விட்னஸ் திரைப்பட விமர்சனம் – மதிஒளி ச ராஜா

விஷ்வ பிரசாத் தயாரிப்பில்,  தீபக் ஒளிப்பதிவு – இயக்கத்தில் உருவான படம் “”விட்னஸ்””. சோனி லைவ்வில் ஒளிபரப்பாகிறது!

துப்புரவுப் பணியாளர் இந்திராணி (ரோஹிணி) யின் மகன் பார்த்திபன். இளம் வயது கொண்ட இவரை வசதியானவர் வசிக்கும் அப்பாட்மெண்ட் கழிவுநீர் தொட்டி அடைப்பை சுத்தம் செய்ய வேலை தெரியாத போதும் வற்புறுத்தி கழிவுநீர் குழியில் இறக்கி விடுகிறார்கள் அப்பாட்மெண்ட் நிர்வாகிகள், உள்ளே சென்ற பார்த்திபன் உயிர் இழக்கிறார்.

பார்த்திபனின் அம்மாவான இந்திராணி, ஒரு துப்புரவுப் பணியாளர். தனது ஒரே மகனை இழந்துவிட்ட இந்திராணி, சட்டவிரோதமாக அவனைக் கூட்டிச்சென்று அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார்.

 

பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், அதே அப்பாட்மெண்டில் வசிக்கும் பார்வதி (ஷ்ரத்தா ஶ்ரீநாத்) என்ற இளம் கட்டடக் கலைஞர் இந்திராணி்யிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள்.

அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

 

அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கான பதிலடியாக, இந்திராணியின் வாழ்விலும், பார்வதியின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

300 நாட்கள் பின் தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிர்பாராத திருப்புமுனை.

வழக்கு என்ன ஆனது, நீதி கிடைத்ததா என்பதே மீதிக் கதை.

படம் முழுவதும் நீதிமன்றம், வழக்கு விசாரணையில் விறுவிறுப்பு பஞ்சம் இல்லை. கதையுடன் படம் பார்ப்பவரை ஒட்டி விடுவது இயக்குனரினன் திறமையை பாராட்ட வைக்கிறது.

வழக்கறிஞர் சண்முகராஜன் மிக சிறப்பு. ரோஹினியின் அனுபவ நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் பலம்.

சர்வதேச தரத்தில் விட்னஸ் படம் உருவாகியுள்ளது. தரமான படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

Cast & Crew

Shraddha Srinath

Rohini

Subatra Robert

Shanmuga Raja

Azhagam Perumal

G Selva

Rajeev Anand

Tamilarasan

Srinath

 

Cinematography & Direction – Deepak

 

 

Producer – TG Vishwa Prasad

Co-Producer – Vivek Kuchibhotla

 

Screenplay – Muthuvel, JP Sanakya

 

Music – Ramesh Thamilmani

 

Editing – Philomin Raj

 

Lyrics – Kabilan

 

Art – Sathish

Sound Design – Vivek Anandan

 

Sound Mixing – Lawrence G (RT Studios)

 

DI – Deccan Dreams

 

Associate Directors – Vidivelli, Somsainathan

Associate Cinematographers – Vinoth J, Avanti

 

Executive Producer – Vijaya Prakash, V Shree, Natraj

 

Production Manager – Ve Ki Duraisamy

Stills – Komalam Ranjith

PRO – Guna,

Publicity Designs – Sivakumar S (sivadigitalart

"Mathioli" RAJAA

மதிஒளி ச ராஜா

You May Also Like

More From Author