‘பருந்தாகுது ஊர் குருவி’ திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

லைட்ஸ் ஆன் மீடியா சார்பாக ஈவ் சுரேஷ்/சுந்தரா கிருஷ்ணா.பி/வெங்கி சந்திரசேகர் தயாரிப்பில், கோ.தனபாலனின் இயக்கத்தில் நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’

படத்தின் கதை

சின்ன சின்ன திருட்டுகள், அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் தான் ஆதி (நிஷாந்த் ரூசோ). இவர் ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் சமயத்தில், மிளகுக்காட்டில் யாரையோ வெட்டிப் போட்டிருப்பதாக போலீஸிற்கு உடனடியாக தகவல் வருகிறது.

அந்த இடத்திற்கு வழிகாட் டுகிறேன் என்று சொல்லி, காவல் அதிகாரி போஸை ஆதி தாறுமாறாக இழுத்துக் கொண்டு செல்கிறார். அங்கே சென்றவுடன்,  அந்த ஆத்திரத்தில் ஆதியின் கையுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேசிவிட்டு வரும்வரை, பிணத்தை பார்த்துக்கொள்ளுமாறு ஆதியிடம் கூறுகிறார் போலீஸ் அதிகாரி போஸ்.

இதனையடுத்து ஆதி, கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கையில், பிணமாக கிடந்த நபருக்கு இன்னும் உயிர் இருப்பதை அதன் மூலமாக தெரிந்து கொள்கிறார். அப்போது, அந்த நபரின் தொலைபேசிக்கு அவரது மனைவி (காயத்ரி ஐயர்) போன் செய்து, அவரை காப்பாற்றுமாறு ஆதியிடம் அழுது கெஞ்சுகிறார்.

அவர் மனைவியுடன் பேசியதன் மூலம், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மாறன் (விவேக் பிரசன்னா) என தெரிந்து கொள்கிறார், ஆதி. அதன் பின்னர் சிறிது நேரத்திற்குள் மீண்டும் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி கொலைகார கும்பல் வருகிறது.

ஏன் இவர் மீது கொலை முயற்சி? ஆதி மாறனை அவரது மனைவியுடன் உயிருடன் சேர்த்தாரா? காவல்துறை அதிகாரி நிலை? கொலையாளி யார்? இரண்டாம் பகுதி விடைத் தருகிறது

பல சுவாரஸ்யமான முடிச்சுகள் படத்தில், பின்னணி இசை – ஒளிப்பதிவு – படத்தொகுப்பு மூன்றும் மிக சிறப்பு.

ஆதி, மாறனை தோள்ளில் சுமந்து மலை பாதையில், பெரிய சுமையை அவ்வளவு தூரம் தூக்கி செல்வது ஆதி மேல் அனைவருக்கும் இறக்கம் ஏற்படுகிறது.

கொல்ல வரும் 4 பெரும் ஆக்சன் காட்சியில் மிரட்டி இருக்கிறார்கள்.

நல்ல விறுவிறுப்பு என உத்திரவாதம் தரும் படம். இன்னொரு “மைனா” என்று சொல்லலாம்.

Parundhaaguthu Oor Kuruvi

Cast:

 

Nishant Russo as Aadhi Vivek prasanna as Maran Gayathri Iyer as Yamini Ratsasan Vinodh as Inspector Dharmaraj Kodangi Vadivel as Bose Gowtham – Villain Rajesh – Villain Anand – Villain Athik – Villain

 

Crew:

 

Production Company – Lights On Media Producers – Eav Suresh/Sundhara Krishna.P/Venki Chandrsekhar Director – Dhanabalan Govindaraj Dop – Ashwin Noel Editor – Nelson Anthony

Music – Renjith Unni Action Choreography – Om Prakash Art Director – Vivek Selvaraj

PRO – Sathish (AIM)

#parunthaguthuoorkuruvimoviereview #parunthaguthuoorkuruvireview #parunthaguthuoorkuruvimovie #parunthaguthuoorkuruvi #moviereview #review #tamilmoviereview #film #movie #cinema #flick #fdfs

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author