“7G” (7ஜி) திரைப்பட வெளிப்படையான விமர்சனம் – மதிஒளி ராஜா

ட்ரீம் ஹவுஸ் சார்பாக ஹாரூன் தயாரிப்பு – இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையில், சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், ஸ்னேகா குப்தா, சித்தார்த் விபின், சுப்ரமணிய சிவா, ரோஷன், கல்கி ராஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் “7G”.

வாடகை வீட்டிலேயே வெறுப்புடன் வாழ்ந்து, புதியதாக தங்களுக்கென்று புதிய அபார்ட்மென்ட் வீடு என்று சந்தோஷத்தில் ஸ்ம்ருதி வெங்கட். இந்த வீட்டை வாங்கிய ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் அவரது கணவர் ரோஷன்.

அக்கம்பக்கம் வசிப்பவர்கள் இந்த 7G அபார்ட்மென்டில் புதியதாக வந்தவர்களை வித்தியாசமாக பார்க்கிறார்கள். புதியதாக அபார்ட்மென்ட் வாங்கியதால், ஐடி நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு தனது வீட்டில் விருந்து தருகிறார்கள் ஸ்ம்ருதி வெங்கட் – ரோஷன் தம்பதியினர்.

ரோஷனை ஒரு தலை காதலாக கொண்ட ஸ்னேகா குப்தா தன் காதல் நிறைவேறாமல் போனதால் அந்த விருந்தில், மாந்த்ரீக சூனிய உருவத்தை வீட்டில் ஒளித்து வைத்து செல்கிறாள்.

ரோஷனுக்கு புரொமோஷன் கிடைத்து டிரெய்னிங் விஷயமாக வெளியூர் செல்கிறான். ஸ்னேகா குப்தா, ரோஷனின் புகைப்படம் வைத்து மாந்த்ரீக பூஜை செய்கிறாள்.

இதனால், ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் அவரது மகன் இருவரும் இந்த வீட்டில் உள்ள அமானுஷ்யத்தில் சிக்குகிறார்கள். இவரின் சிறுவயது மகன் அடிக்கடி மர்ம உருவத்துடன் பேசி வருகிறான்.

பக்கத்து வீட்டுக்காரர் சுப்ரமணிய சிவாவும், அவரது மனைவியும் சில உண்மைகளை இவரிடம் இருந்து மறைக்கிறார்கள்.

இவர்கள் என்ன விஷயத்தை ஸ்ம்ருதி வெங்கடிடம் மறைக்கிறார்கள்? சோனியா அகர்வால் மரணம் ஏன்? ஸ்ம்ருதி வெங்கட் – ஆவி சோனியா அகர்வால் இடையே வீட்டுக்காக நடக்கும் போட்டி எதற்கு? சோனியா அகர்வால் யாரை பழிவாங்க வேண்டும்? ஸ்னேகா குப்தா மாந்த்ரீகம் என்ன ஆனது?  கடைசியில் யாருக்கு வீடு சொந்தம்? இப்படி பல கேள்விகளுக்கு விடையை வெள்ளி திரையில் காண்க.

படத்தின் முதல் ஈர்ப்பு படத்தின் தலைப்பு 7G அதில் நாயகியாக நடித்த சோனியா அகர்வால். 7G ரெயின்போ காலணி 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வெற்றயடைந்தது.

அந்த மனநிலையில் படம் பார்க்க வருபவர்களா இருந்தால் மன்னிக்கவும். அந்த படத்திற்கும், இந்த படத்திற்கும் துளிக்கூட சம்பந்தமில்லை.

சோனியா அகர்வால் வரும்காட்சி தான் இடைவேளை. படம் முழுவதும் ஸ்ம்ருதி வெங்கட் மிரட்சி தான். ஸ்னேகா குப்தா கவர்ச்சி மற்றும் காமெடி என்று பயன்படுத்த பட்டிருக்கிறார். ரோஷனுக்கு ஸ்ம்ருதி வெங்கட் – ஸ்னேகா குப்தா இருவருடன் பாடலுக்கு வருவது. இளம் கணவன் கதாப்பாத்திரம் படத்திற்க்கு தேவைப்படுகிறது என்பதிற்காக வைக்கப்பட்டிருக்கிறது.

கதைக்காக ஒரு டுவிஸ்ட் அதற்காக ஸ்னேகா குப்தா இரண்டு பாடல்களில் ரசிகர்களை தனது இளமை கவர்ச்சியால் கட்டிப் போடுகிறார். நகைச்சுவையாக அவரது நிலைமாற கொஞ்சம் இவரது வேடத்தின் தரம் இறங்குகிறது.

சோனியா அகர்வால் ஆவியாகவும் – ஃபிளாஷ் பேக் காட்சியிலும் நன்றாக நடித்துள்ளார். அவரது காட்சிகளில் அழுத்தம் அதிகம் இல்லாததால் நீர்த்து போகிறது. இயக்குனர் சுப்ரமணிய சிவா – அவரது மனைவி இருவரும் சரிவர நடிக்கவில்லை வசனங்களை ஒபித்துவிட்டு போகிறார்கள்.

சித்தார்த் விபின் நடிப்பு அவரது பாத்திரத்திற்கு கொஞ்சம் இறக்கம். இந்த கதாபாத்திரம் இவருக்கு செட் ஆகவில்லை. ஒழுங்காக இசையமைத்து வந்த இவருக்கு ஏன் இந்த விபரீத விஷப்பரிச்சை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் எடுத்த நல்லப்பெயரை இதில் கெடுத்துக் கொண்டார்.

