90களின் காலகட்டங்களில் நடக்கும் கேங்கஸ்டர் கதைதான் `மைக்கேல்` திரைப்படத்தின் மையக்கரு. தன் தாய்க்கு துரோகம் செய்த தந்தையை பழிதீர்க்க தனது 12 வயதில் கேங்க்ஸ்டராக வேண்டுமென்ற லட்சியத்தோடு மும்பைக்கு வருகிறார் கதாநாயகன் மைக்கேல் (சந்தீப் கிஷான்). அங்கு மும்பையின் மிகப்பெரிய `டான்` ஆக விளங்கும் குருவிற்கு (கௌதம் வாசுதேவ் மேனன்) ஏற்படும் ஆபத்திலிருந்து எதிர்பாராதவிதமாக அவரை காப்பாற்றுகிறார். அதன் பின் குருவுடன் இணைகிறார் மைக்கேல்.
குருவின் மொத்தம் நம்பிக்கையையும் பெறும் மைக்கேலிடம் பின்னாளில் குருவை கொலை செய்ய முயற்சித்த ஒருவனை கொல்லும் பொறுப்புகளும் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின், பம்பாய் (மும்பாய்) இல் இருந்து, டெல்லிக்கு செல்லும் மைக்கேல் அங்கு கொலையாளி மகளான கதாநாயகி தீராவுடன் (திவ்யான்ஷா) காதலில் விழுகிறார். அதன் பின் கதாநாயகிக்கு ஏற்படும் சில பிரச்சனைகள், கதாநாயகனின் ஆக்ஷன் காட்சிகள் என படம் கதை செல்கிறது.
இடையில் விஜய் சேதுபதி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் வருகின்றன. கதாநாயகியை பிரச்சனையில் இருந்து மைக்கேல் காப்பாற்றினாரா? விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் படத்தில் என்ன செய்கிறது? தான் கேங்க்ஸ்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வந்த மைக்கேலின் கனவு நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீது கதையாக இருக்கிறது.
ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் காட்சிகள் நிறைந்து காணப்படும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுப்போக்கு திரைப்படமாக வெளியாகியுள்ளது. குறிப்பாக தெலுங்கு திரைப்பட உலகில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது சிறப்பான விமர்சனங்கள் வர தொடங்கியிருக்கின்றன.
நடிகர்கள் : சந்தீப் கிஷான், கௌதம் வாசுதேவ் மேனன், திவ்யான்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், விஜய் சேதுபதி, அனுசுயா, வருண் சதீஷ், அய்யப்பா ஷர்மா, அணிஷ் குருவில்லா.
மைக்கேல் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மைக்கேல் இன்றைய இளைஞர்கள் கொண்டாடும் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள், இளமை ததும்பும் காதல் காட்சிகள். நடனம், பாடல்கள், பின்னணி இசை. 90களில் நடக்கும் கேங்ஸ்டர் படத்திற்கான கலர் டோன் ஒளிப்பதிவில் சிறப்பம்சம்.
நாயகன் சந்தீப் கிஷான் நல்ல வரவேற்புக்குரிய வரவு. ஆக்சன், ரொமான்ஸ் என சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் நாயகி இளம் பதுமையாக கண்களுக்கு விருந்து தருகிறார். விஜய் சேதுபதி கௌதம் வாசுதேவ் மேனன் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள்.
கெளதம் வாசுதேவ் மேனன் மகன், மனைவி கதாபாத்திரம் மிக சிறப்பு. மைக்கேல் தாய் கதாபாத்திரமும் மிக அருமை.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கம் அனைவரையும் சீட்டில் கட்டிப்போடுகிறது.
மைக்கேல் நல்ல ஜனரஞ்சக பொழுதுபோக்கு படம்.
#michalemoviereview #michalemovie #michalereview #michale #vijaysethupathi #gauthamvasudevmenon #gauthammenon #gvm #varalakshmisarathkumar #sandeepkishan #samcs
மதிஒளி ராஜா