU. Kasi Vishwanathan
Lyric writer – Karthik netha
Art director – Subentar
Action master – Sudesh
costumer – Muthu
Makeup- Pattinam rasheed
Stils – Anbu
Designer – Raja desin point
EP – P.S.Ganesh
P.Maneger – Raj kamal
PRO – NIKIL MURUKAN
#bumpermoviereview #bumpermovie #bumberreview #bumper #Bumper #BUMPER #moviereview #movie #review #fdfs #film #flick #cinema #theatre #audience #box-office
மதிஒளி ராஜா