இயக்குனர் பாலா தயாரிப்பில், ஆர் கே சுரேஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் விசித்திரன்.
2018 இல் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஜோசப் படத்தின் தமிழாக்கம் தான் விசித்திரன்.
விருப்ப ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆர் கே சுரேஷ், காவல்துறைக்கு துப்புதுலக்க பெரும் உதவியாக இருக்கிறார்.
இவருக்கு இவருடன் பணிபுரிந்த காவல்துறை நண்பர்கள் இளவரசு, மாரிமுத்து ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.
தன் மனைவி பூர்ணாவை விட்டு பிரிந்து தன் மகளுடன் வாழ்ந்து வந்த மாயன் ஒரு விபத்தில் தன் மகள் மூளை சாவு ஏற்பட அவளது உடலை தானம் செய்கிறார்கள்.
தன் முன்னால் காதலி நினைவால், தன் மனைவி பூர்ணாவை விட்டு விலக, பூர்ணா பகவதி பெருமாளை மறுமணம் செய்து கொள்கிறார்.
இந்நிலையில், பூர்ணா விபத்தில் சிக்கி இறக்கிறார். இவரது உடலையும் தானம் செய்கிறார் ஆர் கே சுரேஷ்.
அதன் பின், பூர்ணாவின் இறப்பு விபத்து இல்லை கொலை என கண்டு பிடித்து தன் பாணியில் துப்பு துலக்க ஆரம்பிக்கிறார்.
அதன் பின்னர் என்ன என்பதே விறுவிறுப்பான விசித்திரன் படத்தின் கதை.
இதுவரை, வில்லன் கதாாத்திரத்தில் நடித்து வந்த ஆர் கே சுரேஷ் இப்படத்தில் மாறுபட்டு ஒரு வித்தியாசமான நாயகன் வேடத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர்.
மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய எம். பத்மகுமாரே இப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது சிறப்பு.
நல்ல படம், நம்பி பார்க்கலாம்.
நடிகர்கள்:
ஆர் கே சுரேஷ் (மாயன்)
பூர்ணா (ஸ்டெல்லா)
மது ஷாலினி (மீனாட்சி)
இளவரசு (மாயன் நண்பர்)
பிரியதர்ஷினி (டயானா)
மாரிமுத்து (பூபாலன்)
ஜார்ஜ் (பாதிரியார்)
பகவதி பெருமாள் (பீட்டர்)
ஜே பி (சுப்பையா)
தயாரிப்பு: இயக்குநர் பாலா
இயக்கம்: எம் பத்மகுமார்
இசை: ஜி வி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: வெற்றி மகேந்திரன்
படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா
கலை: மாயபாண்டி
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
நிர்வாக தயாரிப்பு: எம் செந்தில் குமார்
இசை வெளியீடு: சரிகமா இந்தியா லிமிடெட்
வெளியீடு: ஆர் கே சுரேஷ் – ஸ்டூடியோ 9
“மதி ஒளி” ராஜா