“பூமர் அங்கிள்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

அன்கா மீடியா தயாரிப்பில், தில்லை எழுத்தில், ஸ்வாதீஷ் எம்.எஸ். இயக்கத்தில், யோகி பாபு, ரோபோ சங்கர், MS பாஸ்கர், சேஷு,  ஓவியா, சோனா ஹைடன், மதுஶ்ரீ,  KPY பாலா, பழைய ஜோக் தங்கதுரை நடிப்பில் உருவாகியுள்ள படம் “பூமர் அங்கிள்”.

தற்பொழுது பெருமபலன 2K கிட்ஸ் Boomer Uncle என்று குறிப்பிட்ட நபர்களை அழைக்கின்றன இதற்கு என்ன காரணம்.

பொதுவாக ஒருவர் தன்னை பற்றி பெருமையாக பேசினாலோ அல்லது மற்றவர்களுக்கு அதிகமாக அட்வைஸ் கொடுத்தாலோ அந்த அட்வைஸினை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அந்த அட்வைஸினை சொல்லியவர்களை திடவமும் முடியாமல் அவர்களை கலாய்க்கும் வகையில் கூறப்படுவது தான் Boomer Uncle என்ற வார்த்தை.

சோனா ஹைடன் யோகி பாபுவின் கிராமத்து அரண்மனை பற்றி விசாரிக்க சேஷுவை அழைக்கிறார். சேஷு மூலம் கதை சொல்லல் ஆரம்பிக்கிறது. யோகி பாபு தன் வெளிநாட்டு காதல் மனைவியை விவாகரத்து கேட்டு வழக்காடுமன்றதிற்கு வர, அவரது, வெளிநாட்டு காதல் மனைவி கொஞ்சநாள் யோகி பாபுவின் கிராமத்து அரண்மனையில் தங்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார்.

யோகி பாபுவின் கிராமத்து நண்பர்கள் சேஷு, KPY பாலா, பழைய ஜோக் தங்கதுரை மூன்று பேரும் யோகி பாபுவால் பாதிக்கப்பட்டு பழிவாங்க துடிக்கின்றனர். இவர்கள் மூன்று பேர் மட்டுமல்லாமல் ஊர் நாட்டாமை ரோபோ சங்கரும் பாதிக்கப்பட்டு பழிவாங்க காத்து கொண்டு இருக்கிறார்.

யோகி பாபுவின் மனைவி அவரது உதவியாளர்களும் கிராமத்து அரண்மனையில் தங்க வருகிறார்கள். யோகி பாபுவை பழிவாங்க சேஷு, KPY பாலா,  தங்கதுரை, ரோபோ சங்கரும் அரண்மனைக்குள் வருகிறார்கள்.

யோகி பாபுவின் மனைவி ஏதோ திட்டத்துடன் தான் யோகி பாபுவை திருமணம் செய்து அதன் வழியாக கிராமத்து அரண்மனைக்குள் வருகிறார்கள்.

அந்த அரண்மனையில் என்ன ரகசியம் இருக்கிறது? யோகி பாபு  தன் மனைவியின் சதி திட்டத்தை புரிந்துகொண்டாரா? பழிவாங்க அரண்மனைக்கு வந்த 4 பேரும் பழி வாங்கினார்களா? தன்னை சுற்றி இத்தனை விஷயங்கள் நடப்பதை யோகி பாபு தெரிந்து கொண்டாரா? சோனா ஹைடன் விசாரணையின் பயன் என்ன? இதில் கவர்ச்சி புயல் ஓவியாவின் பங்கு என்ன? நாயகியாக வரும் வெளிநாட்டு மனைவியின் உதவியாளர் கதைக்கு அதற்காக தான் தேவை என்பதால் வருகிறாரா? என பல வினாக்களுக்கு விடை திரையில் காண்க.

