“பொம்ம கத்தி” திரைப்படத்தின் துவக்கவிழாவில் அம்மா திரையரங்கம் திறக்கப்பட வேண்டும் – டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்

அம்மா திரையரங்கம் திறக்கப்பட வேண்டும் ! – டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்.

“பொம்ம கத்தி” திரைப்படத்தின் துவக்கவிழா நடைபெற்றது.

மாண்புமிகு நீதியரசர் A.R.செல்லகுமார் அவர்கள், A.D.G.P உயர்திரு A.சுப்ரமணியன் IPS, சிவசேனா மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தின் தலைவர் நன்பர் தமிழமுதன், உமர் பிலிம்ஸ் உமர் பஷீர் அஹமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சைதன்யா கிரியேஷன்ஸ் சைதன்யா சங்கரன் மற்றும் இயக்குனர் D.லோகநாதன், ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் …

” தமிழகத்தில் உடனடியாக அம்மா திரையரங்கம் திறக்கப்பட வேண்டும்.

சுமார் 750 படங்கள் முடிந்த நிலையில் வெளிவர முடியாத நிலையில் உள்ளது.

அம்மாவின் அரசு என்று சொல்லி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய அரசு, மறைந்த புரட்சி தலைவி +அம்மா ஜெயலலிதா அவர்களின் திட்டமான அம்மா திரையரங்கம் திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானத்திற்கு அடுத்தபடியாக அரசுக்கு வருமானம் தரும் துறை திரைப்பட துறைதான்.

மிகவும் கௌரவமாக வருமானம் பெறும் துறை இதுவே.

ஆனால் அந்த துறை நாளுக்கு நாள் நலிந்து கொண்டு வருகிறது. படங்களை எடுப்பதை விட வெளியிடுதல் மிகவும் சிக்கலான உள்ளது.

அனைத்து தியேட்டர்களும் குறிப்பிட்ட சிலருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.

அரசு இதை கவனித்தில் கொண்டு திரை உலகைப் காப்பாற்ற வேண்டும்.

புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் திட்டமான அம்மா திரையரங்கத்தின் பணிகள் உடனடியாக துவங்கி ஏழை எளிய மக்கள் அனைவரும் அனைத்து திரைப்படங்களையும் குறைந்த விலையில் பார்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் ” என்று பேசினார் சுபாஷ்.

இந்த நிகழ்வு வளசரவாக்கம் அருகில் உள்ள சக்தி பேலஸில் நடைபெற்றது.

ராஜகோபால், தனபால், ஸ்ரீ மகாவீர் பாண்டியன், விஜய் முருகன் உட்பட்ட பலர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

 

You May Also Like

More From Author