RP ஃபிலிம்ஸ் சார்பாக RP பாலா தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், பரத் – வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “லவ்” (LOVE).
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான “பாய்ஸ்” படம் மூலம் அறிமுகமான பரத்தின் 50வது படம் லவ்.
படத்தின் ஆரம்பமே பரத் – வாணி போஜன் காதல். இந்த காதலை வாணி போஜன் தந்தை ராதாரவி எதிர்க்கிறார். எதிப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
தான் நல்ல நிலைக்கு வரும்வரை குழந்தை வேண்டாம் என பரத் முடிவு எடுக்கிறார். ராதாரவி உதவியால் தான் பரத் குடும்பம் நடத்தும் நிலை. இவ்வேளையில் வாணி போஜன் கர்பமாகிறார்.
பரத் – வாணி போஜன் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது. இதன் விளைவு மோசமாகிவிடுகிறது.
இதன்பின், பரத் நண்பர்கள் விவேக் பிரசன்னா, டேனியல் போப், ஸ்வயம் சித்தா, ராதாரவி, காவல்துறை அதிகாரி இவரது வீட்டுக்கு வருகிறார்கள்.
சண்டைக்கு பின் தான் உறவுகளின் அருமை தெரியும் என்று கூறுகிறது லவ் திரைப்படம்.
ஒரே வீட்டுக்குள் படம் என்பதால் ஒளிப்பதிவாளரும் சிரமம் அதிகம் ஆனாலும் தனது திறமையால் சிறப்பாக செய்துள்ளார்.
ஒன்றும் இல்லாத விஷயத்தை படமாக தன் படத்தொகுப்பு மூலம் மாற்றி கொடுத்துள்ள எடிட்டர் பாராட்டுக்குரியவர்.
கதை மிக சிறியது என்பதால் திரைக்கதை அழுத்தமில்லை. வசனம் சுமார். இயக்குனர் தயாரிபபாளர் இரண்டு பொறுப்பு என்பதால் படத்தில் கவனம் செலுத்த வேண்டிய இல்லாமல் போய் விட்டது.
ஒரே ஒரு பாடல் தான் மனதில் நிற்கவில்லை. காட்சி தன்மை சிறப் பின்னணி இசை எடுபடவில்லை.
பரத்தின் 50வது இப்படி அமைந்தது அவரின் துரதிஷ்டம். வாணி போஜன் இளமை இல்லாமல் முதிர்ச்சி தெரிகிறது மேலும் கண்ணாடி அணிந்து நடிப்பதால் கூடுதலாக முதிர்ச்சி தெரிகிறது.
விவேக் பிரசன்னா நடிப்பு நன்று ஆனால் அதிகமாக வசனம் பேசுவது இரைச்சல் தருகிறது.
ஸ்வயம் சித்தா சில காட்சிகள் வந்தாலும் இளமையாக இளைஞர்கள் கவரும் அழகு. இவரது காட்சிகள் இன்னும் அதிகம் வைத்திருக்கலாம்.
ராதாரவி ஓரிரு காட்சிகள் என்றாலும் .உக சிறப்பு. கதாபாத்திரத்தின் ஆளுமை நன்றாக தெரிகிறது. டேனியல் நடிப்பு இன்னும் தேர்ச்சி தேவை.
கலை இயக்கம் ஒரே இடம், ஒரு முறை தான் வேலை என்பதால் அவ்வளவு பெரிய சுமை இல்லை.
ஆக மொத்தம் “லவ்” திரைப்படம் நேரம் விரையம்.
#lovemoviereview #lovemovie #lovereview #love #fdfs #tamilmoviereview #moviereview #movie #review #cinema #film #flick #audience #theatre
மதிஒளி ராஜா