50 -50 (ஊர் சேதி பாட்டு மீதி)
இந்த நிகழ்ச்சியின் மையக்கருவே தெரிந்த ஊர்.. தெரியாத செய்தி என்பதுதான்.. அதாவது ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒவ்வொரு முக்கியமான இடங்கள் பற்றியும், அவை ஏன் அங்கே அமைந்துள்ளன, அவற்றிற்கு ஏன் அப்படி பெயர் வந்தது என்பது பற்றியும் அவற்றின் சிறப்பு பற்றியும் உலகின் பார்வைக்கு கொண்டு வருவது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் கார்த்தி சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே நேரடியாக சென்று அங்குள்ள முக்கியமான இடங்களின் சிறப்புகளை நேரில் கேட்டறிந்து, பல ஆச்சரிய தகவல் தகவல்களுடன் இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக வழங்குகிறார்
அதுமட்டுமல்ல அங்குள்ளோரிடம் அவர்களுக்கு பிடித்த திரையுலக நட்சத்திரங்கள், பிடித்த பாடல்கள் போன்ற விபரங்களையும் கேட்டு இதில் வழங்குவது இந்த நிகழ்ச்சியை மேலும் சுவை கூட்டுகிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஊர் சேதி பாட்டு மீதி என்ற டைட்டில் பொருத்தமாக அமைந்து விட்டது.. பெப்பர்ஸ் டிவியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 8.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.