ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர் ரிட்டன்ஸ்”.

 

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரிப்பில் “அமைச்சர் ரிட்டன்ஸ்”.

 

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர் ரிட்டன்ஸ்”.

 

கதைச்சுருக்கம் :கரை வேட்டி கட்டிய கறைபடாத அமைச்சரின் கண்ணியமான காதல் கதை.போலீஸ் பயிற்சி முடித்த ஒரு இளைஞன் அதிர்ஷ்ட வசத்தால் உள்துறை அமைச்சராகிறார் .தன் வசத்தில் உள்ள போலீஸ் இலாகாவை பயன்படுத்தி நாட்டில் நடக்கும் கொள்ளை ,கொலை ,கற்பழிப்பு போன்ற குற்றங்களை தடுத்து தமிழ்நாட்டின் முன்மாதிரி அமைச்சராக திகழும் இவர் வாழ்க்கையில் மலரும் கண்ணியமான காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே கதை ,

கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் ,கதாநாயகியாக அட்சயா கண்டமுத்தன் அறிமுகமாகிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார் ராமகிருஷ்ணா படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . பிர்லாபோஸ், ஸ்ரேவன், ‘கலக்க போவது யாரு’ மைக்கேல் அகஸ்டின், திவாகர் ,திடியன், ஈரோடு பிரபு மற்றும் அருணாச்சலம் ஆகியோர் நடிக்கின்றனர் . மிஸ் கனடா பட்டம் பெற்ற

கீ கீ வாலஸ் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது .தேனிசை தென்றல் தேவா இசையமைப்பில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகிறது. மேலும் 5 சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் இடம் பெறுகிறது .

அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது..

 

தொழிற்நுட்ப கலைஞர்கள்

திரைக்கதை, இயக்கம் – ஜெய் ஆகாஷ்

இசை – தேனிசை தென்றல் தேவா

ஒளிப்பதிவு – V. E.இளையராஜா

பாடல்கள் – சினேகன், மதன் கார்க்கி.

கதை, வசனம் – T.ஜெயலஷ்மி

எடிட்டர் – ஆண்டனி

நடனம் – ஸ்ரீதர் ,தினா

ஸ்டண்ட் – ஜாக்குவார் விஜய்

கலை – பூபதி

மக்கள் தொடர்பு – செல்வரகு

நிர்வாக தயாரிப்பு – சலங்கை துரை

You May Also Like

More From Author