Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் சாண்டி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நம்பருக்கு சக்தி உண்டு. அந்த காலத்தில் எண்களை கடவுளின் குறியாக பாவித்து வணங்கி வந்தனர். குறிப்பாக 3 என்ற எண். இதனை முறியடிக்க தீய சக்திகள் 3 3 3 என்ற எதிர் மறை தீய சக்தியை உருவாக்குகின்றனர்.
படத்தின் நாயகன் சாண்டி 3.33 மணிக்கு பிறக்கிறார் அதனால் அவருக்கு இரவு 3.33 மணிக்கு எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறது அதனால் சாண்டிக்கும், அவரின் காதலி ஸ்ருதி செல்வம், அம்மா ரமா, அக்கா ரேஷ்மா, ரேஷ்மா சிறு வயது மகள், நண்பர்களுக்கு என்ன பிரச்சனை வருகிறது என்பதே 3.33 கதை.
முக்கிய கதாப்பாத்திரத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், பருத்திவீரன் சரவணன், மீம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒருவரது எதிர்மறை எண்ணங்கள் எப்படி ஒரு குடும்பத்தையும், சுற்றி இருக்கும் நண்பர்களையும் பாதிக்கிறது. எண்ணுக்கு உயிர் மற்றும் சக்தி உண்டு என்று இப்படம் பல ஆதாரத்துடன் நிரூபிக்கிறது.
முதல் முறை நாயகனாக சாண்டி நடித்திருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சாண்டி படம் பாடல் இல்லாமல் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்டுள்ளது. ஸ்ருதி செல்வம் காதல் காட்சியிலும், அசுர குரலில் பேசி பயமுறுத்தும் காட்சியிலும் சிறப்பாக செய்துள்ளார். ரேஷ்மா, ரமா மற்றும் சிறுமி நடிப்பு மிக அருமை.
ஒரு இரு காட்சிகளில் வந்தாலும் கெளதம் வாசுதேவ் மேனன், பருத்திவீரன் சரவணன், மீம் கோபி நடிப்பு படத்திற்கு பக்கபலம்.
இது போன்ற படத்திற்கு திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு, ஸ்டண்ட் மிக முக்கியம். அவை இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.
நல்ல பொழுதுபோக்கு த்ரிலர் படம் 3.33
ஒளிப்பதிவு : சதீஷ் மனோகரன்
இசை : ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
படத்தொகுப்பு :தீபக் S துவாரகநாத்
ஸ்டண்ட் : ஸ்டன்னர் ஷாம்
மதி ஒளி ராஜா