“டபுள் டக்கர்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ஏர் பிளிக் சார்பாக இப்படத்தின் நாயகன் தீரஜ் தயாரிப்பில், மீரா மஹதி இயக்கத்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், MS பாஸ்கர், ஸ்மிருதி வெங்கட், யாஷிகா ஆனந்த், முனிஷ் காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டபுள் டக்கர்”.

தனது சிறுவயதில் தன் தாய் – தந்தையுடன் காரில் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. அதில் அரவிந்தின் தாய் – தந்தை உயிர் இழக்கிறார்கள். அரவிந்த் முகத்தில் ஏற்பட்ட தீக்காயத்தின் தழும்பால் இவனுக்கு தாழ்வு மனப்பான்மையில் மிகவும் தவிக்கிறார்.

அரவிந்த் (தீரஜ்). இதனால் பல சமயங்களில் தன் முகத்தை யார்க்கும் காட்டாமல் இருக்கிறான். இவனுக்கு ஆதரவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கார்த்திக் என்ற சிறுவன் அவனும் தன்னை போல் அனாதை என்பதாலும் அவனது வாழ்க்கை குறைந்த காலம் என்பதால் அவனுடன் நிறைய காலம் முகமூடி அணிந்து செலவழிக்க, அரவிந்தின் தீ காயத்தால் பாதிக்கப்பட்ட முகத்தை நாயகி ஸ்மிருதி வெங்கட் பொருட்படுத்தாமல் சகஜமாக பேசி பழகுவதால் அரவிந்திற்க்கு, பாரு மீது காதல் வருகிறது.

அதை பாருவிடம் சொல்ல முதலில் பாரு மறுக்க பிறகு, அரவிந்த்தின் காதலை பாரு (ஸ்மிருதி வெங்கட்) ஏற்றுக்கொள்ள, அவரின் வீட்டிற்கு வருகிறார். அதேநேரம், ‘காட்’ஸ் ஆர்மி’ என்கிற கடவுளின் உலகத்திலிருந்து வரும் ரைட் (முனீஷ்காந்த்தின் குரல்), லெஃப்ட் (காளி வெங்கட்டின் குரல்) என்ற தேவதை பொம்மைகள் இரண்டும் சேர்ந்து, அரவிந்த்தின் வாழ்நாள் முடிந்துவிட்டதாகத் தவறுதலாக நினைத்து, அவரின் உயிரை எடுத்துவிடுகின்றன. எதிர்பாராதவிதமாக சுனில் ரெட்டி, ஷா ரா குழுவினால் அரவிந்த்தின் சடலமும் காணாமல் போகிறது.

அரவிந்த்தின் உயிரானது, அவரைப் போலவே, அதேநேரம் முகத்தில் தழும்பு இல்லாமல் இருக்கும் ராஜா (தீரஜ்) என்பவரின் உடலுக்குச் செல்கிறது. ராஜாவிற்குள் இருக்கும் அரவிந்த், லெஃப்ட், ரைட் ஆகியோர் சேர்ந்து, தொலைந்த சடலத்தைத் தேடுகிறார்கள்.

அரவிந்தின் பழைய உடல் கிடைத்ததா? கொடூர கொல்லைக்காரன் மன்சூர் அலிகான் ஏன் அரவிந்தை தேடுகிறார்? உடலை திருடிய சுனில் ரெட்டி – ஷா ரா கோஷ்டி உடலை என்ன செய்தார்கள்? அரவிந்த்தின் உயிரானது அவரது உடலில் சேர்ந்ததா அல்லது புது உடலில் ஐக்கியமானதா? ஸ்மிருதி வெங்கட் – அரவிந்த் காதல் கைக்கூடியதா? தவறு செய்த காட்’ஸ் ஆர்மி ரைட் – லெஃப்ட் பரிகாரம் என்ன செய்தது? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

புதுமுக நாயகன் தீரஜ் காதல், டூயட், பந்தா காட்டுவது, காமெடி ஆகிய இடங்களில் நன்றாக ஸ்கோர் செய்து திரையுகிற்க்கு நல்ல வரவு. முக்கியமாக, காமெடி காட்சிகளில் இவரின் உடல்மொழி நன்றாகவே வெளியாகியிருக்கிறது.

