டேக் ஓகே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “யாரோ”
சைக்கோ சீரியல் கில்லர் கதை யாரோ. தனியாக வசிக்கும் நபர்களை தேடி கண்டுபிடித்து தொடந்து கொல்லும் சைக்கோ. நாயகன் தனியாக வசிக்க அவனுக்கு தன் வீட்டில் யாரோ தன்னை பின் தொடர்வதாக உணர்வு. அதற்காக, மருத்துவ சிகிச்சையும் எடுத்து வருகிறார்
நண்பர்கள் உதவியும் நாடுகிறார். நண்பரின் உறவினர் கிரைம் போலீசார் நாயகனுக்கு உதவ முன் வருகிறார். தன் காதலி பல்லவி மீது சந்தேகம். தன் ஆபீஸ் மேல் அதிகாரி மேகி மீது சந்தேகம் என நாயகன் எல்லை மீறிய சூழ்நிலை காரணமாக மன நிம்மதி இழக்கிறார்.
சிறு வயதிலேயே அப்பாவால் அதிக கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவர் படத்தின் நாயகன் வெங்கட் ரெட்டி. அந்த வீட்டில் அடுத்தடுத்து என்னவெல்லாமோ நடக்கிறது. அதெல்லாம் ஏன் நடக்கிறது ? எதற்காக நடக்கிறது ? என்பதற்கான விடைதான் மீதிக் கதை.
சைக்கோத்தனமான கதாநாயகனாக அறிமுக நடிகர் வெங்கட் ரெட்டி. பயம், தவிப்பு என முதல் படத்திலேயே நன்றாக நடிக்க அசத்திருக்கிறார். சைக்கோ கதாபாத்திரம் என்பதால் என்ன செய்தாலும் அது கதாபாத்திரத்தின் தன்மையால் ஓரளவிற்கு நடித்தாலும் நடிப்பை மெருகேற்றி விடும். ஆனாலும், அதிக ஆர்வத்துடன் நடித்திருக்கிறார் வெங்கட் என்பது காட்சிக்குக் காட்சி தெரிகிறது.
படத்தின் கதாநாயகியாக உபாசானா அழகு பதுமைாக கண்களுக்கு விருந்தாக வருகிறார்.
படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதைக்கு ஏற்றவாறு பொருந்தி இருக்கிறார்கள்.
ஜோஸ் பிராங்க்ளின் பின்னணி இசையில் நன்றாக பயமுறுத்துகிறார். ஒளிப்பதிவாளர் கே.பி. பிரபு, படத்தொகுப்பாளர் அனில் கிரிஷ் இருவருக்கும்தான் இதை பரபரப்பான படமாகக் கொடுக்க வைப்பதில் நிறைய வேலை.
விஷுவலாக மட்டுமே படத்தைக் கடத்திக் கொண்டு போய்விட வேண்டும் என இயக்குனர் நினைத்திருக்கிறார். திரைக்கதை மூலம் எளிதில் புரிய வைத்திருக்கிறார். யாவரும் ரசிக்கும் ஒரு படமாக வந்திருக்கிறது.
நடிப்பு – வெங்கட் ரெட்டி, உபாசானா
தயாரிப்பு – டேக் ஓகே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – சந்தீப் சாய்
இசை – ஜோஸ் பிராங்க்ளின்
ஒளிப்பதிவாளர் – கே.பி. பிரபு,
படத்தொகுப்பாளர் – அனில் கிரிஷ்
மதிஒளி ராஜா