“அமீகோ கேரேஜ்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

பீபிள் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பாக முரளி சீனிவாசன் தயாரிப்பில், பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன், GM குமார், அதிரா, ரம்யா, தாசரதி,  முரளிதரன் சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அமீகோ கேரேஜ்”.

பள்ளி பயிலும் மாணவ பருவத்தில் நண்பர்களுடன் ஜாலியாக விளையாடி, மது, புகை என்று தன் வாழ்வை கழிக்கிறார். இந்நிலையில் தன்னை விட வயதில் மூத்த பெண் ஒருவர் மீது ஒரு தலை காதல் கொள்கிறார் மாஸ்டர் மகேந்திரன்.

பள்ளியில் சேட்டை செய்ய, பள்ளி ஆசிரியர் தண்டனை தருகிறார். இதனால், அமீகோ கேரேஜ் நடத்திவரும் GM குமார் உதவியை தன் நண்பர்களுடன் நாடுகிறான் மாஸ்டர் மகேந்திரன்.

பிறகு, GM குமாருடன் நெருங்கி பழக வாய்ப்பு ஏற்படுகிறது. கல்லூரி வாழ்க்கை முடித்து, நல்ல வேலையுடன் கைநிறைய சம்பளம் என்று வாழ்கிறார். அங்கே வேலை செய்யும் ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த அதிராவை காதலிக்கிறான்.

இந்நிலையில், முரளிதரன் சந்திரன் அந்த பகுதியில் மிகப் பெரிய ரௌடி. இவரின் கையாளான தாசரதியோடு, மாஸ்டர் மகேந்திரனுக்கு மோதல் ஏற்படுகிறது.

இதனால், போதைக்கு அடிமையாகும் மாஸ்டர் மகேந்திரன். சில விஷயங்களை ஆரம்பத்திலே ஏன் தவிர்த்திருக்க கூடாது என நினைக்கிறான். போதையும் – அவசரத்தில் எடுக்கும் முடிவும் ஒருவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கும் என்பதை முடிவில் தான் உணர்கிறார்.

இதனால், என்ன என்ன விளைவு ஏற்படுகிறது?  தன் காதல் கை கூடியதா?யார் பக்கம் என்ன இழப்பு? மோதலால் பாதை எப்படி மாறுகிறது? என்பதை விறுவிறுப்பாக சொல்வதே “அமீகோ கேரேஜ்”.

மாஸ்டர் மகேந்திரனுக்கு ஏற்ற கதாப்பாத்திரம் மிக சிறப்பாக நடித்துள்ளார். நாயகி அதிரா நல்ல குடும்பபாங்கான முகம் நடிப்பும் அருமை. GM குமார் நாயகனுக்கு இணையான வேடம் தனது அனுபவ நடிப்பின் மூலம் சிறப்பாக செய்துள்ளார். தாசரதி – முரளிதரன் சந்திரன் மிக சிறப்பாக தங்களது வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருந்தியுள்ளனர். இருவரின் நடிப்பும் படத்திற்க்கு மிகப் பெரிய பலம்.

இன்னொரு நாயகி தீபா பாலு பார்க்க அழகுப் பதுமையாக இருக்கிறார் சில காட்சிகளே வந்தாலும் கவனத்தை ஈர்க்கும் பங்களிப்பு. நாயகனின் நண்பர்கள், அப்பா – அம்மா, ட்யூஷன் டீச்சர் என அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர்.

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் – பின்னணி இசை சூப்பர்.  விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவு மிக அருமை. ரூபன் – CS பிரேம்குமார் படத்தொகுப்பு படத்திற்க்கு பலம் கூட்டியுள்ளது.

பிரசாந்த் நாகராஜனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மிக நேர்த்தி. முதல் படம் என்று சொல்ல முடியாது அனுபவம் வாய்ந்த இயக்குனர் போல் படத்தை உருவாக்கியுள்ளார்.

“அமீகோ கேரேஜ்” நல்ல தரமான பொழுதுபோக்கு படம். நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும். நல்ல படம் பார்த்த திருப்தி தரும்.

‘Amigo Garage’ Movie

Cast:

‘Master’ Mahendran as Rudhra

GM Sundar as Anand

Athira as Tamil

Deepa Balu as Ramya

Dasarathi as Guru

Muralidharan Chandran as Muthu

Sirikko Udhaya

Madan Gopal

Sakthi Gopal

Murali Kamal

 

Crew:

Produced By – MURALI SRINIVASAN (PEOPLE PRODUCTION HOUSE)

Co-Produced By RAMACHANDRAN PERUMAL, PRIYA KATHIRAVAN, ASWIN KUMAR VG.

Director: PRASANTH NAGARAJAN

Editor: RUBEN – CS PREMKUMAR

Dop: VIJAYAKUMAR SOLAIMUTHU

Music: BALAMURALI BALU

Art: SRIMAN BALAJI

Stunt: DON ASHOK

Lyrics: Ku. KARTHIK

PRO: SATHISH (AIM)

Production Executive: S.R.LOGANATHAN

Publicity Design: SABA DESIGNS

An Action-Reaction Jenish Release

#amigogaragemoviereview #amigogaragemovie #amigogaragereview #amigogarage #fdfs #tamilmoviereview #moviereview #movie #review #film #cinema #flick #theatre #audience #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author