ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக கல்பாத்தி S அகோரம், கல்பாத்தி S கணேஷ் & கல்பாத்தி S சுரேஷ் தயாரிப்பில், செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, எல்லி அவ்ராம், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், நமோ நாராயணன், நாசர், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் “கான்ஜூரிங் கண்ணப்பன்”.
சந்திரமுகி, காஞ்சனா, தில்லுக்கு துட்டு வரிசையில் காமெடி கலந்த அமானுஷ்ய படம். கதையின் நாயகன் நகைச்சுவை நடிகர் சதீஷ். வேலை தேடும் வீடியோ கேம் மேக்கர். ஒரு நாள் வேலைக்காக இன்டர்வியூ செல்லும் அவசரம், வீட்டில் தண்ணீர் வரவில்லை என்பதால் அவசரத்திற்கு வெகுநாட்கள் பூட்டி இருந்த பழைய கிணறு அதில் இருந்து தண்ணீர் எடுக்கும் போது மாய பொருள் அதனுடன் சேர்ந்து வருகிறது.
பல முறை அதை கிணறில் போட்டாலும் மீண்டும் மீண்டும் அவரிடமே வருகிறது. அந்த மாய பொருளில் இருந்து இறகை பிடிங்கியதால் பேய் இருக்கும் மாய மாளிகைக்குள் மாட்டி கொள்கிறார். பின்னர் எழுந்தவுடன் சகஜ நிலைக்கு வருகிறார். ஆனால், மாய மாளிகையில் ஏற்பட்ட பாதிப்பு இவரது இயல்பு நிலைக்கும் தொடர்கிறது.
பின் என்ன :-
யார் யார் இறகை பிடிங்கினார்கள்? அவர்கள் நிலை என்ன? மாய பொருள் என்ன? ஏன் சதீஷ் கையில் கிடைத்தது? மாய மாளிகை ஏன்? மாய மாளிகையின் மர்மம் என்ன? பேய் ஏன் மாளிகைக்குள் இருக்கிறது? மாளிகைக்குள் சென்றவர்கள் நிலை? என்ன என்பதை நகைச்சுவை கலந்து மிரட்டலாக சொல்லப் படுகிறது.
நாயகன் சதீஷுக்கு அளவெடுத்து உருவாக்கிய கதை நன்றாக பொருந்தியுள்ளது. சிறப்பாக செய்துள்ளார்.
சரண்யா பொன்வண்ணன், VTV கணேஷ், நமோ நாராயணன் குடும்ப நகைச்சுவை அற்புதம், ஆனந்த்ராஜ் – ரெடின் கிங்ஸ்லி – ஆதித்யா கதிர் நகைச்சுவை அருமை.
நாசர் நடிப்பு சிறப்பு. வெள்ளை காரகள் காட்சிகள் படத்திற்கு பிளஸ் பாயின்ட். நாயகி ரெஜினா கசன்ரா நடிப்பு – இளமை – கவர்ச்சி ரசிகர்களை ஈர்க்கும்.
இசை யுவன் ஷங்கர் ராஜா படத்தின் மிகப் பெரிய பலம். பின்னணி இசை மிரட்டல். ஒளிப்பதிவு அருமை. கலை இயக்கம் பாராட்டுக்குரியது. படத்தொகுப்பு மிக சிறப்பு.
சிரிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறது. பஞ்சமில்லா நகைச்சுவை. அனைத்து கதாப்பாத்திரம் நம்மை விலா எலும்பு நோக சிரிக்க வைக்கின்றனர்.
இயக்குனருக்கு நிச்சயம் பெரிய வெற்றி இப்படத்தின் மூலம் கிடைக்கும். பொழுப்போக்கு தூக்கலான படம் “கான்ஜூரிங் கண்ணப்பன்”.
CONJURING KANNAPPAN
CAST:-
KANNAPPAN – SATHISH
DARK DAVES – REGINA CASSANDRA
LAKSHMI – SARANYA PONVANNAN
ANJA NENJAN – VTV GANESH
EXORCIST EZHUMALAI – NASSAR
DEVIL ARMSTRONG – ANANDRAJ
Dr. JOHNNY – REDIN KINGSLEY
SODA SEKAR – NAMO NARAYANA
KADAPAARAI – ADITHYA KADHIR
MAGDALENE – ELLI AVRRAM
WILLIAM – JASON SHAH
ROBERT – BENEDICT GARRETT
CREW:-
DIRECTOR: SELVIN RAJ XAVIER
CINEMATOGRAPHER: S. YUVA
MUSIC DIRECTOR : YUVAN SHANKAR RAJA
ART DIRECTOR : MOHANA MAHENDRAN
EDITOR PRADEEP: E . RAGHAV
STUNT MASTER: MIRACLE MICHAEL
SPECIAL MAKEUP ARTIST: PATTANAM RASHEED
MAKEUP ARTIST: KUPPUSAMY
COSTUME DESIGNER: MEENAKSHI N
COSTUMER : V PRASAD
Banner: AGS Entertainment
Produced by Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Suresh
Creative Producer: Archana Kalpathi
Associate Creative Producer: Aishwarya Kalpathi
Executive Producer: S.M.Venkat Manickam
PRO: Nikil Murukan
#conjuringkannappan #conjuringkannappanmovie #conjuringkannappanreview #conjuringkannappanmoviereview #fdfs #fdfsreview #audience #audiencereview #theatre #theatrereview #movie #review #moviereview #boxoffice
மதிஒளி ராஜா