“பைரி பாகம் – 1” (புறா பந்தய கதைக்களன்) திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

DK புரோடக்ஷன்ஸ் சார்பாக V துரைராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில், சையத் மஜித், விஜிசேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், ராஜன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பைரி”.

புறா பந்தயத்தை மையமாக கொண்ட கதை. வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லல் ஆரம்பிக்கிறது. “பைரி” என்பது புறாக்களை வேட்டையாடி இரையாக்கும் கழுகின் பெயர்.

 

கன்னியாகுமரியில் உள்ள அறுகுவிளை பகுதியில், தலைமுறை தலைமுறையாக புறாக்களை வளர்த்து பந்தயத்திற்கு விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதனாலேயே குடும்பம் சீரழிந்து விடும் என்று கருதி இந்நிலையில், சையது மஜீத்தும் ( ராஜலிங்கம்) அந்த பகுதி வாசிகளுடன் சேர்ந்து புறா பந்தய போட்டியில் ஈடுபட்டு படிப்பையும், வாழ்க்கையையும் கோட்டை விட்டுவிடுவாரோ என்ற பயம் மஜீத்தின் தாயாருக்கு (விஜி சேகர்) இருந்தது. இதனால் தனது மகனை புறா பந்தயத்தையும், அதை சார்ந்தவர்களிடமும் பழகவிடாமல் தவிர்த்து வந்தார்.

இருந்தாலும், மஜீத்துக்கு புறா மீதான ஆசை விடவில்லை எனவே தன் வீட்டின் மாடியில் புறாவை வளர்க்க ஆரம்பிக்கிறார். தாயாருக்கோ பிடிக்கவில்லை. புறா வளர்த்தால் தான் படிப்பேன் என அடம் பிடித்து புறா வளர்க்கிறான். ரமேஷ் பண்ணையார் (ரமேஷ் ஆறுமுகம்) புறா அதிக நேரம் பறந்து சாதனை படைத்ததும், இவனுக்கும் புறா பந்தயத்தின் மீது ஆசை விளைகிறது. அம்மாவுக்கு தெரியாமல் புறாக்களை பந்தயத்திற்க்கு தயார் செய்கிறான். இன்னொரு பக்கம் புறா பந்தயத்தில் சுயம்பு (வினு லாரன்ஸ்) அணி பந்தயத்தில் கள்ளத்தனம் செய்கிறது. சுயம்பு மிகப் பெரிய ரௌடி, பல கொலை வழக்குகள் அவன் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மஜீத் மீது தீரா காதல் கொண்டு வாழும் முறைப்பெண் சித்ரா (சரண்யா ரவிச்சந்திரன்). தன் பள்ளிக்காலம் முதல் மஜித் காதலிக்கும் பெண் ஷரோன் (மேக்னா எல்லன்) என முக்கோண காதல். மஜித் – அமுல் நட்பு, புறா பந்தயம், ரமேஷ் பண்ணையார் மீது விசுவாசம், படிப்பு படிப்பு என்று சொல்லியே குடும்பத்தை ஏமாற்றுவது, புறா பந்தயம் என்று கதை நல்ல முறையில் சந்தோஷமாக பயணிக்கும் போது, சுயம்பு அணி செய்யும் சதி. இந்த சதியில் சிக்கிக்கொண்டு போராடும் மஜீத் மற்றும் அவனது நண்பன் அமுல் (இயக்குனர் ஜான் கிளாடி) இறுதியில் மஜீத் – அமுல் நிலை என்ன ஆகிறது என்பது தான் படத்தின் மீதி கதை.

வில்லுப்பாட்டி வழியே கதையை பாட காட்சிகளும் அதற்கு ஏற்ற வாறு அமைந்திருப்பது படத்தின் ப்ளஸ் பாயிண்ட். எந்த திசையும் திரும்பாமல் புறா பந்தயத்தின் அடிப்படை காட்சிகளையே மையமாக வைத்து நகர்கிறது. அப்படி காட்சிகள் நகர்ந்தாலும் மேக்கிங் மற்றும் விறு விறு காட்சிகள் இருந்ததால் சற்றும் சலிப்பு அடிக்கவில்லை.

நடித்த அனைவரும் புதுமுகங்கள் ஆனால், அனைவரின் நடிப்பும் விருது பெறக்கூடிய வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. அம்மா, மஜித், அமுல், சித்ரா, ரமேஷ் பண்ணையார் கதாப்பாத்திரங்கள் மேலும் மிக சிறப்பு.

கதைக்களம், வசனம், திரைக்கதை, இயக்கம் சபாஷ் போட வைக்கிறது.

AV வசந்த குமார் அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அருண் ராஜ் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை ஆர் எஸ் சதீஷ் குமார் தரமாக கவனித்திருக்கிறார். கலை இயக்கம் பணிகள் அபாரம்.

“பைரி” திரைப்படம் இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் சேரும் என்பதில் சிறிது கூட சந்தேகமில்லை. இவ்வாண்டின் சிறந்த படங்களின் வரிசையில் “பைரி”யும் இருக்கும்.

 

BYRI part 1 Movie – CAST :-

Syed Majeed – rajalingam

Meghana Ellen – sharon

Viji Sekar – saraswathi (Amma)

John Glady – Amal

Saranya Ravichandran – Chithra

Ramesh Arumugam – ramesh pannaiyar

Vinu Lawrence – suyambu

Anand Kumar – Thirumal (rajalingam Appa)

Karthick Prasanna – villiyam

Francis Kiruba – ravichandran (Chithra Appa)

Rajan – Amal Appa

CREW :-

Produced – V.Durai Raj

Written and directer – John Glady

DOP – A.V. Vasantha Kumar

Music director – Arun Raj

Editor – R.S.Sathish Kumar

Fight master – Vicky

Art directer – Anish

Choreography – Srikrish

SFX – Sathish

Sound design – Raja Nallaiah

Costume design – Dinesh ft

Makeup – Kumaresan

VFX – Sekar Murugan

Lyrics – Karthik Netha, Mohan Rajan, Pon manoban

DI – Get in dream studios

Co Director – Ganga Ram,

Associate Director – S. Panneer Selvam,

First Assistants – Mahesh Casber, Jaiso’n.

Executive producer – Pon Manoban, Dinesh Kumar

stills – A.J.J jovieh

Designs – Design point

Lyric video – Fix it in post Promotion

Production Manager – S.Mariyappan

PRO – Nikil Murukan

#byrimoviereview #byrimovie #byrireview #byri #fdfs #moviereview #movie #review #tamilfilmreview #tamilmoviereview #audience #theatre #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author