இலெமூரியா திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

இலெமூரியா திரைப்படத்தின் துவக்க விழா திருச்செந்தூர் அருகே உள்ள உவரியில் ஸ்ரீ சுயம்புலிங்கம் திருத்தலத்தில் (முதல் தமிழ் சங்கம் ) 27.10.21அன்று காலை 9 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது.  

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு  அமைச்சர் மனோ தங்கராஜ் (தமிழ்நாடு தொழில் நூட்பத்துறை ),மாண்புமிகு நீதியரசர் டாக்டர் பி.ஜோதிமணி (தலைமை கண்காணிப்பு குழு ஆணையம் ,தமிழ்நாடு )சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .

இப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் டாக்டர் த.இரவீந்திரா( இலெமூரியா உலகத்தமிழ் ஆய்வு மையம் ) தலைமை தாங்கினார் .
ஜோதிடர் நெல்லை வசந்தன் ,சர்வதேச விளையாட்டு வீரர் சமூக சிந்தனையாளர் டாக்டர் .மா ரா .சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார் .
இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது .தமிழர்கள் உள்ள 186
நாடுகளிலும் இப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது .

You May Also Like

More From Author