‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’!
GIE புரொடக்சன் சார்பில் திருநங்கை ஆலி சர்மா என்பவர் வருடந்தோறும் குளோபல் மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா ஆசியா போட்டியை நடத்தி வருகிறார்.
கடந்த வருடம் முதல் நடைபெறும் இந்த போட்டியின் இரண்டாவது வருடமாக 2020 ஆம் வருடத்திற்கான ‘குளோபல் மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா ஆசியா 2019-2020’ போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த சுமார் 200 பெண்கள் வரை கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மூன்று பெண்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.
இந்த இறுதிச்சுற்றில் சென்னையை சேர்ந்த ‘பாஷினி பாத்திமா’ என்கிற 19 வயது இளம்பெண் 2020-ஆம் வருடத்திற்கான ‘குளோபல் மிஸ் இந்தியா ஆசியா 2019-2020’ அழகி பட்டத்தை வென்றுள்ளார்.