அவ்னி சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக குஷ்பூ சுந்தர் – பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பாக ஏசிஎஸ் அருண்குமார் தயார்ப்பில், சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி, தமன்னா, ராக்ஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கருடா ராம், VTV கணேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அரண்மனை 4”.
அரண்மனை என்பது தமிழ் சினிமாவில் முக்கியமான பிராண்ட்-ஆக மாறிவிட்டது. இந்த தலைப்பில் இதுவரை வெளிவந்த மூன்று பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
‘பாக்’ என்ற அமானுஷ்ய தீயசக்தியானது நிலத்திலும் நீரிலும் வாழும் ஆற்றல் பெற்றது. பிரம்மபுத்திரா நதிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத நிகழ்வாக ‘பாக்’ நதியிலிருந்து தப்பித்துவிடுகிறது.
சென்னையில் தன் அத்தையுடன் (கோவை சரளா) வழக்குரைஞராக வாழ்ந்து வருகிறார் சரவணன் (சுந்தர்.சி). காதல் திருமணம் செய்துகொண்டு, தன்னை விட்டுப் பிரிந்து போன தங்கை செல்வி (தமன்னா) மீது அளவில்லாத பாசம்.
10 வருடங்கள் கடந்த நிலையில் கணவர், மகன், மகளுடன் அரண்மனையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தமன்னா வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. தமன்னாவும் அவரது கணவரும் திடீரென இறந்து போக, இந்த செய்தி சுந்தர் சி-க்கு தெரிய வருகிறது.
இந்நிலையில், ஒருநாள் அவரது தங்கையும், தங்கையின் கணவனும் (சந்தோஷ் பிரதாப்) இறந்துவிட்டதாகச் செய்தி வரவே, அவர்கள் வாழ்ந்த பழைய அரண்மனைக்குச் செல்கிறார்.
இருவரின் மரணத்திலும் சந்தேகமிருப்பதையும் தங்கையின் குழந்தைகளுக்கு ஆபத்திருப்பதையும் உணரும் சரவணன், அதைக் தடுக்க முற்படும்போது அடுத்தடுத்து மர்ம மரணங்களும்,
அமானுஷ்ய சம்பவங்களும் நிகழ்கின்றன. தொடர் மரணங்களுக்கு யார் காரணம்? பாக்கிற்கும் இக்கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்? குழந்தைகளை சரவணன் காப்பாற்றினாரா? போன்ற கேள்விகளுக்கு விடை திரையில் காண்க.
சுந்தர் சி-யின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது, இயக்குனராகவும் பட்டையை கிளப்பி விட்டார். வழக்கமான ரிவெஞ் கதையை வைத்து போர் அடிக்காமல், Baak எனும் ஒரு புதிய விஷயத்தை வைத்து கதையை மாற்றி அமைத்து, திரைக்கதையை சுவாரஸ்யம் ஆக்கியுள்ளார்.
தமன்னா நடிப்பில் அனைவரையும் முந்தியுள்ளார். ராக்ஷீ கண்ணா அழகு பதுமையாக வந்துள்ளார். கோவை சரளா, யோகி பாபு, VTV கணேஷ், டெல்லி கணேஷ் நகைச்சுவை அருமை. கருடா ராம் மந்திரவாதியாக மிரட்டி இருக்கிறார்.
இசை ஹிப் ஹாப் ஆதி பாடல்கள் – பின்னணி இசை படத்திற்க்கு மிகப் பெரிய பலம்.
அதே போல் படத்தை பிரமாண்டமாக காட்டிய ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இரண்டுமே சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி, சுந்தர் சி பாணியில் மிரட்டலாக இருந்தது. சிம்ரன், குஷ்பூவின் நடனம் ஒரு பக்கமும், வில்லன் – ஹீரோவுக்கு இடையே உள்ள மோதலும் வேற லெவல். மேலும் அதற்காக போடப்பட்ட செட் மிகவும் பிரம்மாண்டம்.
அரண்மனையை கண்முன் கொண்டு வந்த விதத்தில் குருராஜின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது என்றாலும், அப்பட்டமாக செட்டிங் எனத் தெரியும் காடுகளையும் குகைகளையும் இன்னும் கூடுதல் சிரத்தையுடன் உருவாக்கியிருக்கலாம். நேர்த்தியில்லாத ‘கிராஃபிக்ஸ்’ காட்சிகளிலும் கூடுதல் உழைப்பைப் போட்டிருக்கலாம். அதே சமயம் க்ளைமாக்ஸில் பிரமாண்ட சிலைகள் செட், கோயில் செட், அதற்குள் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் போன்றவை பிரமிப்பூட்டுகின்றன.
சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி, திகில், விறுவிறு சேஸிங் போன்றவை அடுத்தடுத்து கச்சிதமான அளவில் கோக்கப்பட்டிருப்பதும், அவை ஒர்க் அவுட் ஆகியிருப்பதும் மொத்த படத்தையும் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக மாற்றியிருக்கின்றன. வழக்கமான பேய் ஃப்ளாஷ்பேக்கில் கொஞ்சம் மாற்றங்கள் செய்திருப்பதும் ஆறுதல்.
புதுமையான கதைக்களங்களும், சுவாரஸ்யமான திரைமொழிகளும் வரிசை கட்டி வந்து, சினிமாவின் ரசனையைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு `வழக்கமான’ டெம்ப்ளட் பேய் சினிமாவாக வந்திருக்கும் இந்த `அரண்மனை – 4′, கச்சிதமான ஒரு தியேட்டர் மெட்டீரியலாக மாறியிருப்பதால், ஒருவிதத்தில் அனைவரையும் ரசிக்க வைத்துத் தப்பிக்கிறது.
‘அரண்மனை – 4’ நிச்சயம் வெற்றிப்படம். அரண்மனை 5 எடுப்பதற்கு சுந்தர் சி தாராளமாக தயார் ஆகலாம்.
நடிகர்கள்
சுந்தர் .சி – சரவணன்
தமன்னா – செல்வி
ராஷி கண்ணா – மாயா
சந்தோஷ் பிரதாப் – இஞ்சினியர்
யோகி பாபு – மேஸ்திரி
டெல்லி கணேஷ் – ஜமீன்
கருடா ராம் – சுவாமி ஜீ
விடிவி கணேஷ் – கார்பெண்ட்டர்
கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.சி
தயாரிப்பு – குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd), ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd)
இசை – ஹிப்ஹாப் தமிழா
திரைக்கதை வசனம் – வேங்கட்ராகவன்
ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு – பென்னி ஓலிவெர்
கலை இயக்குனர் – குருராஜ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர்
நடனம் – பிருந்தா
பாடல்கள் – கோசேஷா, விக்னேஷ் ஶ்ரீ காந்த், முத்தமிழ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
#aranmanai4moviereview #aranmanai4movie #aranmanai4review #aranmanai4 #aranmanai #aranmanai4movie #moviereview #movie #review
மதிஒளி ராஜா