‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

விஜய் சேதுபதி நடிப்பில், சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு இலங்கை தமிழ் அகதிகள் நிலையை பறைசாற்றும் விதத்தில் நியாயம் செய்து இருக்கும் படம்.

விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்கள் இப்படிப்பட்ட படத்தில் நடிப்பது பாராட்டுக்குரியது. இதனால், இயக்குனர் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக அனைவரும் பார்க்க வைக்கிறது.

வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை கையிலெடுத்து பேசுவதை  காட்சிகள் உணர்த்துகின்றன.

நிலம், நாடு, மக்கள், அரசியல் குறித்த  பின்னணியில் ஒலிக்கும் வசனம் அத்தனை அடர்த்தியுடன் எழுதப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் வெவ்வேறு கெட்டப்புகள், மகிழ்திருமேனியின் கம்பீரமான தோற்றம் கவனம் பெறுகின்றன.

தலையிலாத புத்தர் சிலை, பசியில் வாடும் உயிர்கள், போர்க் காட்சிகள் உள்ளிட்டவை படம் குறித்து நம்பிக்கையை கூட்டுகின்றன. ‘இந்த நிலம் எதுக்காக படைக்கப்பட்டது?’

குடும்பம் துறந்து அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகும் மக்களின் வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் விளக்கும் படமாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைந்துள்ளது. புனிதன் என்ற பெயரில் வலம் வரும் இலங்கை தமிழரான விஜய் சேதுபதி தன்னுடைய இலக்கை அடைய தனக்கென ஒரு குடிமகன் அடையாளம் வேண்டும் என நினைக்கிறார்.

ஆவணங்கள் படி அவர் “கிருபாநதி”யாக உருவெடுக்கிறார். அதேசமயம் காவல்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் மகிழ்திருமேனி, கிருபாநதியை கொல்ல நினைக்கிறார். இதற்கு காரணம் என்ன? இலக்கை அடைய ஒரு அகதியாக விஜய் சேதுபதி என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்?

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அதேபோல் இயக்குனர்கள் கரு. பழனியப்பன், மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ராஜேஷ், சம்பத்ராம், சின்னி ஜெயந்த், இமன்  அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகைகள் தபியா மதுரா, கனிகா, ரித்விகா, ஶ்ரீ ரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகின்றனர்.

இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் வசனங்கள் மிக அருமை. அகதிகளின் வலியை அனைவருக்கும் புரியவைத்துள்ளது இயக்குனருக்கு வெற்றி!!!

இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பாராட்டுகள்!!!

YAADHUM OORE YAAVARUM KELIR:

CAST :-

Vijay Sethupathi – Punithan,

Megha Akash – Mettilda,

Thabiya Mathura – Jessy,

Kaniha – Kanagarani,

Magizh Thirumeni – Rajan,

Karu Palaniappan – Arumugam,

Mohan Raja – Vincent,

Vivek – Father Xavier,

Rythvika – Kannigai,

Sri Ranjani – Baby,

Raghu Adhithya – Thambi Sekar,

&

Imman Annachi,

Bava Chelladurai,

Rajesh,

Chinni Jeyanth,

Vidhya pradeep,

Ajay Rathnam,

Sampath Ram

 

CREW:

Written & Direction : Venkata Krishna Roghanth

Music : Nivas K Prasanna

DOP : Vetrivel Mahendran

Edit : John Abraham

Art : K. Veerasamar

Creative Producer : Ragu Athithya

Producer : S.Esakki Durai

#yaadhumooreyaavarumkelirmoviereview #yaadhumooreyaavarumkelirmovie #yaadhumooreyaavarumkelirreview #yaadhumooreyaavarumkelir #yoyk #YOYK #vijaysethupathi #actorvivek #meghaakash #movie #moviereview #review #fdfs

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

Production Company : Chandaraa Arts

PRO: Nikil Murukan

You May Also Like

More From Author