“மாமன்னன்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், மாரி செல்வராஜின் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், அழகம் பெருமாள் நடிப்பில் உருவான படம் “மாமன்னன்”

சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தைச் சேர்ந்த வடிவேலு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் உதயநிதி. சிறுவயதில் தனது நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது பன்றி மேய்க்கும் தாழ்ந்த சாதியை சேர்ந்த சிறுவர்கள் உயர் சாதியினரின் குளத்தில் குளிப்பதா என்று கோபமடைந்த சில உயர் சாதிக்கார்கள் அவர்களை கல்லால் அடிக்கிறார்கள்.

நண்பர்கள் மூவர் இறந்துவிட, குற்றுயிரும் கொலை உயிருமாக சிறுவன் உதயநிதி தப்பிப் பிழைக்கிறார். குற்றவாளிகளுக்கு தன் தந்தை சரியான தண்டனை வாங்கித் தரத் தவறிவிட்டார் என்ற காரணத்தினால் தந்தையுடன் பேசுவதே இல்லை உதயநிதி.

சாதாரண தொண்டனாக இருந்த வடிவேலு அத்தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவிக்க சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தைச் சேர்ந்த வடிவேலு சேலம் மாவட்டம் காசிபுரம் தனி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகிறார். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வளர்ந்ததும், இளைஞர்களுக்கு அடிமுறை சண்டையை பயிற்சி தருகிறார்.

கீர்த்தி சுரேஷ் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி சேவை செய்கிறார். இதனால் பகத் பாசிலின் மூத்த சகோதரரின் கல்வி நிலையம் பாதிப்புக்குள்ளாகிகிறது. இதனால் அந்த இடத்தில் இருந்து காலி செய்ய வைக்கிறார். இந்நிலையில், உதயநிதி. உதவுகிறார். தன் இடத்தில் இடம் தருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் இடத்திலும் வந்து சேதம் செய்கிறார்கள். பதிலுக்கு உதயநிதி ஸ்டாலின் குழு அவர்களது இடத்தை சேதம் செய்கின்றனர்.

இந்த பிரச்சனை ஒன்றைப் பேசித் தீர்க்க வடிவேலுவையும், உதயநிதியையும் தன் வீட்டுக்கு வரவழைக்கும் கட்சியின் மாவட்ட செயலாளர் பகத் பாசில் உதயநிதியை மட்டும் அமரச் சொல்கிறார். எம்எல்ஏவாக இருந்தாலும் வடிவேலுவை அமர விடாமல், நிற்க வைத்தே பேசி அவமானப் படுத்துகிறார்.

பல ஆண்டுகளாக தன் தந்தையுடன் பேசாமல் இருந்த உதயநிதி இப்போதுதான் முதல் முறையாக தந்தையுடன் பாசத்துடன் பேசுகிறார்.

தன் தந்தையை அங்கிருந்த  இருக்கையில் அமரச் சொல்ல, “உன் அப்பா எங்கள் முன் உட்கார மாட்டார்… காலம் காலமாக இப்படித்தான் நடக்கிறது…” என்று ஆணவத்துடன் சொல்கிறார் பகத் பாசில்.

இதனால் இந்த வாய் வார்த்தை கைகலப்பாக மாறுகிறது. கொதித்து எழுந்த உதயநிதி அப்பாவை அவமானப் படுத்தியவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். இந்த பிரச்சனை மேலிடம் வரை செல்கிறது.

 

இதற்குப் பிறகு, தேர்தல்களம், பிரசாரம், பழிக்குப்பழி என கதையில் சூடு பிடித்து பரபரப்பு காட்சிகள் அரங்கேறி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.

இறுதியில் ஆதிக்க சக்தி ஜெயித்ததா?  நடந்த தேர்தலில் எவ்வாறு உதயநிதி ஜெயித்தார்? என்பதுதான் ‘மாமன்னன்’.

 

கோபத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் காட்சிகளில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஜொலிக்கிறார்.

 

ஆதிக்க சக்திகளின் பிரதிநிதியாக வரும் பகத் பாசில் தன் உடல் மொழியிலே அதிகாரத் திமிரை திறம்பட வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.

 

வைகை புயல் வடிவேலு இப்படத்தில் தன் வழக்கமான நகைச்சுவை இல்லாமல், மாமன்னன் என்று தலைப்பு கதாப்பாத்திரத்தில் நாயகனாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் பலமே வடிவேலு மற்றும் வில்லனாக ஃபஹத் ஃபாசில் நடிப்பு தான்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பும் இப்படத்தில் மிக சிறப்பு. முன்பை விட பல மடங்கு அதிகமாக மெருகு ஏறியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பில் நியாயம் செய்துள்ளார்.

வடிவேலுவின் மனைவி, லால், அழகம் பெருமாள் நடிப்பும் அருமை.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பாடல்கள் அனைத்தும் புதுரகம் மிக அருமை. பின்னணி இசை படத்தில் முன்னணியில் இருக்கிறது. படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை அற்புதமாக கவனித்துள்ளார். படத்தொகுப்பு – கலை இயக்கம் மிக அருமை.

ஆக மொத்தத்தில், மாமன்னன் திரைப்படம் ஆஹா, ஓஹோ என சொல்லும் அளவிற்கு மிக சிறப்பாக இருக்கிறது ., ஒரு நல்ல படமாகவே இருக்கிறது ரசிகர்கள் தங்களின் விருப்பமான படம் என கூறி வருகின்றனர். எனவே உதயநிதி ஒரு நல்ல படத்தை கொடுத்துவிட்ட திருப்தியோடு மீண்டும் சினிமாவில் நடிக்கலாம்.

பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டும் வெற்றிப்படமாக கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை மூன்றாம் வெற்றிப்படம் என கொடுத்துள்ளார். தமிழ் திரை உலகில் ஆகச்சிறந்த இயக்குனர்கள் வரிசையில் நிச்சயம் இடம் வகிப்பார் மாரி செல்வராஜ். மாமன்னன் படத்தை இயக்கியதிலும் வெற்றிக்கனி பரித்துள்ளார்.

அனைவருக்கும் பிடிக்கும் படம் “மாமன்னன்”

#maamannanmoviereview #maamannanmovie #maamannanreview #maanannantheatrereview #maannanfdfs #fdfs

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

 

 

You May Also Like

More From Author