“ஆலகாலம்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ஶ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர், இப்படத்தின் நாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஆலகாலம்”.

“ஆலகாலம்” என்றால் உயிரை கொல்லும் கொடிய விஷம். இப்படத்தில் மது போதையை “ஆலகாலம்” என்று இப்படம் சொல்கிறது.

ஆலகாலம் படத்தின் நாயகனாக இயக்குனர், தயாரிப்பாளர் ஜெய கிருஷ்ணமூர்த்தியே நடித்திருக்கிறார்.  உடன்,  நாயகனின் தாயாக ஈஸ்வரி ராவ், காதல் மனைவியாக சாந்தினி தமிழரசன், தீபா, சிசர் மனோகர், தங்கதுரை, கோதண்டம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவை சத்யராஜ் சிறப்பாக கவனித்திருக்கிறார். இசையை ரகுநந்தனும், படத்தொகுப்பை காசி விஸ்வநாதனும் அற்புதமாக செய்திருக்கிறார்கள்.

ஈஸ்வரி ராவ் அவர்களின் மகனாக வருகிறார் ஜெய கிருஷ்ணமூர்த்தி. ஈஸ்வரி ராவ் கணவர் கள்ள சாராயம் குடித்ததால்  உயிர் இழக்கிறார். அதனால் மது போதையை அறவே வெறுக்கிறார் ஈஸ்வரி ராவ். கிராமத்தில் தனது மகனை பாசத்தோடு, மது வாடையே இல்லாமல் வளர்த்து  தாய்மையின் கண்ணியத்தை காப்பாற்றுகிறார். பள்ளியில் இவரது மகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண் பெற்று, வெளி ஊரில் உள்ள கல்லூரி படிப்பிற்காக பட்டிணத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

 

கல்லூரி படிக்கும் போது, தன் உடன் படித்த சாந்தினியுடன் காதல் ஏற்படுகிறது, இன்னோரு பக்கம் சாந்தினியை காதலிக்கும் வில்லன். சாந்தினி – ஜெய கிருஷ்ணமூர்த்தி  இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்ததும். ஜெய கிருஷ்ணமூர்த்திக்கு குடிப் பழக்கம் கற்று கொடுத்து, மதுப் போதைக்கு ஆள் ஆக்குகிறான். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். தாய்க்கு தெரிந்தால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்று நினைத்து, தாயிடம் சொல்லாமல் மறைத்துவிடுகிறார் ஜெய கிருஷ்ணமூர்த்தி.

 

கல்லூரிக்குச் செல்ல முடியாமல், கூலி வேலைக்குச் சென்று தனது மனைவியை நன்கு கவனித்து வருகிறார் ஜெய கிருஷ்ணமூர்த்திக்கு. வேலை செய்யும் இடத்தில் பழைய ஜோக் தங்கத்துரையால் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார் ஜெய கிருஷ்ணமூர்த்தி.

இதனால் மிகக் பெரிய வில்லங்கம் நடக்கிறது – அது என்ன? தாய் ஈஸ்வரி ராவ்க்கு தன் மகன் திருமணம் – கல்லூரி படிப்பு பறிபோனது தெரியுமா? சாந்தினி வில்லன் மூலம் என்ன பாதிப்பை சந்திக்கிறார்? குடிபோதையில் இருந்து ஜெய கிருஷ்ணமூர்த்தி வெளிவந்தாரா? என பல வினாக்களுக்கு விடை திரையில் காண்க.

சாந்தினியின் நடிப்பு மிக அபாரம். தங்கதுரை, சிசர் மனோகர் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளனர், தீபா நடிப்பு மிக மிக அருமை. ஈஸ்வரி ராவ் இப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். நாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி முதல் பாதியில் வேறு பரிமாணமும், பின் பகுதி “அடே யப்பா” என்ன நடிப்பு பிரபல நட்சத்திரங்கள் கூட அருகே நிற்க முடியாது. அப்படி ஒரு நடிப்பு இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வில்லன் நண்பர்கள் உள்ளிட்ட நட்சத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள்.

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் ஒரு பாடலுக்கு ஆடி நம்மையும் ஆட வைக்கிறார். (முல்லை) கோதண்டம் கிராமத்து குடிக்காரனாக நன்றாக செய்துள்ளார்.

பாடல்கள் சிறப்பாக உள்ளது., பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார் இசையமைப்பாளர் NR ரகுனந்தன்.

ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. எழுத்தில் இருப்பதை காட்சியாக படைப்பதில் ஒளிப்பதிவுக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது என்பதை இப்படத்தின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இச்சமகால சமூகத்தில் இப்படியொரு படைப்பு நிச்சயம் தேவை என்றதொரு எண்ணத்தை கொண்டு வந்த இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.

“ஆலகாலம்” மக்களுக்கு தரமான செய்தியை நேர்த்தியாக சொல்லியிருக்கும் படம்.

#aalakalammoviereview #aalakalammovie #aalakalamreview #aalakalam

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author