“பீட்சா 3 – த மம்மி” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் CV குமார் தயாரிப்பில், மோகன் கோவிந்த் இயக்கதில், அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பீட்சா 3 – த மம்மி”.

திகில் திரைப்படங்களில் கவனிக்கத்தக்க வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று பீட்சா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதியின் ஆரம்ப காலங்களில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்த திரைப்படம் அதற்குப் பிறகு பீட்சா 2 என வெளியாகின.

அஸ்வின் புதிய உணவகத்தை வங்கி கடன் மூலம் வாங்கி நடத்தி வருகிறார். அஸ்வின் – பவித்ரா மாரிமுத்து காதல் திருமணத்திற்கு பவித்ராவின் அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரவ் நாராயணன் எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்.

இந்நிலையில், அஸ்வின் நடத்தும் உணவகத்தில் இரவு நேரம் அமானுஷ வேலை நடக்கிறது.

இந்த அமானுஷ வேலைக்கும் அஸ்வின்க்கும் என்ன சம்மந்தம்? யார் அந்த அமானுஷ சக்தி? ஏன் கொலை தொடர்ந்து நடக்கிறது? அஸ்வின் கண் முன் ஏன் சிலர் சாகடிக்க படுகிறார்கள்? என்பதை திரையில் காண்க.

கதை உண்மை சம்பவத்தின் கலவை உள்ளது. திரைக்கதை நேர்த்தி. வசனம் தேவையான அளவு சிறப்பு. இயக்கம் நல்ல தெளிவு.

பின்னணி இசை மிரட்டல். ஒளிப்பதிவு படத்தின் உயிர்நாடி. எடிட்டர் இயக்குனருடன் நன்றாக கைக்கோர்த்துள்ளார். கலை இயக்கம் இயற்கையாக அமைந்தது படத்திற்கு பலம்.

அஸ்வின், காளி வெங்கட், Kpy யோகி, Kpy குரோஷி உணவக காட்சிகள் நன்றாக உள்ளது. நாயகி பவித்ரா அழகாக இருக்கிறார் அழகாக நடித்துள்ளார்.

இயக்குனர் கவுரவ் நாராயணன் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். அஸ்வின் மீது கோபம் கொள்வது பாசமிகு அண்ணன் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

வில்லன்கள் தேர்வு மிக அருமை. அனுபமா குமார், அபி நட்சத்திரா நடிப்பின் மூலம் கதைக்கு நியாயம் செய்துள்ளார்கள்.

வழக்கமாக பேய் கதை என்றால் பழிவாங்க பின்னணி கதை இருக்கும். பழிவாங்கும் முறை. பழிவாங்கும் முன் பயமுறுத்தல், பழிவாங்கியதும், ஆத்மா சாந்தியடைய பூலோகம் விட்டு செல்வது என இதுவே இலக்கணம் என்று ஆகிவிட்டது. இதற்கு ஒரு குறிப்பிட்ட ஆவிகள் உலாவரும் இடம். இரவு நேரத்தில் மட்டுமே பேய்க்கு சக்தி வரும். அந்த பேய்களை விரட்ட ஒரு கோஷ்டி என்ற வரிசையில் இப்படமும் சேரும்.

பள்ளி மாணவிகள், சிறுமிகள் பால்வன்புணர்வு என எத்தனை படங்கள் ரசிகர்களை போதுமடா ஆளை விடுங்க என்று கூறும் அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டது. இப்படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

“பீட்சா 3 – த மம்மி” பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். திகில் படங்கள் விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து. பீட்சா பாகம் 2ஐ விட நன்றாக இருக்கிறது.

PIZZA 3 :

 

CAST :-

1.Aswin Kakumanu as Nalan
2.Pavitra Narimuthu as Kayal
3. Gaurav as Inspecter Prem
4. Kavitabarathi as Viswanathan
5. Anupama Kumar as Rani
6. Abi Nakshtra as Mitra
7. Veera as Veera Narayanan
8. Kpy Kuroshi as Sethu
9. Kaali venkat as Dhaamu Annan
10. Kpy Yogesh as Yogi
11. Seymour as Librarian

CREW :-

Production Banner – Thirukumaran Entertainment
Produced By – C.V. Kumar
TamilNadu Theatrical Release: V Square Entertainment
Director – Mohan Govind
DOP – Prabu Rhagav
Music Director – Arun Raj
Editor – Ignatious Aswin
Associate Editor – Venkat Balaji Srinivasan
Art Director – SK
Stunts – Rugger Ram
DI & Audiography – Cuviyam Studios
DI Colorist – Shanmuga Pandian
Sound Mixing – Harish
Costume Designer – Navadevi Rajukumar, Meenakshi
Chief Make Up Artist – Suresh, Ramachandran

Costumer – Selvam

VFX – Jeeva

PRO – Nikil Murukan

#pizza3moviereview #pizza3movie #pizza3review #pizza3 #pizza #fdfs #tamilmoviereview #moviereview #movie #review #cinema #film #flick #audience #theatre #audiencereview #theatrereview

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author