” ஸ்ரீ புரந்தரதாசர் ” மேடை நாடகம் : ஓர் பார்வை ( மதிஒளி ராஜா )

” ஸ்ரீ புரந்தரதாசர் ” மேடை நாடகம் : ஓர் பார்வை ( மதிஒளி ராஜா )

ஸ்ரீ அன்னை கிரியேஷன்ஸ் சார்பாக மேனேஜர் சீனா பரத்வாஜ் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ஆன்மீக பக்தி நாடகமே ” ஸ்ரீ புரந்தரதாசர் “.

( தயாரிப்பாளர் & தயாரிப்பு நிர்வாகம் – மேனேஜர் சீனா பரத்வாஜ் தன் தந்தை பிரபல திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் மேடை நாடக புகழ் மேனேஜர் சீனா உடன் )

கதை சுருக்கம் :-
சீனிவாச நாயக்கர் பண பித்து பிடித்தவர் நவக் கோடி நாராயணன் என அனைவராலும் அழைக்கபடும் இவர் தசக் கோடி தாமோதரன் என அழைக்கப் பட வேண்டும் என பேராசைப் பட்டு எப்போதும் பணத்தை வட்டிக்கு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார். யாருக்கும் எக்காரணம் கொண்டும் ஒரு பைசா கூட தானம் தராமல் கஞ்சத்தனமாக வாழ்கிறார். இவரது மனைவி சரஸ்வதி கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர்.

அரசர் கிருஷ்ணதேவராயருக்கே வட்டிக்கு பணம் கொடுக்கும் அளவு சீனீவாச நாயக்கர் வட்டி தொழிலை செய்து வருகிறார்.

கடவுளை பாராமுகமாக இருந்து வரும் சீனிவாச நாயக்கர் மகான் வியாசராஜர் அவர்களையும் அலட்சியம் செய்கிறார். ஆனால், கடவுள் சித்து வேலை செய்து சீனிவாச நாயக்கருக்கு பணம் மீதுள்ள மோகத்தை மாற்றி உண்மையான பரம்பொருள் இறைப்பணியே என உணர்த்தி ஆன்மீகத்தில் ஈடுபட செய்கிறார். சீனிவாச நாயக்கர் யாரை இழிவு செய்தாரோ அதே வியாசராஜரிடம் சீடராக சேர்ந்து அவர் வாயிலாக ஸ்ரீ புரந்தரதாசராகிறார்.

புரந்தரதாசராகி தான் சம்பாதித்த செல்வங்களை ஏழை மக்களே எடுத்துக் கொள்ள அப்படியே கொடுத்து விட்டு தினமும் வீதி வீதியாக சென்று அரிசி வாங்கி தனது குடும்பத்தை நடத்துகிறார்.

இவரது இசைக்கு அனைவரும் ரசிகர்களாக மாறி விடுகிறார்கள். கோயிலில் ஒருமுறை பாடும் போது அதனை கேட்ட தாசி அந்த இசையில் மயங்கி தனது இல்லத்திற்கு வந்து அங்கு தங்களது பாடலுக்கு தான் நாட்டியம் ஆட வேண்டும் என வேண்டுகோள் விடுகிறார். அப்படியே ஸ்ரீ புரந்தரதாசர் தாசி வீட்டுக்கு சென்று அவரது நாட்டியத்திற்காக பாடல் பாடியதோடு மட்டுமில்லாமல் கங்கணத்தை பரிசளிக்கிறார். மறுநாள், கோயிலில் இருந்த கடவுளின் கங்கணம் காணவில்லை என கோயில் அர்ச்சகர் அமைச்சசரிடம் புகார் அளிக்கிறார்.

அச்சமயம், அந்த கங்கணத்தை தன் கையில் அணிந்து தாசி சாமியை தரிசிப்பதை பார்த்த அர்ச்சகர் இந்த கங்கணம் பகவானுடையது தான் என உறுதியாக அமைச்சரிடம் கூற, அமைச்சர் தாசியை விசாரணை செய்ய அப்போது தாசி புரந்தரதாசர் தான் தன் நாட்டியத்திற்காக தனக்கு பரிசளித்ததாக கூற, வீட்டில் இருந்த புரந்தரதாசர் அமைச்சரின் உத்தரவினால் காவலாளிகளால் கோயிலுக்கு இழுத்து வரப் படுகிறார். தனது மனைவியின் கண் முன்பே 100 சாட்டை அடி என தண்டனை வழங்கப் பட்டு கோயில் தூணில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்க புரந்தரதாசர் மேல் விழும் ஒவ்வொரு அடியும் கோயிலில் உள்ள கடவுள் மேல் விழுகிறது. அப்போது தான் தெரிகிறது புரந்தரதாசர் வடிவில் கடவுளே தாசியின் இல்லத்திற்கு சென்றுள்ளார் என இதனால் புரந்தரதாசருக்காக கடவுளே நேரில் வந்துள்ளார் என மக்கள் உணர்கின்றார்கள்.

