‘பூம் பூம் காளை’ படத்தின் திரை விமர்சனம் – மதிஒளி ராஜா

ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.. இந்தப்படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.

படத்தின் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.

காதல், அன்பு என்றுமே நிலையானது. காமம் தான் தற்காலிகமாக என்று சொல்லும் நாயகி. முதலிரவு அறைக்குள் தன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பலநாள் திட்டம், கனவுடன் இருக்கும் நாயகன்.

நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்தபின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே.. அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான்.

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அழகிய இளம் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் நாயகனுடன் தன் 3 மனைவிகளுடன் சந்தோஷமாக இருந்ததை சொல்லி உசுப்பி விடும் ஹோட்டல் தோட்டக்காரன் அப்புக்குட்டி.

தான் காதலிக்கும் பெண்ணை 3வது  மனைவியாக கட்டிக் கொண்டதால் அப்புக்குட்டிக்கு, பாசமாக இருப்பது போல் நடித்து ஹோட்டலில் கெட்டு போன உணவை கொடுத்து பழி வாங்கும் காதல் அருண்.

ஹோட்டலில் வரும் இளஞ்ஜோடிகளை நோட்டமிட்டு அதில் ஒரு இளம் ஜோடியை கடத்தி வைக்கும் மர்ம நபர்.

ஹோட்டலை தன் வசப்படுத்தி கொள்ள நினைக்கும் அரசியல்வாதி, அதற்கு துணை போகும் பெண் காவல் அதிகாரி அபிநய ஶ்ரீ.

நாயகனும், நாயகியும் இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இப்படி, படம் இளமை, மர்மம், சுவாரஸ்யம், கேளிக்கை, நகைச்சுவை என ரசிகர்களை கட்டி போட்டு விடுகிறது.

இயக்குநர் எடுத்துக் கொண்ட கதை களம் இளைஞர் முதல் முதியவர் வரை அனைருக்கும் பிடித்த ஒன்று. திரைக்கதை, வசனம் பக்கபலம்.

பாடல்கள் அனைத்தும் படத்தின் பொழுதுபோக்கு பாதிக்காமல் இருக்கிறது. பின்னணி இசை சிறப்பு.

ஒளிப்பதிவு மிக அருமை 4 சுவருக்குள் வரும் காட்சியாக இருந்தாலும், குளிர்பிரதேசம் வெளிப்புற காட்சிகளாக இருந்தாலும் அருமையாக படம் பிடித்துள்ளார்

படத்தொகுப்பு காட்சி ஓட்டத்தை சிறப்பாக கொண்டு செல்கிறது.

நல்ல நகைச்சுவை உள்ள, ஜனரஞ்சகமான படம். ரசிகர்களுக்கு விருந்து.

 

தொழில்நுட்ப கலைஞர்கள் :

 

ஒளிப்பதிவு: K.P.வேல்முருகன்

 

படத்தொகுப்பு: யுவராஜ்

 

இசை: P.R.ஸ்ரீநாத்

 

பாடல்கள்: S.ஞானகரவேல்

You May Also Like

More From Author