புதுப்பட வாய்ப்புகள் குவியும் புதுமுக நடிகர் : தினமும் இரண்டு கதை கேட்கும் புதிய நாயகன் விது!!

தினமும் இரண்டு கதை கேட்கும் புதிய நாயகன் விது

ஷாம் ,சினேகா இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த திரைப்படம் “இன்பா” இத்திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் P.B.பாலாஜி .

இவர் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இசையமைப்பாளராக சில வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்,நடிகர் கரண் நடிப்பில் உருவான “சூரன்” என்ற திரைப்படத்தில் இசை அமைத்துவிட்டு,

சுமார் 18 படங்கள் முடித்த பின்னர் தற்போது “இருளி” என்ற இருளர் வாழ்வில் நடக்கும் சம்பவத்தில் உருவாகும் படத்திலும் இசையமைக்கிறார் மற்றும் “Tattoo” என்ற ஹிந்தி திரைப்படத்தில் வித்தியாசமான முறையில் பின்னணி இசையமைத்துக் கொண்டு இருக்கிறார்.

“தி நைட்” என்ற அனிமல் திரில்லர் திரைப்படத்தின் மூலமாக விது பாலாஜி என்று பெயர் மாற்றி நாயகனாகவும் உருவெடுத்துள்ளார் இத்திரைப்படம் முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது.

இதையடுத்து KJS Media கலசா செல்வம் தயாரிக்கும் “கோத்தங்கோடு பங்களா” என்ற திகில் திரைப்படத்திலும் நாயகனாக முன்னணி நாயகியுடன் நடிக்கவுள்ளார் அதற்கும் இசை இவரே,

இவர் சில முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் திரைப்படங்களில் விளம்பர இயக்குனராகவும் பணி புரிந்தமையால் திரைப்படங்களை வருவாய் ரீதியாக எப்படி விற்பது என்று தெரிந்து கொண்டார்,

இந்த யுத்தியை இவர் நடிக்கும் திரைப்படத்தில் பயன்படுத்துவதால் பல புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் சாதனை செய்ய துடித்துக் கொண்டு இருக்கும் இயக்குனர்கள் இவர் பின்னால் படையெடுத்துக் கொண்டு வருகின்றனர்…

You May Also Like

More From Author