‘வைரம் பாஞ்ச கட்ட ‘ : ஒரு நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம்!

‘வைரம் பாஞ்ச கட்ட ‘ : ஒரு நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம்!

ஆஸ்கார் விருது வென்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘ஆவணப் படத்தை வெளியிட பங்கு பெற்ற நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ்க் குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட!

குறும்படம் இசை ஆல்பம் என்று கவனிக்கத்த வகையில் பங்களிப்பு செய்த காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் ‘வைரம் காஞ்ச கட்ட’.

இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்,ஏற்கெனவே ‘இந்தியன் டூரிஸ்ட்’, ‘நொடிக்கு நொடி’ குறும்படங்களை உருவாக்கியுள்ளார்.

 

‘இந்தியன் டூரிஸ்ட் ‘ குறும்படம் 24 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் சாதனை முத்திரை பதித்தது. அது மட்டுமல்ல சர்வதேச அளவில் விருதுகளும் பெற்றது. அதேபோல் ‘நொடிக்கு நொடி’ குறும்படம் திரையுலகினரின்
கவனத்தைக் கவர்ந்து பாராட்டைப் பெற்றது.இவர் உருவாக்கிய ‘இவளை போல்’ இசை ஆல்பம் டாப் டென் வெற்றி வரிசையில் இடம் பெற்றது.

அந்த சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘வைரம் பாஞ்ச கட்ட’. நாயகியாக யாஸ்மின் நடித்துள்ளார்.படத்தை எழுதி ,ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ளவர் சுந்தர் மகாஸ்ரீ.சதீஷ் சாந்தி வாசன் இசையமைத்துள்ளார்.ராக் அண்ட் ரோல் புரொடக்சன் சார்பில் யாஸ்மின் பேகம் தயாரித்துள்ளார்.

இக்குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டி தங்கள் சமூக ஊடகங்களில் பலரும் வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, சி. வி. குமார், லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சந்திரசேகர், சரவணன், சுரேஷ், ஜான்மேக்ஸ், ஜி.தனஞ்ஜெயன்,சனம் செட்டி, எஸ் பி சௌத்ரி போன்றவர்கள் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்கள்.

இக்குறும்படத்தை வெளியிடும் உரிமையை ஏபி இன்டர்நேஷனல் பெற்றுள்ளது. அந்த நிறுவனம்தான் ஆஸ்கார் விருது பெற்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘ படத்தை netflix வெளியிட்ட உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதையடுத்து வெளியிட வாங்கி உள்ளது .இதன்மூலம் இப்படத்தின் தரத்தை அறியலாம்.

இந்த காமன்மேன் சதீஷ் நடிகர் ஷார்ட் பிலிம் இயக்குனர் விரைவில் திரைப்படம் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author