விக்ரம் திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் எழுத்து, இயக்கத்தில், உலக நடிப்பின் நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “விக்ரம்”.

முகமூடி அணிந்த கொலையர்களால், மகன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் வளர்ப்பு தந்தை கமல் கொலை செய்யப் படுகின்றனர். படம் ஆரம்பித்த உடனேயே கமலின் மரணம் பெரும் அதிர்ச்சி ஆனால் சின்ன குழந்தைக்கு  கூட தெரியும், அவர் செத்திருக்க மாட்டார் என்று, அந்த மரணத்தைப் பற்றி விசாரிக்க காவல்துறை உயர் மட்ட குழுவால், நியமிக்கப்படும் பகத் பாசில் தனியார் துப்பறிவு நிறுவனம்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை தொலைத்து விட்டு தனக்கு மேல் இருக்கும் சர்வதேச போதை கடத்தல் தலைவருக்கு எப்படி மீண்டும் போதை பொருளை கண்டுப்பிடித்து தருவது, இல்லையேல் தனது குடும்பத்தை முழுவதுமாக அழித்து விடுவார் என்ற பயம் மற்றும் ரவுடி, போதை பொருள் சாம்ராஜ்ய தலைவன் என இரு குணாதிசயத்தை கொண்டு தேடி கொண்டிருக்கும் விஜய் சேதுபதி.

துப்பறிவு பணியில் தீவிரமாக மூழ்கியிருக்கும் பகத் பாசில். கமல் மரணத்திற்கான மர்ம முடிச்சு.

முதல் பகுதி மும்முரமாக காட்சிகள் சிறப்பாகவே செல்கிறது. இடைவேளை ப்ளாக் சுலமாகவே கண்டுப்பிடித்து விட முடிகிறது.

காளிதாஸ் ஜெயராம் கொலை மரணம் ஏன்? அதற்கான பழிவாங்கும் கதையா? போதைப் பொருள் மாபியா கதையா? துப்பறிவு கதையா?

விக்ரம் 2.0 கமல் படமா? லோகேஷ் கனகராஜ் படமா? சண்டைப் பயிற்சியாளர் அன்பரிவ் படமா? கேள்விக்கு மூன்றும் சேர்ந்த கலவை தான் பதில்.

காட்சி உருவாக்கத்தில் லோகேஷ் கில்லாடி அதிலும் உலக நாயகன் கமலுடன் ஜோடி போடும் போது அது வேற லெவல்.

படத்தை பார்க்க, ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம். உள் வாங்கி பார்க்க கட்டாயம் இரண்டாம் முறை பார்த்தால் மட்டுமே இன்னும் படத்தை ரசிக்கலாம்.

சிறு சிறு வேடத்திற்க்கு கூட, நல்ல நடிகர்களை பயன்ப்படுத்தி இருப்பது அருமை.

இரண்டாம் பகுதியும் நம்மை ஆட்கொள்கிறது. இப்படம் கமல் ரசிகர்களுக்கும், ஏ சென்டர் ரசிகர்களுக்கும் சூப்பர். பி அன்ட் சி ரசிகர்களுக்கு கேள்விக்குறி.

இசை அனிருத் அசத்தியுள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளரும் படத்தின் நாயகன் தான். படத்தொகுப்பு பிலோமின் ராஜ் மிக அருமை. ஆர்ட் டைரக்டர் சதீஷ் குமார் பணி மிக சிறப்பு.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றம் அதிர வைத்திருக்கிறார்.

விக்ரம் சிறப்பான படம். ரசிகர்களுக்கு தலை வாழை இலை விருந்து !!!

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

 

You May Also Like

More From Author