“கிளாஸ்மேட்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

முகவை ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக J அங்கையர்கண்ணன் தயாரிப்பில், குட்டிப்புலி சரவணசக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கிளாஸ்மேட்”.

 

டாக்ஸி டிரைவரான நாயகன் அங்கையற்கண்ணனும், அவரது மாமா சரவணசக்தியும் மோசமான குடிகாரர்கள்.. கார் ஒட்டி சம்பாதிக்கும் பணத்தை சரக்குகாக செலவு செய்கிறார் நாயகன் அங்கையற்கண்ணன்.

அவருக்கு கூடவே இருக்கும் அவரது மாமா சரவணசக்தி, மனைவி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் குடித்து ஊதாரியாக வாழ்கிறார். குடிக்கு அடிமையான இவர்களால் இவர்களது குடும்பத்துக்கு மட்டும் இன்றி, பிறர் குடும்பத்துக்கும் ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது.

அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் எப்போதும் மது போதையில் இருக்கும் இவர்கள் அந்த போதையினாலேயே மிகப் பெரிய சிக்கல் ஒன்றில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து மீண்டு வந்தார்களா?, மனம் திருந்தி மது பழக்கத்தை கைவிட்டார்களா? இல்லையா? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

அறிமுக நாயகனாக நடித்திருக்கும் அங்கையற்கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். மதுபோதையில் அவர் செய்யும் ரகளைகள் ரசிக்கும்படி இருக்கிறது.

நாயகனின் மாமவாக நடித்திருக்கும் சரவணசக்தி, வழக்கம் போல் தனது வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் நம்மை சிரிக்க வைக்கிறார்.  சரவணசக்தி தான் இயக்குநர் என்பதால் அவருக்கு எந்தவித தங்குதடையும் இல்லாததால், மனுஷன் இஷ்ட்டத்துக்கு நடித்திருக்கிறார். கலக்கியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரனா, கணவன் என்னதான் குடிக்கு அடிமையாக இருந்தாலும், அவர் மீது அளவுக்கு அதிகமான அன்பை காட்டி உருகுவது அவரது அப்பாவிதனத்தை காட்டுகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்து படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்.

சரவணசக்திக்கு மனைவியாக நடித்திருக்கும் நடிகையும், குடிகாரர்களை குணப்படுத்த வந்துவிட்டு அவர்களை விட பெரிய குடிகாரராகும் டி.எம்.கார்த்திக், துபாயில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிராமத்துக்கு வந்தாலும், கோட் சூட்டுடன் வலம் வரும் சாம்ஸ், மயில்சாமியின் மகளாக நடித்திருக்கும் அபி நக்‌ஷத்ரா, மயில்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

பிரித்வி இசையில், சீர்காழி சிற்பி வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஆட்டமும், தாளமும் போட வைக்கிறது. பின்னணி இசையும் அற்புதம். அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு மிக நேர்த்தி.

மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களை சீரழித்துக் கொள்வதோடு, தங்களை சார்ந்திருப்பவர்களையும் எப்படி சீரழிக்கிறார்கள், என்று பாடம் எடுத்திருக்கும் இயக்குநர் சரவணசக்தி, அதை நகைச்சுவையாகவும், ரகளையாகவும் சொல்லி ரசிக்க வைத்துள்ளார். படம் முழுவதும் குடி என்று காட்டுவது படத்தை மிகவும் அழுத்தமாக காட்டுகிறது.

படத்தின் மையக்கருவுக்காக குடிப் போதையின் கொடுமையை அழகாக சொல்லிய இயக்குநர் ஷரவணசக்தியை மனதார பாராட்டுவது போல், படத்தில் இடம்பெறும் பல வசனங்களுக்காகவும் பாராட்டலாம். குறிப்பாக, கிளைமாக்ஸ் நெருங்கும் போது, அபி நக்‌ஷத்ரா கதாபாத்திரம் மூலம் அவர் சொல்லியிருக்கும் விஷயம் எதிர்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, குடிநோயாளிகளுக்கான மரண அடியாகவும் இருக்கிறது.

நல்ல தரமான சமூகநல செய்தியை ஜனரஞ்சகமான முறையில் நகைச்சுவை கலந்து ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார் இயக்குனர்.

“Glassmates” cast and crew :-

 

Production Company: Mughavai Films International

 

Produced by : J.Angaiyarkannan

 

CAST: Angaiyarkannan, Brana, Kuttypuli Sharavana shakthi, Mayilsamy, Tm karthik, Chaams, MP Muthupandi, Abi Nakshatra, Arul doss, Meenal, SR Jangid IPS & others

 

CREW:

Written & Directed by : Kuttypuli Sharavana Shakthi

Co Director : J.Angaiyarkannan, Rathnakumar

Producer : J.Angaiyarkannan

Co Producer : Kalaivani Kannan

Executive Producer : Harnish.A.K

Banner : Mughavai Films International

DOP : Arunkumar Selvaraj

Editor : M.S.Selvam

Additional Editor : R.Rajavarman

Art Director : Jai

Music Director : Prithivy

Lyrics : Seerkali Sirpi

Choreographer : Santhosh

Costume Designer : V.Muthu.Mstk

Stunt : Ramkumar

SFX : Kannan

Sound Design : C.A.Mydeen (Mighty Studio)

PRO : Sathish (AIM)

Stills : Siva

Makeup : G.Ragavan Rahul

Publicity Designs : Prashanth Joseph

Social Media Creatives : Alpha Studios

DI & VFX : Sri Kalasa Studios

Colorist : Raghuraman

VFX : Narreshkumar Babu

#glassmatemoviereview #glassmatemovie #glassmatereview #glassmate #movie #ரெவ் #moviereview #tamilmoviereview #fdfs #audience #theatre #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author