விஜய் சேதுபதி நடிக்கும் “மாமனிதன்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

 

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், இசைஞானி இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்திருக்கும் படம் “மாமனிதன்”.

இயக்குனர் சீனு ராமசாமி எழுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்திரி சங்கர், குரு சோமசுந்தரம், K.P.A.C. லலிதா, ஷாஜி சென், ஜூவல் மேரி, அங்கிதா சுரேந்திரன், கஞ்சா கருப்பு, பேபி மானஸ்வி, சரவணன் சக்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு M சுகுமார், படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்

ஆட்டோ ஓட்டுனர் ராதா கிருஷ்ணனாக விஜய் சேதுபதி தன் மனைவி காயத்ரி மற்றும் மகன், மகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். இவரது இஸ்லாமிய தோழராக குரு சோமசுந்தரம்.

தன் இரண்டு பிள்ளைகளையும் உயர்ந்த தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஆசைபடும் விஜய் சேதுபதி தனக்கு பரிட்சயம் இல்லாத நபருடன் இணைந்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய, அந்த நபர் ஏமாற்றி லிட ஊர் மக்களுக்கு பதில் சொல்ல அஞ்சி, குரு சோமசுந்தரிடம் தனது குடும்பத்தை பார்த்துக் கொள்ள சொல்லி, ஏமாற்றிய நபரை தேடி அவனது ஊர் கேரளாவுக்கு வருகிறார்.

ஏமாற்றியவனை கண்டு பிடித்தாரா? ஊர் மக்கள் பணத்தை திருப்பி தந்தாரா? தன் குடும்பத்துடன் சேர்ந்தாரா? கேரளாவில் என்ன செய்கிறார்? ஏன் கேரளாவை விட்டு காசிக்கு போகிறார்? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

விஜய் சேதுபதி நடிப்பில் அசத்தியுள்ளார் தேசிய விருது இவரது நடிப்புக்கு நிச்சயம் வழங்கலாம். காயத்ரி மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்புக்கும் நிச்சயம் விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறது.

சிறந்த படத்திற்கான விருது காத்துக் கொண்டு இருக்கிறது!

யதார்த்தமான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சீனு ராமசாமி மிக சிறப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தனது தந்தை இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து முதல் முறையாக இசையமைத்துள்ளார். பாடல்களும், பின்னனி இசையும் படத்திற்கு Uக்கபலம்.

M. சுகுமாரின் ஒளிப்பதிவு அற்புதம்.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய சித்தி)ம். உறவுகளையும், நட்பையும் போற்றி உருவாக்கப்பட்டுள்ள படம்.

உலக நாயகன் கமல்ஹாசனின் மகாநதி படத்தை இப்படம்  அதிகம் நினைவூட்டுகிறது. சிதம்பரத்தில் ஒர் அப்பாசாமி, நான் கடவுள் படங்களும் கொஞ்சம் எட்டி பார்க்கிறது.

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

 

 

 

You May Also Like

More From Author