“பாயும் ஒளி நீ எனக்கு” திரைப்பட விமர்சனம்

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பாக கார்த்திக் அத்வைத் தயாரிப்பில், இயக்கத்தில், விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. நேற்றைய தினம் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் தனஜெயன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதீத வெளிச்சம் இருந்தால் மட்டுமே இயல்பான பார்வை தெரியும். மாலை குறைந்த வெளிச்சத்தில், இருட்டில் பார்வையில் தெளிவிருக்காது. இப்படியான குறைபாடுள்ள இளைஞனாக விக்ரம் பிரபு அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சொந்தமாக பிசினஸ், குடும்பம், நண்பர்கள் என நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் இரவில் ரோட்டில் இரண்டு ரவுடிகள் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க, அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அங்கிருந்து அவருக்கு பிரச்சனை துவங்குகிறது.

இன்னொரு பக்கம் அரசியலில் பெரும் செல்வாக்கு உடையவராக திகழும் வேல ராமமூர்த்தி இடத்தை குறுக்கு வழியில் அடைகிறார் தனஞ்செயன். இவர் எப்படி விக்ரம் பிரபு வாழ்க்கைக்குள் நுழைகிறார். அவரது தந்தையை கொல்கிறார்.

அதன்பின்னர் என்ன நடக்கிறது. ஏன், அப்பாவியான தனது தந்தையை கொல்கிறார்? இன்னும் யாரெல்லாம் இவர்களால் கொலை செய்யப்பட்டார்கள்? பார்வை குறையுள்ள நாயகன் எப்படி வில்லனுடன் மோதல்? என பல வினாக்களுக்கு விடை திரையில்…

பாயும் ஒளி நீ எனக்கு படம் பக்கா கமர்சியல் படமாக வெளியாகி உள்ளது. அதாவது அதிகப்படியான வெளிச்சத்தில் மட்டும் தான் கண் தெரியும் என்றும் குறைந்த ஒளியில் குருட்டுத் தன்மை என்பதை மையமாக வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை நன்றாக உள்ளது.

க்ளைமாக்ஸில் பார்வை குறைபாடு உள்ள போது சண்டைக்காட்சியில் வில்லனை கையாண்ட விதம் அருமையாக இருந்தது.

விக்ரம் பிரபு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அந்த வகையில் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

படத்தில் முக்கிய பிளஸ் ஆக ஒளிப்பதிவு உள்ளது. பாயும் ஒளி நீ எனக்கு படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். வாணி போஜன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுத்துள்ளார்.

அடுத்தடுத்த காட்சி என்ன இருக்கும் என்று ரசிகர்களை எதிர்பார்க்கும் படி இப்படம் கொண்டு சென்றுள்ளது. மேலும் நிறைய புது முயற்சிகளை படத்தில் இயக்குனர் கையாண்டுள்ளார்

Paayum Oli Nee Yenakku

ARTIST :-

1) Vikram Prabhu
2) Vani Bhojan
3) DALLI DHANANJAYA
4) ANANDH
5) VIVEK PRASANNA
6) VELA RAMAMORTY

TECHNICIAN :-

Director – Karrthik adwait
Producer – Karrthik adwait (Karthik Movie House)
Theatrical Release by SP Cinemas
DOP – SRIDHAR
MUSIC – SAGAR
EDITOR – PREM KUMAR
ART DIR – SUBENDAR
LYRICS – KARTHIK NETHA
DANCE – DHADTHA
STUNT – DINESH KASI
MIXING – RAJAKRISHNAN
STILL – MRUAGA DOSS
DESING – PAVAN
SFX – SETHU

#pony #PONY #paayumolineeenakkumoviereview #paayumolineeenakkureview #paayumolineeenakkumovie #paayumolineeenakku #pobyreview #ponymoviereview #fdfs

You May Also Like

More From Author