“பேரழகி ISO” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

விஞ்ஞானம் மூலம் முதுமையை இளமையாக்க கண்டுபிடிப்பு பாட்டியான சச்சு மேல் உபயோகபடுத்த  அவர் சிறு வயதிற்கு மாறி விடுகிறார்.

இளமையில் சச்சு தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போல இருந்தமையால் மீண்டும் பேத்தி போல உருவம் கொண்டு                   சச்சு ( ஷில்பா மஞ்சுநாத் ) போடும் லூட்டி பேத்தி ஷில்பா மஞ்சுநாத்துக்கு மிகவும் பிரச்சனையாக அமைகிறது. பேத்தியின் காதலும் குழப்பமாகிறது என கலகலப்பு படம் முழுவதும்.

ஆரம்பத்தில் பாட்டி சச்சு கவலையில்லாமல் சுற்றி வருகிறார். தன் பேத்தி மீது பாசமாகவும் தோழியாகவும் வயது வித்தியாசமின்றி சுத்தி வருகிறார். இவர் செய்யும் சிலுமிஷங்களால் வீட்டில் தன் மகன் லிவிங்ஸ்டன் மற்றும் மருமகளின் கோபத்திற்கு ஆளாகிறார். அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி தனக்கு உள்ள மாடலிங் துறை ஆசையால் பாட்டிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு அங்கிருந்த தொழில் அரசியலால் தோற்று போகிறார்.

சரவணன் சுப்பையாவின் FACE & FAIR அழகு சாதன நிறுவனம் பல ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தில் இருந்து கீழ் இறங்குகிறது. இதனால் வெளிநாட்டில் உள்ள மேலிடத்தில் இருந்து அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் விஞ்ஞானி மூலம் புதிதாக சித்தர் கண்டுபிடிப்பு மற்றும் நவீன விஞ்ஞானம் கலந்து முதியவர்களை இளமையாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதற்கான முயற்சியில் யார் மீது பிரயோகபடுத்தலாம் என தேடி கொண்டிருக்கும் போது கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சச்சுவை அவரது சம்மததுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியடைகிறார்கள்.

மீண்டும் இளமை என மாறிய சச்சு ( ஷில்பா மஞ்சுநாத் ) மாடலிங் துறையில் இறங்கி கலகலக்குகிறார். இதனால் பேத்திக்கு பாதிப்புகுள்ளாகிறது. இயற்கைக்கு மாறாக உண்டான இளமையினால் என்ன என்ன கலகலப்பு ?  என்ன என்ன பிரச்சனை ?பேத்தியின் உருவத்தால் பாட்டி செய்யும் அடாவடி முடிவுக்கு வருமா ?. முதியவர்கள் இளையவர் ஆனால் எற்படும் சிக்கல் தீர்ந்ததா ?. மீண்டும் சச்சு தனது குடும்பத்துடன் இணைந்தாரா ?. ஆராய்ச்சியின் வளர்ச்சி ஆச்சர்யமா அல்லது ஆபத்தா ? வெள்ளிதிரையில் காண்க.

நகைச்சுவை மற்றும் சுவாரசியம் குறையாமல் அமைத்த கதை, திரைக்கதைக்கும், குறைந்த முதலீடு படத்தில் விஞ்ஞான படத்தை வழங்க முடியும் என நிருபித்த இயக்குனருக்கு பாராட்டு. இசை படத்துடன் கலந்துள்ளது நல்லது. ஒளிப்பதிவு இப்படத்திற்கு தோள் கொடுத்துள்ளது.

காதல் காட்சியும் டூயட் பாடலும் அளவாக அமைந்தது கதைக்கு முக்கியத்துவம் அளித்தது பத்திசாலிதனம். சமீபத்தில் தான் நடிப்பு துறைக்குள் வந்த போதும் ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலுடன் இரட்டை வேடம் ( பாட்டி – பேத்தி ) என மிகப்பெரிய சுமையை தன்னை நம்பி ஏற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து தனது நடிப்பாலும், அழகாலும் முன்னனி நடிகையர் போல் முழ படத்தையும் ஆளுமை செய்துள்ளார். சச்சு அவர்களின் அனுபவமும் தேர்ந்த நடிப்பும் படத்திற்கு பக்கபலம்.

நல்ல செய்தி கொண்ட இப்படத்திற்கு தேவையான செலவு செய்து பதிய முயற்சிக்கு வழிவகுத்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள்.

2 மணி நேரம் பொழுதுப்போக்கு விரும்பும் திரைப்பட ரசிகர்களுக்கு நல்ல விருந்து இந்த “பேரழகி ISO”.

 

You May Also Like

More From Author