தமிழ் சினிமாவில் முதல் முறையாக விக்கலை மையமாக வைத்து உருவாகும் குறும்படம்
முண்டாசுபட்டி – மம்பட்டியான் – பேட்ட உள்பட பல படங்களில் சிறப்பாக நடித்தவர் ஆதேஷ் பாலா.
இவர் இப்போது “நிக்குமா நிக்காதா” என்ற குறும்படத்தில் கதையின் நாயகன் ஆக நடித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்கு விக்கல் நிற்காமலே போனால் என்ன ஆகும்? என்பது கதை.
15 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் முழுவதிலும் நடிகர் ஆதேஷ் பாலா விக்கலோடு நடித்துள்ளார்.
கடைசி பஸ் யூடியூப் சேனல் தயாரித்துள்ள இந்த குறும்படத்தை கடைசி பஸ் கார்த்திக் இயக்கியுள்ளார். அருண் ஐயப்பன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீராம் விக்னேஷ் எடிட் செய்ய, சதீஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஆதேஷ் பாலாவுடன் லொள்ளு சபா புகழ் சிரிக்கோ உதயா ராம்குமார் பழனி, கார்த்திபன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த குறும்படத்தின் முதல் பார்வை (First Look) டிசம்பர் 18ஆம் தேதி சினிமா பிரபலங்களால் வெளியிடப்படுகிறது.