புரந்தரதாசர் சிறுவர்களுக்கு ஏற்ற தாழ்வு பாராமல் சங்கீதம் கற்று தருகிறார்.

தனது மனைவி சரஸ்வதி மறைவுக்கு பின் திருப்பதி, காஞ்சிபுரம் என புனித ஸ்தலங்களுக்கு சென்று தனது பாடல்களால் கடவுளுக்கு இசை விருந்தளிக்கிறார். காலம் செல்ல செல்ல வயது முதிர்வு காரணத்தினால் ஜீவஜோதியாக இறைவனின் திருவடிகளை சென்று சேர்கிறார்.

ஸ்ரீ புரந்தரதாசர் இசைக்கு பிதாமகன் என்பதால் இந்த நாடகத்தில் பாடலுக்கு பஞ்சமில்லை. புரந்தரதாசர் பாடிய பாடல்கள் அனைத்தும் கன்னட பாடல்கள் என்பதால் அனைத்து கீர்த்தனைகளும் பாடலாக கன்னட மொழியிலேயே மிகவும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது இதற்காக இசையமைப்பாளரை பாராட்டியாக வேண்டும்.

ஆன்மீக பக்தி நாடகத்தை இப்படியும் ஜனரஞ்சகமாக நாடகமாக வழங்க முடியும் என நிருபித்துள்ளார் இயக்குனர் டாக்டர் டி. கிரிதர்.

சிறந்த நடிப்பால் அனைத்து நடிகர்களும் நாடகத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். மேடை அரங்கம், உடை அலங்காரம் மற்றும் அரங்க அமைப்பு மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அற்புதமான வசனம் வசனகர்த்தாவுக்கு வெற்றியில் மிகப்பெரிய பங்குள்ளது. மேடை திரைக்கதைக்கு சபாஷ் தேவையான காட்சிகளே ரசிக்கும் படி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

தொழில் நுட்ப வளர்ச்சி இந்நாடகத்திற்கு கை கொடுத்துள்ளது குறிப்பாக தலைப்பு மற்றும் பாடல் காட்சிகள் திரையில் வருவது சினிமா அளவு மேடை நாடகமும் வளர்ந்திருப்து மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பிரமாண்ட மேடை நாடகத்தை மிகுந்த பொருட்செலவில் மக்கள் சுயநலமாக பணம் பணம் தங்களது வாழ்க்கையை வீணடிக்க கூடாது. கடவுளை வணங்கி ஆன்மீகத்திலும், இறை இசையிலும் மனதையும், நேரத்தையும் ஒழுக்கத்தின் வழியில் தங்களை அர்பணிக்க வேண்டும் என அனைவரது மனதையும் மன சலவை செய்து தூய்மை அடைய வேண்டும் என நல்ல நோக்கத்தில் தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு நிச்சயம் பாராட்டுகள் பல ஆயிரம்.

நடிகர், நடிகைகள் :-

புரந்தரதாசர் & சீனீவாச நாயக்கர் – டாக்டர் டி. கிரிதர்
சரஸ்வதி – ராஜஸ்ரீ பட்
தாசி – கௌதமி வேம்புநாதன்
வியாசராஜர் – ஜெய்சூர்யா
கிருஷ்ணதேவராயர் – ராஜேந்திரன்
அமைச்சர் – டி.ஆர். பாலு
ஏழை பிராமணன் & அர்ச்சகர் – பிரகாஷ்
பட்டர் – ஆர்.எம். கோபாலகிருஷ்ணன்
குறவஞ்சி – குமாரி மாலினி
அப்பண்ணா – சரோ ராஜ்குமார்
சுப்பண்ணா – பார்த்தா பட்
சிஷ்யன் & மேய்ப்பன் – மாஸ்டர் அஜய்
பணக்கார பெண்மணி – கருணா சிவக்குமார்
பணிப்பெண் – கற்பகம்

தொழில் நுட்ப கலைஞர்கள் :-

மேடை அமைப்பு, உடைகள் & ஒப்பனை – வீஎன்எஸ் மனோகர் தியேட்டர்ஸ் ஆர். நாகராஜன்
ஒளி – மனோ லைட்ஸ் கே. மனோகரன்
ஒலி – மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் பாபு

மேடை நிர்வாகம் – பார்த்திபன்

இசை – எஸ். குகபிரசாத்

கதை & வசனம் – ஆலிலையன் & எம். துர்கா

இணை இயக்கம் – ராஜஸ்ரீ பட்

தயாரிப்பு – ஸ்ரீ அன்னை கிரியேஷன்ஸ்

தயாரிப்பாளர் & தயாரிப்பு நிர்வாகம் – மேனேஜர் சீனா பரத்வாஜ்

இயக்கம் – டாக்டர் டி. கிரிதர்

You May Also Like

More From Author