வழக்கம் போல் யோகி பாபு இப்படத்திலும் சிக்ஸர் அடித்துள்ளார். இரண்டாவது நாயகன் என்று சொல்லும் அளவுக்கு சேஷு தன் பங்குக்கு மிக சிறப்பு செய்துள்ளார். KPY பாலா, பழைய ஜோக் தங்கதுரை, MS பாஸ்கர் சிறப்பாக நடித்துள்ளனர். ஓவியா இளமையும் – கவர்ச்சியும் படத்திற்க்கு பிளஸ் பாயின்ட். அதே போல் நாயகியாக வரும் உதவியாளர் தனது இளமை மூலம் ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறார். வெளிநாட்டு மனைவி வில்லி வேடம் அற்புதமாக செய்துள்ளார்.

மந்திரவாதி சாமியார் செய்யும் சேட்டைகள் அதிக அளவில் ரசிகர்களை சிரிக்க வைக்கும். யோகி பாபு தவிர, உதவியாளர் பெண் மீது அனைவரும் ஜொள்ளு விடுவது அவரை கவர்வதற்காக இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் சிரிப்புக்கு உத்திரவாதம். ரோபோ சங்கரும் ஹல்க் போல் மாறி செய்யும் வில்லன்தனம் ஆக சிறப்பாக இருக்கும். ஓவியா ஹாலோகிராம் ஃபிக்ஷன் மிக அற்புதம்.

நகைச்சுவை படம் லாஜிக் மீறி மேஜிக் செய்து ஜெய்த்துள்ளனர். படத்திற்க்கு தில்லையின் வசனம் மிகவும் உதவியுள்ளது. திரைக்கதை அருமை. பிரபல நட்சத்திரங்கள் இப்படத்தில் அதிகம் இவர்களை அற்புதமாக பயன்படுத்தி தனது ஆளுமையை சிறப்பாய் வெளிப்படுத்திய ஸ்வாதீஷ் எம்.எஸ் இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.

சாந்தன் – தர்ம பிராகாஷ் இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் இசை மற்றும் பின்னணி இசை மிக சிறப்பு. ஒரே அரண்மனைக்குள் முழு படமும் செல்வதால் ஒளிப்பதிவாளர் மிக சிறந்த சவால். அதை அற்புதமாக கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணி. இளையராஜாவின் படத்தொகுப்பு படத்தின் திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது. PA ஆனந்த் கை வண்ணத்தில் கலை இயக்கம் சிறப்பு. குறிப்பாக, அரண்மனை வீடு அதை உருவாக்கிய விதம், கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் வரும் இப்படத்திற்கு கொடுத்த இடத்தில் அபாரமாக தனது திறமையை காட்டியுள்ளார். நடனம் – சண்டைக்காட்சிகள் மிக அருமை.

யோகி பாபுவை ஒரு சில காட்சி மட்டும் பயன்படுத்தி அவரது பெயரை உபயோகப்படுத்தி பல படங்கள் வெளியாகி யோகி பாபுவின் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. ஆனால், இப்படத்தில் தேவயையான அளவு வருகின்றார். சேஷு, KPY பாலா, பழைய ஜோக் தங்கதுரை படம் முழுவதும் ஆட்கொண்டு சிறப்பாக செய்துள்ளனர். இளமை ததும்பும் உதவியாளர் தன் வசீகர அழகினால் ரசிகர்களை கவர்கிறார்.

“பூமர் அங்கிள்” சிரிப்புக்கும், ரசிப்புக்கும், இளமைக்கும், கவர்ச்சிக்கும் பஞ்சம் வைக்காத படம். பாடல்கள் திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போடவைக்கும்.

“BOOMER UNCLE” Movie

Cast and Crew Details :-

Produced By: Anka Media

Worldwide Release: Avs Entertainment SS Prabhu

Actor – Filmi name

Yogibabu – Nesam
Oviya. – Oviya
Bala. – Billa
Thangadurai- vallarasu
Shesu. – Dawood

Crew Details:

*Yogi Babu, Oviya, Robo Shankar, M.S. Bhasker, sheshu, bala, Thangadurai, Sona, Madhanbabu*

Written by : Thillai

Directed by: Swadesh MS

DOP: Subash dhandabani

Editor: Elayaraja S

Music: Santhan & Dharma Prakash

Art Director: P A Anand

Stunts: Suresh

Costume designer: Rebecca Maria

PRO : A. John

#boomerunclemoviereview #boomerunclemovie #boomerunclereview #boomeruncle

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author