லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக VC ரவீந்திரன் தயாரிப்பில், ஃபஸ்ட் மேன் பிலிம்ஸ் சிவசுப்ரமணியன் – சரவண பிரியன் இணை தயாரிப்பில், ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ” முருங்கைக்காய் சிப்ஸ்”.
பாக்யராஜ் அவர்களின் குடும்ப பாரம்பரிய வழக்கமாக முதல் இரவு அன்று புதுமண தம்பதியர் தாம்பத்ய வாழ்வில் இணையாமல் சுய கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும் என கால காலமாக கடைப்பிடித்து வருகின்றன்ர்.
அந்த வகையில் இன்றைய தலைமுறை சாந்தனு பாக்யராஜ் தன் புது மனைவி அதுல்யா ரவியுடன் பலவித சந்தோஷத்துடன் வாழ்க்கையை துவங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் அவரது தாத்தாவான பாக்யராஜ் முதல் இரவில் சுண்டு விரல் கூட உன் மனைவி மேல் பட கூடாது அதற்கு முன்னோர்கள் வகுத்த இரண்டு முக்கிய காரணங்கள் என்ன என்பதை விளக்குகிறார். அப்படி மீறினால் குடும்ப சொத்துகள் அனைத்தும் அனாதை இல்லத்திற்கு சென்று விடும் என்று கூறி விடுகிறார்.
அதே சமயம், அதுல்யா ரவியிடம் அவருடைய அத்தை ஊர்வசி முதல் இரவு அன்று சாந்தி முகூர்த்தம் முடியாத தன் குடும்பத்தில் மூன்று பேருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய் விட்டது. அதனால் முதல் இரவில் சாந்தி முகூர்த்தம் நடந்தே ஆக வேண்டும் என கூறுகிறார்.
இரண்டு வேறுபட்ட கருத்துகளுடன் கணவன், மனைவி முதல் இரவில் என கதை நகர, குடும்ப சொத்து அனாதை ஆசிரமத்திற்கு சேர திட்டமிடும் மனோபாலா, மதுமிதா, யோகிபாபு, பிக்பாஸ் ராஜு, முனிஸ்காந்த், மயில்சாமி, லிப்ரா VC ரவீந்திரன் எப்படியாவது முதல் இரவு நல்லபடியாக நடக்க வேண்டும் என பல முயற்சி செய்கிறார்கள்.
இதில் பாக்யராஜ் நினைத்தது நடந்ததா? ஊர்வசி வேண்டியது நிறைவேறியதா? அனாதை ஆசிரமத்திற்காக சொத்தை அபகரிக்க திட்டமிட்ட கோஷ்டியினரின் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் கதை.
முதல் இரவு என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான கதை களம். திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மகனும், அவரும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்றால் சுவாரஸ்யம் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி இருவரும் சிறப்பாக செய்துள்ளனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் ஆதிகம். குறிப்பாக, இளமை துள்ளல் வசனங்கள் தூக்கலாக உள்ளது.
யோகிபாபு நகைச்சுவை அருமை. மயில்சாமி, மனோபாலா, மதுமிதா காம்பினேஷன் சூப்பர். பாக்யராஜ், ஊர்வசி சிறப்பாக தங்கள் பணியை செய்துள்ளனர்.
பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பு. பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்.
இளமை துள்ளல் படமாக சிறந்த முறையில் இப்படம் ரசிகர்களை கவரும் விதமாக உருவாகியுள்ளது. 18+ ரசிகர்கள் என்ஜாய் பண்ணலாம்.
‘MURUNGAIKKAI CHIPS’ Movie Stills and CAST & CREW
CAST:
1. Shanthnu Bhakyaraj – Arjuna Navalar
2. Athulya Ravi – Vijaya Shanthi
3. K. Bhagyaraj – Sundhareshwara Navalar
4. Urvashi – Lakhsmi
5. Yogi Babu – SSS Saravanan
6. V.C Ravindharan – Ulaganathan
7. Mano bala – Lingusamy
8. Madhumitha – Geetha
9. Munishkanth -Dass
10. Mayilsamy – Kuyilsamy & Mayilsamy
11. Raju – Sakthi
CREW:
Written & Directed by Srijar,
Produced by Libra Productions – V.C Ravindharan,
Co-produced by First Man films – Sivasubramanian, Saravana priyan.
Music: Dharan Kumar
DOP: Ramesh Chakravarthy
Editor: Jomin
Art Director: Narmadha Veni
Choregraphers: Shobi, Lalitha Shobi, Robert
Lyricists: V.C Ravindhar, Ku karthick, Mali
Costume Designer: Hina, Nivetha Joseph
Executive Producer: Asokan G
Line Producer: Varun Chandran
Production Controllers: Manohar R.K, Srikanth. K,
Production Manager: Maharajan
Project Executive Managers: Kamalakannan.S, Pradeep R Chinna
Makeup Artist: Rachel Smith
Publicity Design: Chandru Ranganathan (Thandora)
Stills: Raja
DI: Accel Media
DI Colourist: Muthu G.S
Costumer: Kathir
PRO: Nikil Murukan
Mastered by Donal whelan – Mastering world
Musician fixer: Rajeev Anand
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd
மதிஒளி ராஜா