மறுபுறம், தாழ்வுமனப்பான்மையில் தவிக்கும் தருணங்களுக்கும் மனதை நெகிழ வைக்கிறார்.. கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அழகோ அழகு ரசிகர்கள் மனதை வசீகரிக்கிறார். நல்ல தரமான நடிப்புத்திறன் நல்ல எதிர்காலம் உள்ளது. முனீஷ்காந்த் மற்றும் காளி வெங்கட்டின் குரல்கள் படத்திற்குப் பெரிய பலம். குரல்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும், அவர்களின் கவுன்ட்டர்களும் படத்திற்கு டபுள் ‘ப்ளஸ்’.

ஷா ரா – சுனில் ரெட்டி கூட்டணி, மன்சூர் அலிகான் – ஜார்ஜ் – டெடி கோகுல் கூட்டணி, கோவை சரளா கூட்டணி, கருணாகரன் – யாஷிகா ஆனந்த் கூட்டணி, எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணி என எக்கச்சக்க காமெடி நடிகர்களுடன் பல முனை காமெடி போட்டி நடக்கிறது. இதில் ஷாரா, சுனில் ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கிடைத்த எல்லா காட்சிகளிலும் சிறப்பாக செய்துள்ளனர். மற்றவர்கள் தங்களது பங்கை நன்றாக செய்துள்ளனர்.

காதல் – ஃபேன்டஸி படத்திற்குத் தேவையானதை அற்புதமாக கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறது. காமெடி காட்சிகளுக்குள் காட்டிய நேர்த்தியையும் கோர்வையையும், மற்ற காட்சிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வெற்றிவேல் ஏ.எஸ். வித்யாசாகரின் இசையில் அனைத்து பாடல்களும் ரசிக்க வைக்கிறது ஆட்டம் போட வைக்கிறது. இதைவிட, பின்னணி இசையில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறார். ரகளையான காட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிலும் தன் பெயரை ஆழமாகப் பதிக்கிறார் இசையமைப்பாளர். கலை இயக்கம் மிக அருமை. கதை ஏற்கனவே வந்த எமனுக்கு எமன், அதிசயபிறவி தழுவல், திரைக்கதை,  வசனம் படத்தின் முதுகெலும்பு. ரைட் – லெஃப்ட் என்று ஃபேண்டஸி காட்சிகள் கொண்டு விறுவிறுவென படத்தை தொய்வில்லாமல் இயக்கிய இயக்குனர் மீரா மஹதிக்கு சபாஷ் போடலாம்.

லாஜிக் மிஸ்ஸிங் ஆனால்,  என்டர்டெயின்மென்ட் கியாரன்டிட். இந்த கோடைவெயில் காலத்தில் நல்ல தரமான பொழுதுபோக்கு படம் “டபுள் டக்கர்”.

Double Tuckerr:

CAST :-

Dheeraj as Aravind

Smurthi venkat as Paaru

Kovai sarala as Inspector Shanmuga valli

MS. Baskar as Bramanantham

Muneesh kanth as Left angel

Kali venkat as Right angel

Sunil reddy as Rocket reddy

Sharra as Murder mani

Karunakaran as Moorthy

Yashika anand as Velvet vennila

George vijay as Madhi

Teddy gokul as Silluvandu

CREW

Written & Directed by – Meera Mahadhi

Music by – Vidya Sagar

Produced by – Air flick

Co-Written & Co-Produced – Chandru

Director of photography – Gautham Rajendran

Film Editor – Vetrivel A.S

Art – Subramaniya suresh

Costume designer – Dr.Vinothini pandian

Lyrics – PA Vijay, Ku Karthik, Super subu

Sound design – Sync cinemas

Sound Mix – A.M Rahmathulla

Choreography – Leelavathi kumar, Santhosh B

Makeup – P S Kuppushamy

Stunt – Danger Mani

Costumes – Nandha

Stills – Balaji

VFX & Animation – Symbiosis Technologies

DI – Baywood Virtual FX

Colorist – Karthik V

Designer – Retrotylerart (Amudhan Priyan ) Praveen kumar MB

Executive Producer – S Sethuramalingam

Production Executive – Chelladurai B

PRO – Nikil Murukan

#doubletuckerrmoviereview #doubletuckerrmovie #doubletuckerrreview #doubletuckerr

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author