“டெவில்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

மாருதி ஃபிலிம்ஸ் – H பிக்சர்ஸ் சார்பாக R ராதாகிருஷ்ணன் & S ஹரி தயாரிப்பில், சவரக்கத்தி திரைப்பட இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில், இயக்குனர் மிஸ்கின் இசையில்,  வித்தார்த் – பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் “டெவில்”.

வித்தார்த் – பூர்ணா இளம் திருமண ஜோடி, பூர்ணாவின் காரில் அடிப்பட்டு ரோஷனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. தன்னால் தான் விபத்து ஏற்பட்டது என்று பூர்ணா, ரோஷனை கவனித்து கொள்ள அதுவே இருவருக்குள்ளும் ஆசை விளைகிறது.

வித்தார்த் ஒரு வக்கீல், அவருடன் பணியாற்றும் உதவியாளர் சோபியாவுடன் உறவு ஏற்படுகிறது. இதனால் திருமணமான புதிதில் கூட மனைவி பூர்ணாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விடுகிறார்.

வித்தார்த். கணவன் மனைவி இருவரும் வேறு உறவுடன் தொடர்பு என கதை செல்ல, வித்தார்த் – பூர்ணா இருவருக்குமே ரகசியம் தெரிய வருகிறது. வித்தார்த்தை ஏமாற்றுகிறார் அவரது கள்ளக்காதலி அதனால், மனம் திருந்தி பூர்ணாவிடம் மன்னிப்பு கேட்க, பூர்ணாவும் தன் காதலனிடம், தன் கணவனுடன் மட்டுமே வாழ போவதாக கூறி வந்து விடுகிறார்.

தன் கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்று அவரை பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவருக்கு துரோகம் செய்ய நினைக்கும் மனைவி சந்திக்கும் சிக்கல்கள் எத்தனை என்பதை சொல்வதோடு மட்டுமில்லாமல், மனைவியும் – கள்ளக்காதலி இருவரும் தனக்கு துரோகம் செய்து விட்டார்கள் என இரட்டை வலியின் சுமையை வித்தார்த் தவறு செய்து வருந்தும் கணவர்களின் பிரதிநிதியாக சிறப்பாக விளக்கம் வழங்கியுள்ளார்.

இயக்குனர் மிஸ்கின் வரும் காட்சிகள் மர்மாகவே இருக்கிறது. படத்தின் போக்கை மாற்றி அமைக்கும் கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்படும்.

பின் நடப்பது என்ன? பல சிக்கல்கள் அவ்வளவு எளிதாக முடியுமா? தப்புக்கு தண்டனையா? இரு உறவுமுறை என்ன பிரச்சனை தரும்? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

டெவில் என்றால் பிசாசு என்று அர்த்தம். தன் மன ஒழுக்கம் தவறி முறையற்ற விதத்தில் பல உறவு வைத்து கொள்ளும் மனதே “டெவில்”.

இன்றைய சமூக நிலைப்பாட்டுக்கு அவசியம் தேவையான கதை. முறையற்ற உறவு என்ன விபரீதம் தரும். ஒழுக்கம் மிக முக்கியமான விஷயம் என்று வலியுறுத்தும் படம்.

ஒருவருக்கு ஒருவர் என்று வாழும் காலம் மாறி நம்பியவருக்கு துரோகம் செய்து வாழும் இந்த காலக்கட்டம் எப்படி என்று வெட்ட வெளியில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர்.

இயக்குனர் மிஸ்கின் இசையில் – பாடல் வரிகள் அனைத்து பாடல்களும் அற்புதம். பின்னனி இசை படத்திற்கு ஜீவனாக விளங்குகிறது. கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு சர்வதேச திரைப்படம் போல் காட்சிகளை நம் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது. S இளையராஜா படத்தொகுப்பு காட்சிக்கு காட்சி ரசிகர்களை இருக்கையில் கட்டி வைக்கும்.

ஆர்ட் டைரக்டர் சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக ஒவ்வொரு ஃப்ரேம் பார்க்கும் போதும் பிரமாண்டம். ஒயிட் ஷாட் (Wide Shot) பிரமிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளரும் – கலை இயக்குனரும் கைகோர்த்து இப்படத்திற்கு சிறப்பு செய்துள்ளனர்.

நாயகி பூர்ணா நடிப்பில் ஆட்சி செய்துள்ளார். சோபியா கிளாமர் கேர்ள் தன் கவர்ச்சி மூலம் ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறார்.  ரோஷன் (Thrigun) ஒரு பைக்கர் (Biker) நல்ல வாட்டசாட்டமான உடல்பயிற்சி செய்த தேகம் இளவட்டங்கள் தன் பின்னால் சுற்ற வைப்பார்.

திரைக்கதை நிறைவாக உள்ளது. வசனம் தேவையான அளவு இதுவே படத்திற்கு பலம்.

“டெவில்” திரில்லர் டிராமா படம். அடுத்த காட்சி என்ன என்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். நல்ல சுவாரஸ்யமான படம். பொழுதுபோக்குக்கு உத்திரவாதம்.

*Devil Cast & Crew List*

 

CAST:

• Vidharth as Alex

• Thrigun as Roshan

• Poorna as Hema

• Subhashree as Sophia

 

CREW:

• Banner – Maruthi Films & H Pictures

• Produced By – R.Radhakrishnan & S.Hari

• co-producer – P.Gnaanashekar

• Written and directed by – Aathityaa

• Music – Mysskin

• Director of photography – Karthik Muthukumar

• Editor – Elayaraja.s

• Art Director – Antony maria kerli

• Lyrics – Mysskin

• Sound Mix – Tapas Nayak

• Sound Design – S.Alagiakoothan

• Co-Director – R.Balachandar

• Colorist – Rajarajan Gopal

• Stunt – Ramkumar

• Costume Design – Shaima Aslam

• Stills – Abhishek raj

• Publicity Design – Kanadasan DKD

• VFX – ARTFX STUDIO

• VFX supervisor – T.Mathavan

• Production Executive – S.Venkatesan

• PRO – Sathish kumar

• Promotions – KV Durai DEC

• Line producer – Lv srikanthlakshman

#devilmoviereview #devilmovie #devilreview #devil #tamilmoviereview #moviereview #movie #review #fdfs #boxoffice #audience #theatre #audiencereview #theatrereview

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

 

 

You May Also Like

More From Author