“எப்போதும் ராஜா – பாகம் 1” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

கிரீன் சேனல் மூவீஸ் சார்பாக வின் ஸ்டார் விஜய் இரட்டை வேடத்தில் நாயகனாக நடித்து, தயாரித்து & இயக்கி உருவாக்கியுள்ள படம் “எப்போதும் ராஜா – பாகம் 1”.

சினிமா பத்திரிகையாளர், மக்கள் தொடர்பாளர் என பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற வின் ஸ்டார் விஜய், முதல் முறையாக இப்படத்தில் முக்கியப் பொறுப்புகள் ஏற்றுக்கொண்டு தேசிங்கு – ராஜா என்று அண்ணன் – தம்பி கதாப்பாத்திரத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அண்ணன் தேசிங்கு கடமை தவறாத காவல் துறை அதிகாரி, தம்பி ராஜா வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்குபவர். ராஜா தன்னை விரும்பு டெல்பினாவை காதலிக்கிறார்.

தேசிங்கு வேலை மாற்றலாகி மதுரைக்கு இடம் மாறுகிறார். தன் திருமணத்தில் நிச்சயம்,  ஒரு சீர்த்திருத்தம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதே போல் பெண் ஒருவருக்கு திருமணம் மூலமாக வாழ்க்கை தருகிறார்.

அரசியல்வாதிகளால் தேசிங்குக்கு பிரச்சனை, அதே போல் வாலிபால் தேசிய விளையாட்டு போட்டி மூலம் ராஜாவுக்கு எதிர் அணிகள் மூலம் பிரச்சனை. தேசிங்குவை கொலை செய்யவும் திட்டமிடுங்கிறனர்,  ராஜாவை போட்டியில் கலந்து கொள்ள விடாமல் தடுக்க முயற்சி செய்கின்றனர்.

அண்ணன் – தம்பி இருவரும் அவர்களது சவால்களை எப்படி எதிர்கொள்ள நேரிடும் என்பதை வெள்ளித்திரையில் காண்க.

வின் ஸ்டார் விஜய் முதல் முறையாக நடித்திருந்தாலும், அதுவும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தாலும் சிறப்பாகவே செய்துள்ளார். காதல் காட்சி, சண்டைக்காட்சி, நடனம் என அனைத்தும் அருமையாக செய்துள்ளார்.

நாயகிகள் இளமைக்கும், கவர்ச்சிக்கும் குறை வைக்கவில்லை. நடிப்பும் சிறப்பு. வில்லியாக வரும் கும்தாஜ் ரசிகர்களை தனது கவர்ச்சியில் கிறங்கடிக்கிறார். நாயகர்களின் நண்பர்களும், எதிரிகளும் தங்களது ஒத்துழைப்பை நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பெரிய நடிகர்கள் மட்டும் தானா மக்களுக்கு நல்லதையும், அறிவுரையும் கூற வேண்டும் ஏன்? புதுமுக நாயகன் சொல்ல கூடாதா? என விதிவிலக்காக புதுமுக நாயகனின் இரு வேடங்களும் அறிவுரையை அள்ளி தெளிக்கின்றனர்.

பாடல் இசையும் – பின்னணி இசையும் அற்புதம். ஒளிப்பதிவு சிறப்பு. படத்தின் முதுகெலும்பாக படத்தொகுப்பு அமைந்துள்ளது. கையில் உள்ள முதலீட்டில் எந்த அளவுக்கு சிறப்பாக ஒரு படத்தை உருவாக்க முடியுமோ அதை சீரும் சிறப்புமாக செய்துள்ளார் இயக்குனர் H முருகன்.

தான் சம்பாதிக்கும் பணத்தை சிறுக சிறுக சேர்த்து துணிச்சலோடு இப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் அவர்களுக்கு சபாஷ் போடலாம்.

“எப்போதும் ராஜா – பாகம் 1” திரைப்படம் படம் பார்ப்பவரை ரசிக்க வைக்கிறது, சிரிக்க வைக்கிறது. இது போன்ற முயற்சிக்கு திரை ரசிகர்கள் தங்களது மேலான ஆதரவு கொடுக்கும் போது பலபேர் இப்படி உருவாக வழிவகுக்கும்.

எப்போது ராஜா படக் குழுவினர் விபரம் :-

 

நாயகன் -விண் ஸ்டார் விஜய்

நாயகிகள் – டேப்லினா – பிரியா

வில்லி :- கும்தாஜ்

இதர கதாபாத்திரங்கள் :-

நமச்சிவாயம்

சோமசுந்தரம்

லயன் குமார்

ஜெயவேல்

செல்வகுமார்

ஜோ மல்லூரி

வில்லி கேரட்

#eppothumrajamoviereview #eppothumrajamovie #eppothumrajareview #eppothumraja #moviereview #movie #review #fdfs #audience #theatre #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author