ப்ளு சட்டை மாறனின் “ஆன்டி இண்டியன்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் படைப்பு “ஆன்டி இண்டியன்”. மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதம் பாவா தயாரித்துள்ளார்.

சென்னை கடலோர பகுதியை சேர்ந்த ஒவியர் பாட்ஷா கொலை செய்யப் படுகிறார். தந்தை இஸ்லாமியர், தாய் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்க்கு மதம் மாறியவர். இதனால், பாட்ஷாவின் இறுதி சடங்கு செய்வதில் முன்று மதத்தினருக்கும் சச்சரவு. அந்த தொகுதியில் இடை தேர்தல் என்பதால் அரசியலும் விளையாடுகிறது.

ஒரு சவத்தை சுற்றி நடைப்பெறும் சம்பவங்களே ஆன்டி இண்டியன்.

ப்ளு சட்டை மாறன் திரைப்பட விமர்சகரில் முன்னனியில் ஒருவர். பல திரைப்படங்களை அவரது பாணியில் கிழி கிழியென கிழித்தவர். இவர் இப்படத்தை உருவாக்குகிறார் என்பதால் திரையுலகம், திரைப்பட விமர்சகர்கள் வட்டம், ரசிகர்கள் என பலரது பார்வை இந்த ஆன்டி இண்டியன் படத்தின் மீது கூடுதல் பார்வையை வைக்க வைத்தது.

இப்படத்தில் என்ன குறை, எப்படி குறைகளை கண்டுபிடிப்பது என எல்லோரும் ஆவலாக காத்து கொண்டிருக்கின்றனர்.

ப்ளு சட்டை மாறன் விமர்சனத்தில் எப்படி கெட்டிகாரரோ அதே போல் பட உருவாக்கத்திலும் சிறப்பானவர் என ஆன்டி இண்டியன் படத்தின் மூலம் நிருபித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 18 நாட்களில் முடிந்துள்ளார் என்பது அவரது திட்டமிடலுக்கு பாராட்டு.

திரைக்கதை சலிப்பு இல்லாமல் கொண்டு செல்கிறது. முதல் பகுதி கலகலப்பாகவும் இடைவேளைக்கு பிறகு, சீரியஸாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. வசனம் மிக சிறப்பு. இயக்குனராக முதல் படத்திலேயே வெற்றி. பாடலுக்கு முக்கியத்துவம் இல்லாத கதைக்களம் அதனால் இசை பொறுப்பை இவரே ஏற்றுள்ளார். பல படங்கள் பார்த்த அனுபவத்தில் பின்னணி இசையை காட்சிகளுக்கு தகுந்தவாறு அமைத்துள்ளார்.

ராதாரவி, ஆடுகளம் நரேன், வழக்கு எண் முத்துராமன், பசி சத்யா, கில்லி மாறன், Kpy பாலா, சுரேஷ் சக்ரவர்த்தி, இயக்குனர் வேலு பிராபகரன் தவிர மற்றவர் அனைவரும் புதுமுகங்களாகவே இருக்கின்றனர். ஒவியர் பாட்ஷாவாக ப்ளு சட்டை மாறன்.

ஒளிப்பதிவு சிறப்பு சில இடங்களில் ப்ளாட் லைட்டிங்கை தவிர்த்து இருக்கலாம். படத்தொகுப்பு திரைக்கதைக்கு உதவியுள்ளது. கலை அமைப்பு, சண்டைப் பயிற்சி, நடனம் இவை படத்தின் தன்மை மற்றும் பொருளாதாரம் குறித்து அமைக்கப்பட்டுள்ளது.

இப்படம் குறை பெரிதாக சொல்லும் அளவு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாராட்ட பட வேண்டியது வசனகர்த்தா ப்ளு சட்டை மாறன்.

படத்தில் வரும் கானா பாடலின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

சவத்தை வைத்து பல படங்கள் வந்துள்ளது சாது மிரண்டால், மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் காட்சிகள் என.

ப்ளு சட்டை மாறன் அவர்களுக்காகவே  நெடிசன்கள் வலைப் போட்டு தேடியதில் இப்படம் மராத்தியில் வெளியான படத்தின் தழுவல் என கண்டுபிடித்துள்ளர். கூடுதல் தகவலாக, மத சர்ச்சை படமாக இருப்பதால் மலேசியாவில் இப்படம் வெளியிடுவது தொடர்பாக சிக்கல் என தெரிய வந்துள்ளது.

சுவாரஸ்யமான படம் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை. பொழுதுபோக்கு உத்தரவாதம். வர்த்தகரீதியில் வசூலை குவிக்கும்.

நடிகர்கள் – கதாபாத்திரங்கள் :

1.ராதாரவி – முதலமைச்சர் செங்குட்டுவன்
2.நரேன் – டெபுடி கமிசனர்
3.வழக்கு எண் முத்துராமன் – ஏரியா இன்ஸ்பெக்டர்
4.ஜெயராஜ் – ஏழுமலை
5.விஜயா மாமி – சரோஜா என்கின்ற லூர்து மேரி
6.கர்ண ராஜா – ராஜா (இந்து அரசியல்வாதி)
7.சினேபா – பாதிரியார்
8. இயக்குனர் வேலு பிரபாகரன் – ஹாஜியார்
9.மகேஷ் – எதிர்கட்சித் தலைவர்
10. கில்லி மாறன் – கருப்பு சட்டைக்காரன்
11.அனில் குமார் – கலவரம் செய்பவன்
12.ஷான் – ஸதவ்ஹீத் இளைஞன்
13.சார்லஸ் வினோத் – எதிர்க்கட்சி வேட்பாளர்
14.விஜய் டிவி பாலா – சாமியானாக்காரன்
15.சுரேஷ் சக்ரவர்த்தி – தாசில்தார்

தொழில்நுட்ப கலைsர்கள் :

கதை, திரைக்கதை, வசனம்,  இசை, இயக்கம் : C. இளமாறன்

தயாரிப்பு : மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதம் பாவா

ஒளிப்பதிவு : கதிரவன்

படத்தொகுப்பு : R . சுதர்சன்

கலை : வீரமணி கணேசன்

நடனம் : ரமேஷ்

சண்டைப்பயிற்சி : ஹரி தினேஷ்

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author