DOLITTLE (ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)
தயாரிப்பு – யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம்
வெளியீடு – ஜனவரி 17
இறைவனின் படைப்பில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனியொரு செயல்திறன் தவறாமல் அமைந்திடும் என்பது இயற்கையின் நியதி. திறமை வாய்ந்த மிருக வைத்தியரான டுலிட்டிலுக்கும் மிருகங்களோடு பேசுகிற ஒரு திறனுண்டு. ஹு லாஃப்டிங் என்பவர் குழந்தைகளுக்காக எழுதிய ஒரு நாவல் தொடர்தான் டாக்டர் டுலிட்டில். அவற்றை அடிப்படையாக வைத்து 1967 ஆம் ஆண்டு, ரெக்ஸ் ஹாரிசன் தலைப்பு வேடத்தில் நடித்திட்ட ஒரு படம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1998 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் எடி மர்ஃபி டாக்டர் டுலிட்டிலாக நடிக்க இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களாக இரு படங்கள் வெளிவந்தன. புத்தம் புதிய பதிப்பாக, ராபர்ட் ப்ரெளனிங் ஜுனியர் டாக்டர் டுலிட்டிலாக நடிக்க, சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ள படமிது.
தன் மனைவியை இழந்து 7 வருடங்களாகி விட்ட நிலையில், தனது பிரம்மாண்டமான டுலிட்டில் மாளிகையில், செல்ல மிருகங்களின் துணையை மட்டுமே தூணாகக் கருதி, தனிமையில் வாழ்ந்து வருகிறார் டாக்டர் டுலிட்டில்!
இங்கிலாந்து நாட்டு இளவரசி நோய்வாய்பட, மர்மத்தீவு ஒன்றிற்கு மருந்து தேடிப் புறப்பட்டுச் செல்லவேண்டிய நிர்பந்தம் உருவாக, வேறு வழியின்றிப் பயணப்படுகிறார் டாக்டர் டுலிட்டில்! டாமி ஸ்டபின்ஸ் (ஹேரி கொல்லட்), அவருக்கு உதவியாளராகப் பயணத்தில் சேர்ந்து கொள்கிறார்.
மற்றும்.ஒரு கொரில்லா, வாத்து, நெருப்புக்கோழி, கரடி மற்றும் கிளி ஆகியவையும் அவரது பயணத்தில் தம்மைப் பிணைத்துக் கொள்கின்றன. டாக்டர் டுலிட்டிலைச் சந்திக்கவும், அவரது பயண சாகசங்களைக் கண்டுகளிக்கவும் த்ச்யாராகுங்கள்!
ஆண்டனியோ பாண்டிராஸ், மைக்கேல் ஷீன், ஜிம் ப்ரடபெண்ட் மற்றும் பலரும் உடன் நடிக்க ராமி மாலிக், ஜான் செனா, எமா தாம்சன் போன்ற சிலர் தங்களது குரல்வளத்தைச் செல்லப் பிராணிகளுக்காக நல்கியுள்ளனர். டேனி இல்ஃப்மேன் இசையமைக்க, குல்லர்மோ நவாரோ படத்தின் ஒளிப்பதிவினைக் கையாண்டுள்ளார்.