சுப்ரமணிய சிவா ஆவியை அழைத்ததும் உடனடியாக வருவது. நண்பரை காபி சாப்பிட வரியா என்று கூப்பிடுவது போல் அழைப்பதும் ஆவியும் கூப்பிட்ட குரலுக்கு வருவதும் படத்தின் போக்கை சித்தைத்து சிரிப்பை வரவைக்கிறது. அனைவரின் கண்ணிலும் தெனப்படும் ஆவியை இப்படத்தில் தான் பார்க்க முடிகிறது.

எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போல் ஸ்ம்ருதி வெங்கடுக்கு அடியாள் வேலை வேறுப்பார்க்கிறது சோனியா அகர்வாலின் ஆவி. கொடுமையிலும் கொடுமை உச்சபட்சம்.

ஸ்ம்ருதி வெங்கட் – ஸ்னேகா குப்தா – சோனியா அகர்வால் என்ற மூன்று அழகிகள். மூவரின் பங்களிப்பும் மூன்று விதமே. இரண்டு சிறுவர்கள் ஒருவர் ஸ்ம்ருதி வெங்கட் மகன் – சோனியா அகர்வால் மகன்களாக வருகிறார்கள். சிறப்பாகவே நடித்துள்ளனர்.

நகைச்சுவைக்காக செக்யூரிட்டியாக வருபவர் நிறைய காட்சிகள் இருப்பார், கதையில் டிவிஸ்ட்டுக்கு பயன்படுவார் என்றால், அவரும் நான்கு துண்டு காட்சிகள் தான் வருகிறார். அதுவும் எடுபடவில்லை. வில்லனை கொலைக்கு தூண்டும் ரௌடி வில்லன்களும் அதிக காட்சி வரவில்லை.

ஃபிளாஷ் பேக் காட்சி வலுவில்லை. இதற்காகவா கொலை என்று சப்பை கட்டு கட்டுவது இயக்குனரே, தயாரிப்பாளராய் இருப்பதால் மட்டுமே சாத்தியம். சித்தார்த் விபினின் இசையில் பாடலகள் சுமார் ரகம் – பின்னணி இசை தரம்.

ஒளிப்பதிவு கண்ணா மிக அருமை. சில வெளிப்புற காட்சிகள் தவிர ஒரே ரூமில், அது மட்டுமில்லாமல் விரல்விட்டு எண்ணக்கூடிய நடிகர்களை வைத்து இந்த அளவு ரிசல்ட் கொடுத்தது இவருக்கு சபாஷ் போடலாம்.

கலை இயக்கம் அந்த அளவு இப்படத்தில் வேலை இல்லை. படத்தொகுப்பு பாராட்டுக்குரியது. படத்தை சோர்வில்லாமல் கொண்டு செல்கிறார்.

கதை வழக்கமான கதையே, திரைக்கதை சிறிது சறுக்கல். வசனம் அளவானது. இயக்கம் குறை சொல்ல முடியாது நன்றாக அவர் பணியை செய்துள்ளார்.

ஒரே விஷயம் தான், இன்றைய ரசிகர்களை ரொம்ப குறைவாக எடைப் போட்டுள்ளார் இயக்குனர். உலக சினிமாவை விரல்நுனியில் வைத்து, பான் இந்தியா படங்களை விமர்சனம் செய்யும் அளவிற்கு அவர்களது திரை நுணுக்கங்கள், தொழில்நுட்ப அறிவுத்திறன் பறந்துவிரிந்து இருக்கிறது. இந்த நிலையில் இப்படி படத்தை எடுத்து அவர்கள் மத்தியில் உலவவிட்டால் இது போன்ற படங்கள் எடுபடுமா?

“7G” திரைப்படம் சுமார் ரகம்.

“7G” Movie Details :-

Actors

Sonia Agarwal
Smruthi Venkat
Siddharth Vipin
Sneha gupta
Subramaniam siva
Kalkiraja

Technicians

BANNER : Dream House
PRODUCER : Haroon
Directed and Produced by HAROON,
CINEMATOGRAPHY : Kannaa
EDITOR : Biju.V.Don Bosco
MUSIC : Siddharth Vipin
STUNT : Fire Karthik
MAKE UP : P Mariappan
HAIR DRESSER : Raveen
STILLS : Milan Seenu
LYRICS : Mohan Rajan, Kutty Revathi
SINGERS : Saindhavi, Priyanka, Rita Thyagarajan, Lokesh
CHOREOGRAPHY : Richy Richardson
PRO : Sathish (AIM)
PRODUCTION EXECUTIVE : KSK Selva
PRODUCTION MANAGER : K H Jagadeesh
SOUND PRODUCTION STUDIOS : Sathish kumar
SOUND MIXING : Harish
DI : Fire fox studios
PUBLICITY DESIGNER : Rajin krishnan M
MUSIC LABEL : MRT Music

#7gmoviereview #7gmovie #7greview #7g #7G #soniaagarwal #smruthivenkat #snehagupta #tamilmoviereview #movie #review #moviereview #movieupdate #audiencereview #audience #theatre #tgeatrereview #audienceopinion #theatreopinion #fansopinion #filmfans #fdfs #firstdayfirstshow #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author